கும்பமேளா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒருநண்பர் சொன்னார், சென்ற மூன்று மாதங்களாக கும்பமேளா பற்றி தேசிய ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் அத்தனை செய்திகளுமே எதிர்மறையானவை என. எல்லா தகவல்களுடனும் ஓர் ‘அறிவார்ந்த’ விமர்சனமும் ஊடாடியிருக்கும். கும்பமேளா பற்றி இந்தியாவின் ‘படித்த’ வட்டத்தினரிடம் இருக்கும் உளப்பதிவுகள் எல்லாமே இப்படி ஆங்கில ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டவை. அங்கே கடுமையான நெரிசல் இருக்கும், ஆகவே சாவு உறுதி என்பது முதல் உளப்பதிவு. அங்கே கழிப்பறைகள் இருக்காது, மக்கள் எங்குபார்த்தாலும் மலமும் சிறுநீரும் கழித்து நாறடித்திருப்பார்கள், குப்பை …
Daily Archive: February 13, 2019
Permanent link to this article: https://jeyamohan.in/118129
பனை – கடிதங்கள்
பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை அன்பின் அருணா , வணக்கம். எப்பொழுதும் சாரின் தளத்தை அன்றன்றே பார்த்துவிடுவேன். இந்த வாரம் முழுதும் ஊர்த்திருவிழாவென்பதால் நானும் சரணும் அதில் மும்முரமாக இருந்ததில் சிலநாட்கள் பதிவுகளை வாசிக்காமல் விட்டுவிட்டேன் அதில் உங்களது பனைமரச்சாலை பதிவும் சேர்ந்து தவறிவிட்டது. இன்று அதிகாலையிலேயே பனைமரச்சாலை பற்றிய உங்களது விமர்சனத்தை வாசித்தேன். அது குறித்துச்சொல்லும் முன்னர் உங்களது எழுத்தைக்குறித்த என் பொதுவான அபிப்ராயத்தையும் சொல்லிவிடுகிறேன். ஜெ சாரின் எழுத்துக்களை ஆழ்ந்து வாசிக்கையில் அவரது …
Permanent link to this article: https://jeyamohan.in/118100
இந்திய நாயினங்கள் – தியோடர் பாஸ்கரன்
ஒளிரும் விழிகள் குழையும் வால் நம்மை விளையாட அழைக்கிறது பிரபஞ்சம் நாயின் உருவில் . ஒரு ஜென் கவிதை இந்திய நாயினங்கள்- தியோடர் பாஸ்கரன் – நூல் வாங்க இனிய ஜெயம் நினைவு தெரிந்த நாள் முதலாக, என் வாழ்வு ஏதேனும் ஒரு நாயுடனே பிணைக்கப்பட்டு நகரும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. நான் கொலை செய்த மணி முதல் கடந்த வருடம் என்னை விட்டுவிட்டுப் போன ஒற்றைக்கண் பிளாக்கி வரை. எங்கள் குலதெய்வத்துக்கு வீட்டு விலங்காக நாய் வைத்திருப்பது …
Permanent link to this article: https://jeyamohan.in/118104
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-51
அரவான் சொன்னான்: நாகர்களே, கேளுங்கள். இன்று கௌரவப் படையின் அணிகுலைத்து கௌரவர்கள் நால்வரின் குருதியை உடலெங்கும் அணிந்து பாதாளத்திலிருந்து எழுந்து வந்த கொடுந்தெய்வம்போல் வெறித்த விழிகளும் விரித்த வாயுமாக கைகளில் நிணம் வழுக்கும் பெருங்கதாயுதத்துடன் களத்தில் நின்றிருந்த பீமனை நான் கண்டேன். அவன் ஓடிச்சென்று தன் தேரிலேறுகையில் தன் கையின் நிழல் நீண்டதொரு நாகம்போல் வளைந்து தேர்கள் மேல், புரவிகள் மேல், நிலத்திலென இழைந்து தன்னை அணுகுவதை கண்டான். ஒரு கண விழிதிரும்பலில் அவன் திகைத்து பிறிதொரு …
Permanent link to this article: https://jeyamohan.in/118054