Category Archive: வாசகர் கடிதம்

வெகுஜனக் கலை என்பதைப் பற்றி…

  அன்புள்ள ஜெயமோகன், தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில் அதைப்பற்றி எழுதியதை நீங்கள் வெளியிட்டிருந்ததை இன்றுதான் கண்ணுற்றேன். உங்களுக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலோ என்னவோ நீங்கள் அவரது குறிப்பைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. பேராசிரியர் அ.ராமசாமிக்கும் போதிய அவகாசம் இல்லாததால்தான் அவரால் என்னுடைய கருத்துக்களை விவாதிக்க முடியாமல் போயிருக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/8668

கும்பமேளா கடிதங்கள் 3

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் கும்பமேளாவில் இருந்த அதே நேரத்தில் நானும் அலஹாபாத் கும்பமேளாவில்தான் இருந்தேன். தனியாகச் சென்று காசியில் தங்கி தை அம்மாவாசையன்று கும்பமேளாவிற்குச் சென்று திரும்பி அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்தே காசியிலிருந்து கிளம்பினேன். அலகாபாத் கும்பமேளா தொடர்பான உங்கள் கட்டுரை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118331

நீர்க்கூடல்நகர் கடிதங்கள் 2

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஐயா நீர்க்கூடல் நகரம் – மிக எளிதான, ஆனால் அசலான , உடனே தொடர்புறுத்தும் மொழியாக்கம். தமிழுக்கு நீங்கள் அளித்துக் கொண்டிருக்கும் கொடையை உணர்ந்து கொள்ள உங்களுடன் ஓடி வந்து கொண்டிருக்கிறோம். ஏதோ  ஒரு பேச்சில் அல்லது எழுத்தில் மூன்று அறிவுத்தளங்களைக் குறிப்பிட்டீர்கள் . தகவலை தர்க்கமாக, பின்னர் தரிசனமாக …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118272

ஆயிரங்கால்கள் – கடிதங்கள்

ஆயிரங்கால்களில் ஊர்வது அன்புள்ள ஜெயமோகன் சார் “ஆயிரங்க்கால்களில் ஊர்வது” படித்தேன். இப்போது நான் எனது வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான ஒரு கட்டத்தில் இருக்கிறேன். மனதில் எந்த குழப்பங்களும் இல்லை. எந்த பயமும் இல்லை . ஆனாலும் நீங்கள் ஜி.குமாரபிள்ளை கூறியதாக கூறிய  ‘ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை’ வரி இப்போதுதான் நான் கறாராக கடைபிடிக்க ஆரம்பித்திருக்கும் வழி. உங்களின் எழுத்துவழியாய் வந்திருப்பதினால் ஒரு அசரிசி போல என்னிகொள்கிறேன். எண்ணி எண்ணி …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118241

பனை – கடிதங்கள்-2

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை அன்புநிறை ஜெ, பனைகளின் இந்தியா வாசித்தேன். இந்தத் தலைப்பே மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த ஆரவாரமுமின்றி எளிமையான கிராமத்து மனிதரைப் போல நம் பயணங்களில் கவனம் பெறாது கடந்து பின்நகரும் பனை, ஓலைகளாகத் தாங்கி நின்ற மானுட அறிதல்கள் எத்தனை!! அதற்காக ஒருவர் மேற்கொண்ட பயணம், அதைப் பற்றிய எழுத்து மீண்டும் பனைகளை அடையாளப்படுத்தியிருக்கிறது. ஆறுமுகநேரியிலிருந்து அடைக்கலாபுரம் வழியாகத் திருச்செந்தூர் செல்லும் சாலையில் நடந்த இளவயது நினைவுகள் கிளர்ந்தெழ …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118102

நீர்க்கூடல்நகர் – கடிதங்கள்

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஜெயமோகன் சார், நீங்கள் ஜனவரி 27ம் தேதி அறிவித்த பிரக்யாராஜ் கும்பமேளா பற்றிய அறிவிப்பினை படித்தேன்.[https://www.jeyamohan.in/117497] அதில் கும்பமேளா நடைபெறுவது அலஹாபாத் என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசு அலகாபாத்தை அபிஷியலாக பிரஹ்யாராஜ் என்று மாற்றிய பின்னும் நீங்கள் அதை பழைய பெயரிலேயே அழைப்பது சரியா?  …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118214

புதிய வாசகர் கடிதங்கள்

வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே நான் உங்களது நீண்ட நாள் வாசகன் என் கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து நான் உங்கள் தளத்தை படித்து வருகிறேன் பின் நவீனத்துவம் என கூகுளில் தேடியபோது நான் உங்கள்  தளத்தில் தற்செயலாக நுழைந்தேன், அன்றிலிருந்து ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் தளத்தை படிக்காமல் என் ஒரு நாளும் கடந்து சென்றது இல்லை.நான் முதலில் உங்கள் நாவல் கோட்பாடு எனும் நூலைப் ,தான்படித்தேன்,அதன் பின்பே இலக்கியத்தைப் பற்றிய தெளிவான பார்வை எனக்கு உருவாகியது. …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118186

பனை – கடிதங்கள்

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை அன்பின் அருணா , வணக்கம். எப்பொழுதும் சாரின் தளத்தை அன்றன்றே பார்த்துவிடுவேன். இந்த வாரம் முழுதும் ஊர்த்திருவிழாவென்பதால் நானும் சரணும் அதில் மும்முரமாக இருந்ததில் சிலநாட்கள் பதிவுகளை வாசிக்காமல் விட்டுவிட்டேன் அதில் உங்களது பனைமரச்சாலை பதிவும் சேர்ந்து தவறிவிட்டது. இன்று அதிகாலையிலேயே பனைமரச்சாலை பற்றிய உங்களது விமர்சனத்தை வாசித்தேன். அது குறித்துச்சொல்லும் முன்னர் உங்களது எழுத்தைக்குறித்த என் பொதுவான அபிப்ராயத்தையும் சொல்லிவிடுகிறேன். ஜெ சாரின் எழுத்துக்களை ஆழ்ந்து  வாசிக்கையில் அவரது …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118100

தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம்

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா அன்புள்ள ஜெயமோகன், தமிழிலும் சரி, பொதுவாக இந்திய இலக்கியச்சூழலிலும் சரி , எழுதவரும் எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், டோஸ்டோயெவ்ஸ்கி படைப்புக்கள் வழியாகவே ‘வயசுக்கு’ வருகிறார்கள். அவர்களை வாசிக்காதவர்கள் கடைசிவரை அமெச்சூர்களாகவே நீடிக்கிறார்கள். இது வாசகர்களுக்கும் பொருந்துவது. அவர்களை வாசிக்காதவரை உண்மையில் எழுத்தின் இயல்பென்ன என்றும் கடைசி இலக்கு என்ன என்றும் பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. இவர்களுக்குச் சமானமான கிளாஸிக்கல் எழுத்தாளர்கள் மேற்கே மேலும்பலர் உண்டுதான். …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118070

வெள்ளிநிலத்தில்…

இனிய ஜெயம் எனது பதின்பருவ மத்தியில் என்னை பரவசத்தில் ஆழ்த்திய முக்கிய திரைப்படங்களில் ஒன்று ஸ்பீல்பர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம். [இதை எழுதும் இக்கணம் மனிதன் கைகளிலிருந்து நழுவிய காவலாளி, மிருகத்தின் வாய்க்குள் செல்லும் இறுதிக் கணம், மனிதனும் மிருகமும் கண்ணுக்குக் கண் பார்த்துக்கொள்ளும் அப் படத்தின் காட்சி வலிமையாக உள்ளே எழுகிறது.உலக திரைப்பட வரலாற்றின் சிறந்த நூறு ஷாட் களில் ஒன்றாக அது இருக்க வாய்ப்பு உண்டு] காரணம் அதில் உயிர் கொண்டு உலவும் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/117996

Older posts «