Daily Archive: February 20, 2019

நாகர்கோயில் புத்தகக் கண்காட்சி

  நாகர்கோயிலில் சென்ற பிப்ரவரி 15 முதல் புத்தகக் கண்காட்சி நடந்துவருகிறது. நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள். மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பாதலால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை, நற்றிணை,தமிழினி போன்ற இலக்கியப் பதிப்பகங்கள் அனைத்தும் பங்கெடுத்திருக்கின்றன இன்று [ 20 ஆம் தேதி மாலை ] நானும் நாஞ்சில் நாடனும் பேசுகிறோம். நான் இன்றைய இலக்கிய ஆக்கங்கள் என்னும் பொதுத்தலைப்பில் பேசுகிறேன்  Kind

Permanent link to this article: https://jeyamohan.in/118375

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு நிகழ்ச்சிக்காகச் செல்லவிருந்தபோதுதான் நண்பர் ராஜமாணிக்கத்தின் தந்தை மறைந்த செய்தி தெரியவந்தது. காந்தியவாதியும், தமிழக சர்வோதய இயக்கத்தின் மாநிலப்பொறுப்பில் பத்தாண்டு இருந்தவர். வினோபாவின் நூற்றாண்டுவிழாவின்போது ஓராண்டுக்காலம் நடந்தே தமிழகத்தைச் சுற்றிவந்தவர். சிலமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். 15 ஆம்தேதி நாகர்கோயிலில் இருந்து கிளம்பி அதிகாலை ஆறு மணிக்கு நேரடியாக திருப்பூருக்கே சென்று இறங்கிவிட்டேன். ராஜமாணிக்கம் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து நேராக பெருந்துறை வழியாக காஞ்சிகோயில். நண்பர் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில்தான் நிகழ்ச்சி. அங்கே …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118370

லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்கப் பாடுபட்ட காந்தியர் பலர். லக்‌ஷ்மி சந்த் ஜெயின் என்னும் எல்.சி.ஜெயின் அவர்களுள் முக்கியமானவர். விடுதலைப் போராட்ட வீர தம்பதியினர் ஃபூல் சந்த் ஜெயினுக்கும், சமேலி (மல்லிகை) தேவிக்கும், 1925 ஆம் ஆண்டு, ஆள்வார் என்னும் சிற்றரசில் உள்ள பஹதூர்பூர் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை ஃபூல் சந்த் ஜெயின், குலத் தொழிலான நகை வணிகத்தில் பயிற்சி பெற்றவர். ஆனாலும், விடுதலை வேட்கை, அவரை காங்கிரஸ் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118276

நீர்க்கூடல்நகர் கடிதங்கள் 2

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஐயா நீர்க்கூடல் நகரம் – மிக எளிதான, ஆனால் அசலான , உடனே தொடர்புறுத்தும் மொழியாக்கம். தமிழுக்கு நீங்கள் அளித்துக் கொண்டிருக்கும் கொடையை உணர்ந்து கொள்ள உங்களுடன் ஓடி வந்து கொண்டிருக்கிறோம். ஏதோ  ஒரு பேச்சில் அல்லது எழுத்தில் மூன்று அறிவுத்தளங்களைக் குறிப்பிட்டீர்கள் . தகவலை தர்க்கமாக, பின்னர் தரிசனமாக …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118272

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58

யுதிஷ்டிரர் தேர்த்தட்டிலிருந்து தன் அகவையை மீறிய விசையுடன் பாய்ந்திறங்கி ஊடே நின்றிருந்த வீரர்களை கைகளால் உந்தி விலக்கி அர்ஜுனனின் தேரை நோக்கி ஓடினார். அவரை பற்ற முயன்ற வீரர்களை நோக்காமல் தேர்விளிம்பில் தொற்றி மேலேறி அர்ஜுனனின் இரு தோள்களையும் அள்ளித் தழுவி தன்னோடு அணைத்துக்கொண்டு அவன் கன்னங்களிலும் தலையிலும் முத்தமிட்டார். அவர் விழிகளிலிருந்து வழிந்த நீர் அவன் தோள்களில் சொட்டியது. விம்மலோசையுடன், மூச்சிளைப்புடன், உடைந்து தெறிக்கும் சொற்களுடன் அவர் கொந்தளித்தார். “மைந்தா! மைந்தா!” என்றார். “நான்! நான்!” …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118245