Category Archive: பொது

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் குரு இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது. குரு மறைந்தபின் ஓரிரு ஆண்டுகள் தவிர தொடர்ச்சியாக ஊட்டியில் இதை ஒருங்கிணைத்து வருகிறேன். தொடக்கத்தில் இலக்கிய விவாத அரங்காகவும், பின்னர்  தமிழ்- மலையாளக் கவிதைப் பரிமாற்ற அரங்காகவும் இது நிகழ்ந்தது. சென்ற சில ஆண்டுகளாக இலக்கிய விவாத அரங்காக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இதில் பங்கெடுக்கிறார்கள். வரும் மே மாதம் 3, 4, 5 தேதிகளில் [வெள்ளி, சனி, ஞாயிறு] இதை ஒருங்கிணைக்க …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119332

இந்தக் காலையின் ஒளி

ஐயமே இல்லாமல் இந்திய ஜனநாயகத்தின் அழகான தருணங்களில் ஒன்று. இந்தக் காலையை ஒளிமிக்கதாக்குகிறது, அழகிய இளம் முகங்கள் உற்சாகமான கூச்சல். அவர்கள் நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட  இளைய முகம். அந்தப்பெண்ணின் நாணம் மிக்க நாச்சுளிப்பு. இன்று, கசப்பூட்டும் செய்திகளுக்கு நடுவே அந்தப் பெண்களின் சிரிப்பு போல ஆறுதலளிப்பது பிறிதொன்றில்லை.

Permanent link to this article: https://jeyamohan.in/119145

பட்டி

patti

பட்டி என்ற சொல்லில் எல்லா குமரிமாவட்டத்தினரையும் போல நானும் முட்டிக்கொண்டு மண்டை கிறுகிறுத்திருக்கிறேன். எங்களூரில் பட்டி என்றால் நாய். கோயில்பட்டி என்றால் என்ன அர்த்தம் என எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். சரி விருதுப்பட்டி? விருதா என்றால் வீண் என்பது எங்களூர் வழக்கு. ஆரல்வாய்மொழி எல்லை கடந்தாலே பட்டிகள்தான். “அங்கிண பட்டித்தொல்லை கூடுதலுடே. கையிலே ஒரு கம்பு வச்சுகிடணும்” என்ற நையாண்டி எங்களூரில் மிகுதி. பதினாறு வயதில் முதல்முறையாக திருச்செந்தூருக்கு செம்மண் பொட்டல் வழியாக பேருந்தில் செல்லும்போதுதான் ஆட்டுமந்தை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118728

கட்டண உரையில் ஒரு தருணம்- வசந்தபாலன்

நேற்று நடந்த ஜெயமோகன் கட்டண உரை விழாவில் ஒரு அரிய தருணம்.ஜெ. உரையை முழுதாக முடித்து விட்டு கீழேயிறங்கினார். மரபுசார்கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ஜெ.யின் மனைவி அருண்மொழி மங்கையின் கண்களில் ஒரு பதட்டம்,ஒரு பரிதவிப்பு.அருண்மொழி கூட்டம் முடிந்து எழுந்த மணி சாரை நெருங்கி வணங்கினார்.மணி சார் அவரைப்பார்த்து நல்லாயிருக்கீங்களா என்று கேட்டார்.   அவர் பதிலுரைக்காமல் பதட்டத்துடன் அவருடைய உரை நல்லாயிருந்துச்சா? உங்களுக்கு புடிச்சிருந்துச்சா என்று வினவினார்.மணி சார் அவருடைய தனித்துவமான மொழியில் பிரமாதம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118856

ராயகிரி

நான் பொதுவாக முகங்களை நினைவில் வைத்திருப்பவனல்ல. என்னைப்பற்றிய பேச்சுக்களை வைத்து என் நினைவாற்றலை மதிப்பிட்டிருப்பவர்களுக்கு இது வியப்பாக இருக்கும். பல்லாயிரம் வாசகர்களை நினைவில் வைத்திருக்கிறேன், அவர்கள் எழுதியவற்றையும் பேசியவற்றையும் உடனே நினைவுகூர்கிறேன் என பலர் எழுதியிருக்கிறார்கள். அதுவும் உண்மை. ஆனால் நான் நினைவு வைத்திருப்பது கருத்துக்களைத்தான். அவற்றை சொன்னார்கள் என்றுதான் அந்த மனிதர்களை நினைவுகூர்கிறேன். வெறும் முகங்களை அல்ல. நான் ரயிலில், பேருந்தில் பயணம் செய்துகொண்டே இருப்பவன். முகங்களை பார்ப்பது என் போதை. பிழையாக நினைக்கவேண்டியதில்லை, ஆண்களின் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118530

குளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா

  இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சொற்பொழிவுகளின் வரிசையால் ஆனது என ஆகிவிட்டது. நேற்று முன்னாள் [23-2-2019] மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குளச்சல் மு யூசுப் அவர்கள் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருதை பெற்றதற்கான பாராட்டுவிழா. லக்ஷ்மி மணிவண்ணனின் நிழல்தாங்கல் அமைப்பும் சிலேட் இதழும் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி.   காலை பத்துமணிக்கு செட்டிகுளம் ஏபிஎன் பிளாசாவில் நிகழ்ச்சி. 25 பேர் கலந்துகொண்டார்கள். நாகர்கோயிலில் பொதுவான இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மிகக்குறைவாகவே மக்கள் பங்கேற்பு இருக்கும். எனக்கு மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் அரங்கு …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118570

கட்டண உரையின் தேவை

சென்னையில் ஒரு கட்டண உரை சென்னையில் ஒரு கட்டண உரை   அன்புள்ள ஜெ,   கட்டண உரை பற்றிய அறிவிப்பு மீண்டும் கொந்தளிப்புகளை உருவாக்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். உண்மையில் இப்படிக் கொந்தளிப்பவர்களின் எண்ணம் என்ன என்றுதான் புரியவில்லை. உரைக்குக் கட்டணம் வைக்கக்கூடாது என்கிறார்களா? அல்லது உங்கள் உரைக்குக் கட்டணம் வைக்ககூடாது என்கிறார்களா? அல்லது நீங்கள் உரையே நிகழ்த்தக்கூடாது என்கிறார்களா?   எஸ்.சிவராம்   அன்புள்ள சிவராம்,   இந்த கட்டண உரை என்னும் அறிவிப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118467

தலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்

தொல்திருமாவளவன் அவர்களுடன் மதுரையில், ஒருபழையபடம் மதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம் அன்புள்ள ஜெ நேற்று முழுக்க சமூக வலைத்தளங்களில் ‘திடீரென்று’ ஜெயமோகன் எப்படி தலித் ஆதார மையத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றுகிறார், எப்படி திருமாவளவன் அவர்களின் கூட்டத்தில் பேசுகிறார் என்றெல்லாம் விவாதித்துத் தள்ளிவிட்டார்கள். சென்ற ஐந்தாண்டுகளாக நீங்கள் எப்படியும் முப்பது தலித்தியக்க மேடைகளிலாவது பேசியிருப்பீர்கள் என்றும், அம்பேத்கர் அயோத்திதாசர் பற்றிய மிக ஆழமான பேருரைகளை ஆற்றியிருக்கிறீர்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியபோது இவர்கள் எவருக்கும் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118590

மதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்

  நேற்று முன்னாள் [22-2-2019] என்று மதுரை சென்றிருந்தேன். மதுரை இறையியல் கல்லூரியில்  ‘இன்றைய இலக்கியப்பரப்பில் தலித் இலக்கியத்தின் தாக்கம்’ என்னும் தலைப்பில் பேசினேன். இறையியல் கல்லூரி நண்பர் அலெக்ஸ் பணியாற்றிய நிறுவனம். இப்போது அலெக்ஸின் மனைவியும் அங்கேதான் பணியாற்றுகிறார். அதனாலேயே எனக்கு அணுக்கமானது. அலெக்ஸ் பல நிகழ்ச்சிகளை அங்கே ஒருங்கிணைத்திருக்கிறார். அயோத்திதாசர் ஆய்வுமையம் சார்பிலான கூட்டங்கள் அங்கேதான் நடந்தன. அங்குள்ள விருந்தினர் விடுதியில் பலமுறை தங்கியிருக்கிறேன். மதுரை நகரின் மையத்திற்குள் மரங்கள் அடர்ந்த ஒரு சிற்றூர் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118546

சென்னையில் ஒரு கட்டண உரை

நெல்லை கட்டண உரை தந்த நம்பிக்கையில் சென்னையிலும் ஒர் உரைக்கு ஒழுங்குசெய்யலாம் என்று நண்பர் அகரமுதல்வன் சொன்னார். ஆகவே வரும் மார்ச் 2 அன்று ஏற்பாடாகியிருக்கிறது.   இடம் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை அரங்கம், ராஜா அண்ணாமலைபுரம் [எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரி எதிரில்]   ‘மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?” என்று தலைப்பு. சென்ற ஒருநூற்றாண்டில் நமக்கு மரபுடனான உறவு எவ்வண்ணம் கட்டமைக்கப்பட்டது என்பதை விவாதிக்க விரும்புகிறேன். வழக்கம்போல இலக்கியப் படைப்பாளி என்னும் என் எல்லைக்குட்பட்டு, இலக்கியதினூடாக.   …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118366

Older posts «