Tag Archive: சூக்திமதி

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 55

[ 22 ] சபரி சரிந்துவிட்டது என்ற செய்தி சுருதகீர்த்திக்கு அவள் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று அரசமுறைப் பூசெய்கைகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது வந்தது. அவள் புருவத்தை சற்றே சுருக்கி எந்த உணர்வும் இல்லாமல் “என்ன செய்கிறது?” என்றாள். “காலையில் ஏதோ எண்ணியதுபோல கிளம்பிச்சென்றிருக்கிறது. பத்தடி தொலைவில் சரிந்துவிழுந்திருக்கிறது. வயிற்றுக்குள் குடல்கள் நிலைபிறழ்ந்துவிட்டன. உயிர்பிழைப்பது அரிது என்கிறார்கள்” என்றாள் சேடி. அவள் தலையசைத்துவிட்டு நடந்தாள். சற்றுநேரத்திலேயே சபரியை முழுமையாக மறக்கமுடிந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தபோது உணர்ந்து வியந்தாள். அதன் ஒலி …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87809

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54

[ 20 ] வழக்கமான கனவுடன் சுருதகீர்த்தி விழித்துக்கொண்டாள். நெடுந்தொலைவிலென ஒரு யானையின் பிளிறலை கேட்டாள். அது ஒரு மன்றாட்டுக்குரலென ஒலித்தது. கோட்டையின் மேற்குப் பக்கமிருந்த கொட்டிலில் இருந்து முதிய பிடியானையாகிய சபரி பிளிறுகிறது என்று மேலும் விழிப்புகொண்ட பின்னரே அவள் சித்தம் அறிந்தது. நெடுநாட்களாகவே அது நோயுற்றிருந்தது. முதுமை உலர்ந்த சேற்றிலிருந்து புதைந்து மட்கிய மரத்தடிகள் எழுந்து வருவதுபோல அதன் உடலில் எலும்புகள் புடைத்தெழச்செய்தது. கன்ன எலும்புகள் எழுந்தபோது முகத்தில் இரு ஆழமான குழிகள் விழுந்தன. நெற்றிக்குவைகள் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87782

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 53

[ 17 ] சூக்திமதியின் அரண்மனை மகளிரறையில் நடந்த தொடர் குடியமைவுச் சடங்குகளிலும், மங்கலநிகழ்வுகளிலும் சேதிநாட்டுக் குடித்தலைவர்களின் துணைவியரும், வணிகர்களின் மனைவியரும், மூதன்னையரும் புதிய அரசியை வந்து பார்த்து வணங்கி பரிசில் கொடுத்து மீண்டனர். அந்நிகழ்வுகளில் தான் இருந்த கூடத்திலும் உள்ளறையிலும் எங்கும் உடனிருந்த விசிரையை கண்டதாகவே பத்ரை காட்டிக்கொள்ளவில்லை. அந்த முழுமையான புறக்கணிப்பே அவள் விசிரையை உள்ளூர எத்துணை பொருட்படுத்துகிறாள் என்பதை அனைவருக்கும் காட்ட சேடியரும் செவிலியரும் விழிகளுக்குள் நோக்கிக் கொண்டனர். அவள் தன்னை புறக்கணிப்பதை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87798

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 52

[ 16 ] எதிர்பார்த்தது போலவே விசால நாட்டு மன்னர் சமுத்ரசேனரிடமிருந்து தமகோஷர் அனுப்பிய மணத்தூதை மறுத்து ஓலை வந்தது. தமகோஷர் தன் அவையில் அமர்ந்து தூதன் கொண்டுவந்த அந்த ஓலையை ஓலைநாயகத்திடமிருந்து வாங்கி மும்முறை சொல்கூர்ந்து வாசித்தபின் இதழ்கோட புன்னகைத்து அருகிலிருந்த அமைச்சரிடம் அளித்தார். குலமுறை கிளத்தல்களுக்கும் முறைமைச் சொற்களுக்கும் நலம் உசாவல்களுக்கும் பின்னர் தன் மகள் பத்ரைக்கு மாளவம், வங்கம் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் மணவிழைவுச் செய்திகள் வந்திருப்பதாகவும், தூயகுருதி கொண்ட ஷத்ரியர்களை மறுத்து …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87796

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51

[ 14 ] யாதவக் குலமகளை அவள் விழைவிற்கு மாறாகக் கவர்ந்து கருகுமணித்தாலியை அறுத்தெறிந்து கவர்ந்துசென்ற சிசுபாலனின் செயல் யாதவக்குடிகளை நடுங்கச்செய்தது. அதுவரைக்கும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை. துவாரகைக்கு யாதவர்களின் குடித்தலைவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துசேர்ந்தனர். பிரக்ஜ்யோதிஷ நாட்டுக்கு கரவுருவாடலுக்குச் சென்றிருந்த இளைய யாதவருக்காக அவர்கள் காத்திருந்தனர். பலராமர் “அவனுக்காக காத்திருக்கவேண்டியதில்லை. யாதவரே, என் தோள்களுக்கு அவ்விழிமகன் நிகரல்ல. அவன் தலையை நான் உடைக்கிறேன்” என்று சூளுரைத்தார். அக்ரூரர் “எளிய முடிவல்ல இது. எதையெண்ணி அவன் இதைச்செய்தான் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87756

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 50

[ 12 ] தமகோஷரின் அரண்மனையிலிருந்து வெளிவந்தபோது புரவியிலேறி சூக்திமதியின் எல்லையைக் கடந்து முழுவிரைவில் அறியாதிசை ஒன்றுக்கு பாய்ந்தகன்று சென்றுவிட வேண்டுமென்றுதான் சிசுபாலன் எண்ணினான். ஆனால் உடல்சுமந்து தளர்ந்த காலடிகளுடன் முற்றத்தில் அவன் இறங்கியபோது ஓடிவந்து வணங்கிய தேர்ச்சூதனிடம் சொல்லெழுப்பி ஆணையிடும் உளவிசை அவனிடம் இருக்கவில்லை. புரவியை கொண்டு வரும்படி கையசைத்துவிட்டு காற்றில் சரிந்த தன் தலைமயிரை நீவி காதுக்குப் பின்னால் வைத்தான். அது மீண்டும் சரிய சலிப்புடன் கையை தாழ்த்தினான். அவன் ஆணையை பிழையாகப் புரிந்துகொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87748

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49

[ 10 ] உபாசனையால் வெறியாட்டெழுந்த இருட்தெய்வம் ஒன்றை தன் மேல் ஏற்றிக் கொண்டவன் போல சிசுபாலன் புரவியிலேயே சேதி நாட்டை வந்தடைந்தான். வேத்ராவதியில் தேன் நிறத்தில் வெள்ளம் பெருகிச்சென்றுகொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான ஓடைகள் சிற்றருவிகளாக வேத்ராவதிக்குள் விழுந்த ஓசையை கேட்டபடி நதிக்கரை மேட்டில் அமைந்த சாலையில் அவை தன் புரவியின் குளம்போசை சூழ்ந்து துரத்திவர விரைந்தான். சூக்திமதியின் கோட்டைக்காவலர்கூட முதலில் அவனை அடையாளம் காணவில்லை. புரவியில் இருந்தபடியே அவன் உரக்க “வாயிலை திறவுங்கள்” என்று ஆணையிட்டபோது “யார் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87711