குறிச்சொற்கள் சலன்

குறிச்சொல்: சலன்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53

பார்பாரிகன் சொன்னான்: விந்தையான தனிமைகளால் மானுடர் நோயுறுகிறார்கள். தனிமைநோய் ஒரு பருவடிவ ஆளுமைபோல் உடனிருக்கிறது. உள்ளமும், உணர்வுகளும், எண்ணங்களும், அவற்றை இயற்றும் புலன்களும் கொண்டதாக. அதிலிருந்து தப்ப இயல்வதில்லை. அதனுடன் உரையாட முடியும்....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 32

அவையில் மீண்டும் ஓசை அடங்கத் தொடங்கியிருந்தது. கதவை திறப்பதற்கு முன் உள்ளே ஓசைகொந்தளிக்கும் அவை இருப்பதாக எண்ணியிருந்தமையால் திறந்ததும் வந்தறைந்த ஓசையின்மை திகைப்பூட்டியது. சூழ நோக்கியபடி பூரிசிரவஸ் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30

பூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்”...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27

அரசப்பேரவை முன்னரே நிரம்பத் தொடங்கியிருந்தது. ஷத்ரிய அரசர்கள் இளைய கௌரவர்களாலும் சிற்றரசர்கள் உபகௌரவர்களாலும், சிற்றமைச்சர்களாலும் அவைமுகப்பில் தேரிறங்கும்போதே எதிர்கொண்டு வரவேற்கப்பட்டு அவைக்கு கொண்டுசென்று அமர்த்தப்பட்டனர். பூரிசிரவஸ் அவைமுகப்பில் நின்றுகொண்டு அங்கே அமர்ந்திருக்கும் அரசர்களை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25

அஸ்தினபுரியை அணுகுவதற்குள்ளாகவே பால்ஹிகபுரியின் படைப்பிரிவுகள் சலன் தலைமையில் அஸ்தினபுரியை சென்றடைந்துவிட்டிருந்தன. சோமதத்தரும் உடன்சென்றார். பால்ஹிகபுரியின் பொறுப்பை பூரியிடம் அளித்துவிட்டு பூரிசிரவஸும் கிளம்பினான். அஸ்தினபுரியிலிருந்து தனக்கு வந்த ஆணையின்படி அவன் வாரணவதத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24

பால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16

பால்ஹிகநகரியின் தெருக்கள் மிகக் குறுகியவையாக இருந்தன. ஒரு தேர் ஒரு திசைக்கு செல்லத்தக்கவை. அந்நகரை பூரிசிரவஸ் புதுப்பித்து அமைக்கும்போது கிழக்குக்கோட்டையிலிருந்து அரண்மனை வரைக்கும் நேராகச் செல்லும் நான்கு தேர்ப்பாதைகள் கொண்ட பெருஞ்சாலை ஒன்றை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15

பூரிசிரவஸ் அஸ்தினபுரியிலிருந்து அரசரின் ஆணையை பெற்றுக்கொண்டு எல்லைக் காவலரண்கள் அனைத்திற்கும் சென்று படைநிலைகளை பார்வையிட்டு தன் அறிக்கையை பறவைத்தூதினூடாக அனுப்பிவிட்டு பால்ஹிகபுரிக்கு வந்தான். அஸ்தினபுரியிலிருந்த அந்த மாதங்களில் அவன் பால்ஹிகபுரியை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தான்....

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19

  சகஸ்ரகவசன் இரவும் பகலும் கவசங்களுடன் இருந்தான். அசுரர்களுக்கு உடலில் வியர்வையும் கெடுமணமும் எழுவதில்லை என்பதனால் அவர்கள் நீராடுவதில்லை. எனவே ஆயிரம் கவசங்களை அவன் அகற்ற நேரிட்டதே இல்லை. அவையமர்கையில் கவசங்களுக்குமேல் அரசனுக்குரிய பட்டாடைகளை...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63

பகுதி 13 - பகடையின் எண்கள் - 4 மத்ரநாட்டுக்கு பூரிசிரவஸ் அறியா இளமையில் ஒருமுறை வந்திருந்தான். அன்று வந்த ஒரு நினைவும் நெஞ்சில் எஞ்சியிருக்கவில்லை. அன்னையுடனும் அரண்மனைப்பெண்களுடனும் அரசமுறைப்பயணமாக மலைப்பாதை வழியாக மூடுவண்டிகளில்...