Monthly Archive: March 2019

மீண்டும் ஒரு தனிமை

  வெண்முரசின் ஒவ்வொரு நாவல் முடியும்போதும் வந்து சூழ்ந்துகொள்ளும் தனிமை ஒன்றுண்டு. நாவலை எழுதும்போது அடுத்தநாளைக்கான கதை, அதற்கான அகத்தேடல் மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்தமாக நான் நாவல்களைப் பார்ப்பதில்லை. ஆனால் எழுதி முடித்ததும் ஒரே அலையாக வந்து நாவல் நம் மேல் மோதி நிலையழியச் செய்கிறது. இறப்புகள், வாழ்க்கையின் பொருள் அனைத்தையும் பொருளின்மையாக ஆக்கும் காலத்தின் விரிவு.   அதிலிருந்து மீண்டு அடுத்த நாவலுக்கு, அடுத்த காலகட்டத்திற்குச் செல்ல சற்றுநேரமாகும். அது ஒரு பெருந்தத்தளிப்பு. எழுதுவதன்மேலேயே நம்பிக்கை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119546

நீர் நெருப்பு – ஒரு பயணம்

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு கடந்த வியாழன் மாலை அன்று நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு புத்தகம் அச்சாகி கைவர பெற்றோம்.அத்தனை உள மகிழ்வுடன் அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு மறுநாள் அதிகாலை கங்கையினை நோக்கிய எங்கள் பயணத்தை துவங்கினோம்.மனதில் இனம் புரியாத பதட்டமும் சந்தோசமும்  ஒரு சேர கலந்து இருந்தது.   17 நண்பர்களில் அறுதிப் பெரும்பான்மையோருக்கு  இது முதல் வடஇந்திய பயணம் மேலும் இதுவே முதல் விமானப்பயணமும் கூட.காத்திருந்தது எங்களுக்கான பரிசு சென்னை விமான நிலையத்திலே …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119486

அனோஜனின் யானை – கடிதங்கள்-2

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை   ஒரு குழந்தையிடம் கனவுகள் முளைவிடத் தொடங்கும் தருணத்தில் தொடங்கி அவன் மத்திம வயது  வருவது வரையான கால கட்டமும் ஈழத்தில் போர் மேகங்கள் சூழ தொடங்கியது முதல் இறுதி போர் வரையிலான காலகட்டமும் பிரமாதமாக முயங்கி வருகிறது இக்கதையில்.சுயந்தன் குழந்தையாய் ,சிறுவனாய் ,வாலிபனாய்,வளர்ந்து வரும் தருணங்களை கதை போக்கிலேயே காட்சிப்படுத்தி இருந்த விதம் அபாரம்.ஒரு குடும்பம் சிதைவதின் குறுக்கு வெட்டு வரலாறு இக்கதை.சுயந்தனின் தமையனோடு கைது செய்யப்பட்டு காணாமல் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119443

சகடம் – சிறுகதை விவாதம்-1

ஒரு சிறுகதை விவாதம் அன்புள்ள ஜெயமோகன், ஒரு சிறுகதையை வாசித்து முடித்தவுடன் எழும் முதல் உணர்வை வைத்தே அது சிறந்த படைப்பா இல்லையா என முடிவு செய்கிறோம். ஆம் என்றால் மேலும் உட்சென்று நம்மை அசைத்த கூறுகளை அடையாளம் காண்கிறோம். அக்கூறுகளைக் கொண்டு மேலுமொருமுறை அதை ஓட்டி மனதில் ஒரு இடமொதிக்கி அதை நிரந்தரம் கொள்ளச் செய்கிறோம். இல்லையென்றால் முன்பை விட இருமுறை கவனமாக திரும்பிப் பார்த்து அதில் நம்மை ஒட்டவைத்துக் கொள்ளும் அம்சம் தென்படுகிறதாவென மீண்டுமீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119457

கற்றலெனும் உலகம்: பத்மநாப ஜைனி!

(மூலம்: இராமச்சந்திர குஹா. தமிழில்: பாலா) 1998 ஆம் ஆண்டு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், பயிற்றுவித்துக் கொண்டிருந்த காலத்தில், என்னை விட மூத்த, பலமடங்கு கற்றறிந்த அறிஞர் ஒருவரின் நட்பை ஈட்டிக் கொண்டேன். அவர் பெயர் பத்மநாப ஜைனி. பௌத்த மற்றும் சமண மதத் துறைகளில் பெரும் அறிஞர். அரை டஜன் மொழிகளில் அவை பற்றிய முக்கிய நூல்களை ஆழ்ந்து கற்றவர். மென்மையானவர். குறைவாகப் பேசுபவர். வாதப் பிரதிவாதங்களை விட, சிந்தனையையும், பிரதிபலிப்பையும் முன்வைப்பவர். எதிரெதிர்த் துருவங்கள், ஒன்றினை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119417

யானை – கடிதங்கள்

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழினியில் வெளிவந்த அனோஜனின் “யானை’  ஈழத்தமிழ் படைப்புலக சூழலில் முற்றிலும் வித்தியாசமாக வெளிவந்திருக்கும் கதை என்பது எனது கணிப்பு. கதை குறித்த எனது முகநூல் பதிவை இங்கு தருகிறேன்.  யானை – அனோஜன் தமிழினியின் இம்மாதப்பதிப்பில் வெளிவந்திருக்கும் “யானை” என்ற அனோஜனின் சிறுகதை சமகால இலக்கிய பிரதிகளில் மிக முக்கியமானதொன்று. இந்த கதை இரண்டு கோணங்களில் பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டியதாக கருதுகிறேன். ஒன்று, கதை மையம் சார்ந்தது. மற்றையது அனோஜனின் இலக்கியப்பார்வை சார்ந்தது. “யானை” …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119372

படைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்

படைப்பு முகமும் பாலியல் முகமும் அன்புள்ள ஜெ அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? நேற்று உங்கள் தளத்தில் எஸ் என்ற இளைஞர் எழுதிய கடிதத்தை வாசித்தேன். என்ன ஒரு நடை. மொழிக்கூர்மை, புனைவுணர்வுள்ள கூறுமுறை, கச்சிதமான ஒழுக்கில் ஒன்றின்பின் ஒன்றென விழுந்த சொற்றொடர்கள், அனைத்துக்கும் மேலாக அக்கடிதம் வழியாக தெள்ளத்தெளிவாக கூடி வந்த தனி ஆளுமை. ஒரு புனைவெழுத்தாளருக்குறியதென இருந்தது. ‘இலக்கியம் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுக்கவில்லை, வாழ்வதற்கான ஆசைய கொடுத்தது,’ என்கிறார். இலக்கியத்துக்கும் வாழ்க்கைகுமான உறவை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119366

குரு நித்யா காவிய முகாம் 2019 – உதகை – அறிவிப்பு

1993 முதல் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது குரு நித்யா காவிய முகாம். குரு நித்ய சைதன்ய யதி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் தமிழ்க் கவிஞர்களை சந்திக்க விழைந்தமையால் நான் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் துணையுடன் அதை ஒருங்கமைத்தேன். அவர் நிறைவுற்ற பின்னர் குரு நித்யா காவிய முகாம் என்ற பேரில் தொடர்ந்தோம். அன்று முதல் நிர்மால்யா இதன் அமைப்பாளர். ஐந்தாண்டுகள் தமிழ், மலையாளக் கவிதைப் பரிமாற்ற அரங்காக இது நிகழ்ந்தது. 2010 முதல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சார்பில் நிகழ்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/108122

ஒரு சிறுகதை விவாதம்

நாகப்பிரகாஷ் இக்கடிதத்தையும் உடனிருக்கும் கதையையும் அனுப்பியிருந்தார். வாசகர்கள், நண்பர்கள் தங்கள் விமர்சனங்களை, ஆய்வை எழுதலாம். மீண்டும் ஒரு கதை விவாதம் நிகழ உதவியாக இருக்கும் ஜெ ஜெ, இது என்னுடைய ஏழாவது சிறுகதை. ஆனால் இதுவும் நண்பர்கள் அனைவராலும், எழுதுகிறவர்களாலும் நிராகரிக்கப்பட்டது. தெளிவாக இல்லை, பெரும்பாலானவர்களுக்குப் புரியாது. எதுவுமே புதிதாக இல்லை. இனி வேறு எப்படிச் சிறுகதை எழுத என்று எழுதியதெல்லாம் மூட்டை கட்டி ஓரம் வைத்துவிட்டுப் படிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் என் எழுத்தில் என்னதான் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119353

இரவு – திறனாய்வு

அன்புள்ள ஜெயமோகன் சார், இரவு நாவலை உங்களின் தளத்தில் வாசித்தேன்.விஷ்ணுபுரம், வெண்முரசு போல் இல்லாமல் நிகழ்காலத்தில் கதை நடக்கிறது. நீலியையும் இரவு வாழ்க்கையையும்,தவிர மீதி நாம் தினமும் சந்திப்பது,கேள்விபட்டதுதான்.ஆனால் அந்த சம்பவங்களின் மூலம் கிடைக்கும் தரிசனங்கள்,சாக்த தத்துவங்கள், நாம் உக்கிரமாக சந்திக்கும் தருணங்கள் எப்படி வாழ்க்கையை செதுக்குகிறது?,அதை எப்படி அந்த கணத்தில் சந்திக்கிறோம்,அதன் பொருள் என்ன என்பது எல்லாம் மிகவும் புதியது. இப்படியாக பட்ட தருணங்களை சந்திப்பவனின் மனவோட்டங்களை அப்பட்டமாக வெளிபடுத்துகிறீர்கள்.முதல் கவிதையிலே கூறிவிடுகிறீர்கள் இரவு…இயந்திரங்கள்,கணக்கு வழக்குகள், …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119356

Older posts «