சென்ற ஆண்டு பொங்கல் தினத்தன்று இலக்கிய வாசகரான ஒரு நண்பருடன் தஞ்சைப் பிராந்தியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேச்சு பின் தொடரும் நிழலின் குரல் நாவலை நோக்கித் திரும்பியது. கட்சித் தேர்தலுக்கு முன் நிகழும் கொடியேற்ற நிகழ்வில் கே.கே.எம்-மை கொடியேற்றச் சொல்வார்கள். ஏற்றுவார். பேசக் கூறுவார்கள். அவர் புரியாமல் ‘’என்ன பேச’’ என்பார். ‘’கொடியேத்தியிருக்கீங்க தோழர். பேசுங்க’’ என்பார்கள். ‘’பன்னிமலை எஸ்டேட்-னு ஒரு இடம்’’ என்று தொடங்குவார் கே.கே.எம். அந்தப் பகுதியை கிட்டத்தட்ட வரிவரியாக மனப்பாடமாகச் …
Tag Archive: பின் தொடரும் நிழலின் குரல்
Permanent link to this article: https://jeyamohan.in/117766
பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்
விஷ்ணுபுரம் வாசித்து முடித்ததும் அடைந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளை கடிதம் மூலம் வெளிப்படுத்தலாம் என்று எண்ணி இருந்தேன், ஆனால் விஷ்ணுபுரம் வாசகர் விவாதங்களைப் படித்ததும் அங்கு நான் பதிவு செய்ய ஏதும் இல்லை என்ற வெறுமையில் கடிதம் எழுதாமல் கடத்திவிட்டேன். பின் தொடரும் நிழலின் குரல் வாசித்ததும் நம் வாசகர் விவாதங்களை அலசாமல் கடிதம் எழுதிவிட்டேன், இல்லை என்றால் இதற்கும் தைரியம் வந்திருக்காது என்று நினைக்கிறன். தங்கள் வாசகப் பரப்பில் உள்ள வாசகர்களை பல படிநிலைகளாக எடுத்துக்கொண்டால், …
Permanent link to this article: https://jeyamohan.in/93582
ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்
எண்ணற்ற பலிகளைக் கேட்கும் கொலைத்தெய்வம் போல. நாக்கு நீட்டி நின்றதோ! புகாரின், வீரபத்ரபிள்ளை, அருணாசலம். இவர்களின் நிழல்களின் கேள்விகளுக்கு. அபத்தம் ஆம் மகத்தான கேள்விகளுக்கான எளிய பதில்கள். பகல் கனவுகளின் பதில்களோ!. தஸ்தாவெய்ஸ்கியும், தல்ஸ்தோயும் சொன்னது. இல்லை. நிச்சயம், இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. புகாரினை அழைத்தது லிஸ்ஸிதானே. நம் மனிதகுமாரனின் பதிலாக தேவனின் சொர்க்க ராஜ்ஜியம் குழந்தைகளுக்கானதுதானே. இன்னும் நிழல் துரத்துகிறதே. பதில்கள் எதுவும் சொல்ல முடியாது மர்மமாய் நகர்கின்ற வாழ்வின் நுணுக்கங்களை என்னவென்று சொல்ல. …
Permanent link to this article: https://jeyamohan.in/92679
பின் தொடரும் நிழலின் குரல் – அறம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வெகுசமீபமாக தங்களின் பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்தேன். உங்கள் படைப்புகளில் நான் வாசிக்கும் இரண்டாவது படைப்பு இது. முதலாவதாக நான் வாசித்த அறம் என்னுள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறையாத பாதிப்புடனே பின் தொடரும் நிழலின் குரலையும் வாசித்து முடித்தேன். என்னளவில் ஒரு சிறந்த நாவல்\சிறுகதை\கதை என்பது முழுகவனம் செழுத்தி வாசிக்க விடாமல் வாசிக்கும் வரியை பற்றிய சிந்தனை உலகில் ஏகியவாறும், அதே நேரம் அடுத்த வரியை …
Permanent link to this article: https://jeyamohan.in/87590
புதுயுக நாவல்
ஜெ பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்து இப்போதுதான் முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்கும்போது மெல்லிதாக தோன்றியது. பின்பு வெண்முரசு நாவல்தொடர் வாசிக்கும்போதும் தோன்றியது. [கொற்றவை இன்னும் வாசிக்கவில்லை] இந்நாவல்கள் எல்லாமே சிதறிக்கிடக்கின்றன. ஒரு மையத்தொடர்ச்சியை நாமேதான் கொஞ்சம் கஷ்டப்பட்டு உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. விஷ்ணுபுரமும் வெண்முரசுநாவல்களும் அவற்றின் மைத்தாலஜிக்கல் பின்னணி காரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலைக் கையாள்வதனால் அது ஒரு ஒருமையை உருவாக்குவதுபோலத் தோன்றுகிறது, உண்மையில் அப்படி இல்லை. சொல்லப்போனால் உங்கள் நாவலின் ஒரு பகுதி இன்னொரு …
Permanent link to this article: https://jeyamohan.in/85653
என்னை வாசிக்கத் தொடங்குதல்
அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …
Permanent link to this article: https://jeyamohan.in/80644
வாசிப்பு – இருகடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன். ‘படிச்சாச்சு’ …
Permanent link to this article: https://jeyamohan.in/77875
மின்தமிழ் பேட்டி -1
[சி சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மின்தமிழ் இதழில் வெளியான பேட்டி] 1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா? பதில். எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தேதான். என் …
Permanent link to this article: https://jeyamohan.in/69816
வரலாறும் இலக்கியமும்
அன்புள்ள ஜெ சார், புனைவெழுத்தாளனை வரலாற்றாசிரியனாக காணக் கூடாது என்கிற உங்களது வரி சற்று ஆச்சரியமளிக்கிறது. காலம், வெளி ஆகியவற்றின் தடைகளை மீறி மற்ற வாழ்க்கைகள் எப்படி இருந்திருக்கும், அம்மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்றறிய எம் போன்ற வாசகர்களுக்கு இருப்பது சீரிய இலக்கியம் மட்டும் தானே. உதாரணமாக நான் தமிழ் சினிமா பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், உண்மையில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று என்றுமே தமிழ் திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாதென்று. அது …
Permanent link to this article: https://jeyamohan.in/71324
துணை இணையதளங்கள்
விஷ்ணுபுரம் இணையதளம் [விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு] வெண்முரசு விவாதங்கள் இணையதளம் கொற்றவை விவாதங்கள் இணையதளம் பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம் பனிமனிதன் இணையதளம் காடு இணையதளம் ஏழாம் உலகம் இணையதளம் அறம் இணையதளம் வெள்ளையானை இணையதளம் இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம் நண்பர்களால் நடத்தப்படுகிறது. விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன. காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது …
Permanent link to this article: https://jeyamohan.in/63054