Tag Archive: அரசியல்

வாழும் தமிழ்

  க்க்காங்….ரீங்ங்ங்ங்ங்…..பேரன்பிற்கும் … ஓக்கே…. பேரன்பிற்கும், வணக்கத்திற்குமுரிய மீனாட்சிபுரம் நகர் வாழ் எனதருமை பொதுமக்களே, இங்கே இன்றைய தினம் இந்த அருமையான மாலை நேரத்திலே எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் அன்பான ஆணையினை ஏற்று இன்றைய தினம் இங்கே இந்த அருமையான மாலை நேரத்திலே அருமையானதொரு பொதுக்கூட்டத்தினைக் கூட்டி எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் கொடியினை ஏற்றும் பொருட்டு இன்றைய தினம் இங்கே கூடியுள்ள அருமைத்தலைவர் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/236

இரு காந்திகள்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை. கீழத்தஞ்சைப்பகுதியின் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/722

வரலாற்றின் வண்டலில்…

  ஒரு நிலப்பிரபு தன் நான்கு பிள்ளைகளை பெண் வாசனையே படாமல் வளர்க்கிறார். அதில் இளையவன் காதல்வயப்படுகிறான். எந்த குடும்பத்தின் மீதான பகை காரணமாக அவர் அப்படி இருக்கிறாரோ அந்த குடும்பத்துப்பெண்ணையே காதலிக்கிறான். பின்னர் வழக்கமான திருப்பங்கள். நகைச்சுவைகள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவந்த ‘காட்·பாதர்’ என்ற அந்ந்த மலையாளத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்கலாம். அதில் அஞ்ஞூறான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த முதியவருக்கு அப்போது 74 வயது. அவர் நடித்த கடைசிப்படமாக அது இருந்ததில் ஆச்சரியமில்லை. அவரது மகன் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/1196

வெறுப்புடன் உரையாடுதல்

  அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம். தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/2760

அரசியல் கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன், உங்களது ‘ஏஷியா நெட்’ பேட்டியில் இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். முதலாவது ‘பாடி லாங்குவேஜ் (body language)’. மலையாளிகளுக்கென்று தனித்துவமான உடல் மொழி இருக்கிறது. சக மலையாளிகளிடம் சம்சாரிக்கும் போது அந்த உடல்மொழி அவர்களிடம் தூக்கலாக இருப்பதனைக் கவனித்திருக்கிறேன். உங்களிடம் அந்த உடல்மொழி மிஸ்ஸிங். இரண்டாவது உச்சரிப்பு. உங்களின் மலையாள உச்சரிப்பு ஏறக்குறைய தமிழைப் போல இருந்ததாக என்னுடைய தனிப்பட்ட எண்ணம். மூக்கின் உபயோகம் குறைந்தது தமிழில் புகுந்து விளையாடி கஸரத் எடுத்ததன் காரணமாக …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87969

திருமா

சமீபத்தில்  தமிழக அரசியல்ச் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது. மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு நீள்கட்டுரை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/87827

கவிதையின் அரசியல்– தேவதேவன்

    எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/240

கூட்டமோ கூட்டம்

‘’என்னா சார் போங்க…எலக்சன் வருதுல்ல…வேல பெண்டு நிமிருது… காலமடக்கி உக்கார நேரமில்லேன்னா பாத்துக்கிடுங்க… ஆனால் கட்சிவேலைன்னா அது எலக்சனிலதானே, ஏங்க? அதைப்பாத்தா போருமா? நம்ம சோறுல்ல?’’

Permanent link to this article: https://jeyamohan.in/7755

அரசியல்சரிநிலைகள்

  தன் நெஞ்சறியும் உண்மையைச்சொல்லத்துணியும் ஓர் எழுத்தாளன் அல்லது அரசியலாளன் எப்போதுமே இங்கு எல்லா தரப்பினருக்கும் எதிராக ஆகிறான். அவனால் முழுமையாக எந்தத் தரப்புடனும் சேர்ந்து நிற்க முடிவதில்லை.  ஒவ்வொருவரும் அவனை தங்கள் எதிரிகளின் தரப்பிலேயே சேர்க்க முயல்கிறார்கள். ஒவ்வொருமுறை அவன் கருத்து சொல்லும்போதும் அக்கருத்துக்கள் திரிக்கப்படுகின்றன. ‘நான் சொல்லவந்தது அதுவல்ல’ என்றுதான் அவன் ஒவ்வொரு நாளும் கூக்குரலிடவேண்டியிருக்கிறது. காரணம், ஓர் அரசியல்சூழலில் ஆட்சிசெய்யும் ‘அரசியல் சரிநிலை’கள்தான். ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பது நவீன ஜனநாயகச்சூழலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/1330

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

தமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/601

Older posts «