Category Archive: வாசகர் கடிதம்

கடிதங்கள்

வணக்கம் ஐயா இது ஏன் முதல் தமிழ் கடிதம் உங்களிடம் இரண்டு விஷயம் கேட்டகவேண்டும் உங்கள் இந்திய பயணம் புத்தகம் வாசித்தேன் , தென் இந்திய வரலாற்றை அறிய வேண்டும் என்ற எண்ணம் தொற்றிக்கொண்டது , ஒரு நல்ல புத்தகம் சொல்லுங்களேன் நான் ஒரு பாமர வாசகன் , நல்ல தமிழ் புத்தகங்கள் பற்றி பேச , விவாதிக்க , தெரிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா ? பாலாஜி ராஜகோபாலன் அன்புள்ள பாலாஜி, தென்னக வரலாற்றை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118701

அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் – கடிதம்

அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் அன்புள்ள ஜெ அ.கா.பெருமாள்  அவர்களின் தமிழறிஞர்கள் நூலுக்கான அறிமுகம் அல்லது மதிப்புரை ஓர் அழகான கட்டுரை. அந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்துவிட்டு அது ஒரு வழக்கமான மதிப்புரையாக இருக்கும் என நினைத்து நான் கடந்து சென்றுவிட்டேன். மீண்டும் வாசித்தபோதுதான் அது எத்தனை முக்கியமான ஒரு கட்டுரை என்று தெரிந்தது. மூன்று பகுதிகளாக அழகாக அமைந்திருந்தது அக்கட்டுரை. மிக விரிந்த அளவில் தமிழ்ப்பண்பாட்டுச்சித்திரத்தை முதலில் அளிக்கிறீர்கள். அதில் தமிழியக்கத்தின் இடமென்ன என்று சொல்லி அந்த தமிழியக்கத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118789

வெள்ளையானை கடிதங்கள்

வெள்ளையானை வாங்க வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? வெள்ளையானை ஒலிவடிவம் அன்பின் ஜெ, ரா.முரளி, சக்திவேல் ஆகியோரின் அண்மைக்கால கடிதங்கள் “வெள்ளையானை”யை மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது. தோதாக 1897-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 6-14 வரை இங்கு தங்கியிருந்ததை நினைவுகூரும் விதமாக “விவேகானந்தர் நவராத்திரி” ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அதை காரணமாக வைத்து -நிகழ்வுக்கு முந்தியோ, அல்லது எல்லோரும் போனபிறகு, கேட் சாத்தியபிறகு கண்ணகி சிலையை பார்த்தபடி சாலையிலுள்ள மின்கம்ப வெளிச்சத்தில், அலைபேசியின் டார்ச் லைட்டில் கொஞ்சம் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118806

இரு கதைகள் – கடிதங்கள்

திருமுகப்பில்…..   அன்புள்ள ஜெமோ, உங்கள் பார்வைக்கு இந்த காணொளி. இதில் காளிச்சரணும் இருக்கிறார் சாவித்திரியும் இருக்கிறார். அன்புடன், வா.ப.ஜெய்கணேஷ்   யானை – புதிய சிறுகதை அன்பு ஜெமோ, யானை சிறுகதை படித்தேன். முற்றிலும் புதிய குழந்தை உலக அவதானிப்பு வெளிப்படும்கதை. அனந்தன் கண்களாலும் செவிகளாலும் உண்மையில் உலகை அறிந்து கொண்டே இருக்கிறான். செருப்பை தப்பி என்றும் சுவரை அப்பை என்றும் படிகளை டக்கு என்றும் பொருத்தமாகபெயரிட்டு அழைக்கிறான். பள்ளியில் யாரும் கவனிக்காத எறும்புகளை, வீசும்காற்றை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118808

சாமர்வெல்லும் பூமேடையும்

அன்பின் ஜெயமோகன் அவர்கட்கு , பத்து வருடங்களுக்கு பின்னர் ஈமெயில் எழுதுகிறேன். உங்களை இங்கே கான்பெராவில் சந்தித்தது நினைவிலிருக்குமென நம்புகிறேன். அதற்கு முன்னரேயே உங்கள் நாவல் ” ஏழாம் உலகம்” வாசித்திருந்தேன் மற்றும் உங்கள் இணையதளத்தை இன்று வரை நாளாந்தம் படித்து வருகிறேன். உங்களை சந்தித்த  பிறகே “காடு”, சிறுகதைகள் மற்றும்  குறுநாவல்கள் ( முழுத்தொகுப்பு) , ரப்பர், விஷ்ணுபுரம் (மூன்றிலிரண்டு பகுதியுடன் நிற்கிறது) ஆகியவற்றை படித்தேன்.   உங்கள் இணையதளத்திலுள்ள ஏறத்தாழ முழு சிறுகதைகள், நாவல்களும்  படித்து …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118791

தீ – கடிதங்கள்

தீ அன்புள்ள ஜெ தீ ஒரு அருமையான கதை –கட்டுரை. அனுபவத்துடன் புனைவு கலக்கும் இத்தகைய எழுத்துக்களுக்கு இன்று உலகளாவ ஒரு செல்வாக்கு உள்ளது. தமிழில் நீங்கள் இதை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வாழ்விலே ஒருமுறை இதில் முக்கியமான ஒரு புத்தகம். தமிழில் அது ஒரு தொடக்கநூல் என்றுதான் சொல்வேன் வாழ்க்கையின் சில தருணங்கள் முக்கியமான திருப்புமுனைகள். அப்போதுதான் நாம் யார் என நாமே அறிகிறோம். அத்தகைய ஓர் இடம் அந்தக்கதையில் வருவது. நாம் யார் என …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118274

பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். பின் தொடரும் நிழலின் குரல் வாசித்துத் தொடங்கி குறைந்தது முந்நூறு பக்கங்கள் சரசரவென வாசித்துவிட்டேன். அருணாச்சலம், அவரின் மனைவி, தொழிற்சங்கங்கள், அதன் வாழ்க்கை, கம்யூனிசம்.. இவ்வரிசையில் பயணிக்கும் அருணாச்சலம் அடையும் மனப் போராட்டங்கள் அனைத்தையும் நானும் அடைந்தேன். படித்து முடித்தபின் விரிவாகவே எழுதுகிறேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று வாசிப்பைத் தொடர்ந்தேன். அன்னாவிற்கும் புகாரினிக்கும் நடக்கும் உரையாடல்களைக் கடக்க முடியாமல் கண்கள் கலங்கிக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118680

கும்பமேளா கடிதங்கள்-4

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஜெ, தங்கள் பயணக்கட்டுரை ஒரு நிஜ அனுபவத்தையே எனக்குள் ஏற்படுத்துகிறது. நீங்களே என்னை கைப்பிடுத்து அழைத்துகிச்சென்று காட்டியது போன்ற உணர்வு. வெறும் சுற்றுப்பயணமாக அன்றி ஒரு தரிசனத்தையே முன் வைக்கிறது. பின்வரும் வரிகள் அனைவருக்குமான அவசியச்செய்தி “ இந்தியா மிகமிக விரைவாக நடுக்குடியினரின் தொகையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மரபார்ந்த விழாக்கள், …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118444

மிசிறு கடிதங்கள்

மிசிறு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு மிசிறு பதிவை வாசித்தேன். தாவரங்களுக்கும் எறும்புகள் உள்ளிட்ட  பிற உயிரினங்களுக்குமான சார்பு வாழ்வைக்குறித்து எத்தனைபேருக்கு அறிதலிருக்கின்றதென்று நினைக்கையில் ஆதங்கமாகவே இருக்கும் எனக்கு எப்போதும்.   பிற  உயிர்களுடனிருக்கும் தொடர்பை விடுங்கள் தாவரங்களையே அறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை.  என் வீட்டிலிருந்து பின் வாசல் மதில் மேல் அடர்ந்து படர்ந்திருக்கும் கோளாம்பி மலரென்னும் அலமண்டாவை பின்வீட்டுப்பெண் செம்பருத்தியென பறித்து தலைக்கு தேய்க்கும் எண்ணையே காய்ச்சிவிட்டாள் ஒருமுறை. செம்பருத்தி தெரியாத ஆட்களெல்லாம் கூட இருக்கிறார்கள். குப்பை மேனி …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118430

பால் – ஒரு கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் பால் – கடிதங்கள் பால் – மேலும் கடிதங்கள் அன்புள்ள ஜெமோ, பல விவாதங்களில் ஒரு குறிப்பிடட “இரு தரப்புகள்” எல்லா விவாதங்களிலும் இருக்கிறது. விவாத அடிப்படையில் இரண்டுமே ஒருவகையில் ஏற்புடையதாகவும் இருக்கிறது. “உள்ளிருந்து விபரங்கள் அடிப்படையில் பேசுபவர்கள்” “வெளியில் இருந்து அனுபவ அடிப்படையில் பேசுபவர்கள்” எந்த ஒரு விவாதத்திலும் வித்தியாசம் “உள்ளிருந்து பேசுபவர்கள்” மற்றும் “வெளியில் இருப்பவர்கள்” என்பது மட்டும்தானா என்றே பல சமயங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118555

Older posts «

» Newer posts