Category Archive: சந்திப்பு

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு நிகழ்ச்சிக்காகச் செல்லவிருந்தபோதுதான் நண்பர் ராஜமாணிக்கத்தின் தந்தை மறைந்த செய்தி தெரியவந்தது. காந்தியவாதியும், தமிழக சர்வோதய இயக்கத்தின் மாநிலப்பொறுப்பில் பத்தாண்டு இருந்தவர். வினோபாவின் நூற்றாண்டுவிழாவின்போது ஓராண்டுக்காலம் நடந்தே தமிழகத்தைச் சுற்றிவந்தவர். சிலமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். 15 ஆம்தேதி நாகர்கோயிலில் இருந்து கிளம்பி அதிகாலை ஆறு மணிக்கு நேரடியாக திருப்பூருக்கே சென்று இறங்கிவிட்டேன். ராஜமாணிக்கம் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து நேராக பெருந்துறை வழியாக காஞ்சிகோயில். நண்பர் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில்தான் நிகழ்ச்சி. அங்கே …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118370

புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு

வழக்கம்போல புதியவாசகர்கள் சந்திப்புக்கு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். ஈரோட்டில் இருபதுபேருக்கே இடமிருக்கும். ஆகவே இன்னொரு புதியவாசகர் சந்திப்பை நிகழ்த்தலாமென்று திட்டமிட்டிருக்கிறோம். ஈரோடு வாசகர் சந்திப்புக்கு இருபதுபேருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அருகமைவு, அகவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தெரிவு நிகழ்த்தப்பட்டுள்ளது. பிறருக்கு அடுத்த சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டபின் கடிதம் அனுப்பப்படும். மொத்த ஈரோட்டுக் கும்பலும் கும்பமேளாவுக்கும் கேரளத்தில் கதகளி நிகழ்வுக்குமாக கிளம்பிச் சென்று மீண்டமையால் ஏற்பாடுகள் பிந்திவிட்டன. மன்னிக்கவும். ஜெ

Permanent link to this article: https://jeyamohan.in/117920

புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்

புதியவாசகர் சந்திப்பு – ஈரோடு அன்புநிறை ஜெ சமீப காலத்தில் நாவல்கள் படித்துக்கொண்டிருக்கும் பொழுது என் மனம் பெரும் சஞ்சலத்திற்குட்பட்டது. முக்கியமாக கிருஷ்ணப்பருந்து, ஒரு புளியமரத்தின் கதை மற்றும் சில சிறுகதைகள் போன்றவற்றை வாசிக்கும் பொழுது, கதாபாத்திர உருவாக்கம் பற்றி பல எண்ணங்கள், பல சந்தேகங்கள் என் மனதில் எழுந்தது. இந்நிலையில், புதிய வாசகர் சந்திப்பிற்கான அறிவிப்பு கையில் தானாக வந்தடைந்த அமிர்தம் போன்ற பரவசத்தை கொடுத்தது. மிக்க மகிழ்ச்சி பெயர் பதிவு செய்துள்ளேன். இருபது நபர்களில் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/117729

புதியவாசகர் சந்திப்பு – ஈரோடு

நண்பர் கிருஷ்ணன் [ஈரோடு] இந்த அறிவிப்பை அனுப்பியிருக்கிறார். புதிய வாசகர்களுக்கான சந்திப்பு இது. இதுவரை வராதவர்களுக்கு முன்னுரிமை. அந்த அளவுக்கு ஆர்வம் கொண்ட புதியவாசகர்கள் இருக்கிறார்களா என்று கொஞ்சம் குழப்பம்தான். இருந்தாலும் பார்க்கலாம். வழக்கம்போல இலக்கியம் குறித்த உரையாடல்கள். எழுதத் தொடங்குபவர்கள் தங்கள் மாதிரிப் படைப்புகளுடன் வந்தால் அவற்றைப்பற்றி விவாதிக்கலாம். இதில் எழும் முதன்மையான நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு தயக்கத்துடன் இப்படி வாசகர் சந்திப்புக்கு வந்த பலர் இன்று எழுத்தாளர்கள் என்பது. பார்ப்போம். ஜெ ஈரோடு …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/117251

ஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2

சிரிப்புடன் புத்தாண்டு ஈரட்டி – கடிதங்கள் அன்புள்ள ஜெ ஈரட்டி அனுபவம் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொன்னது மிக முக்கியமானது. குடி இல்லாத கேளிக்கைதான் உண்மையானது. குடி இல்லாமல் நண்பர்களுடன் இருப்பதே உண்மையான கொண்டாட்டம். குடிக்கேளிக்கை என்பது ஒரு பாவலாதான். அப்போது எவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை.சமீபத்தில் குடியை விதந்தோதும் எழுத்தாளர்களில் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக குடி இல்லாமல் நட்புச்சந்திப்பே சாத்தியமில்லாமல் ஆகியிருப்பதைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நானும் அவ்வாறுதான் இருந்தேன். என் தொழில் என்னைக்குடிக்கச் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/116914

ஈரட்டி – கடிதங்கள்

சிரிப்புடன் புத்தாண்டு அன்புள்ள ஜெ ஈரட்டியின் சிரிப்புக்கொண்டாட்டத்தை படங்களிலிருந்து பார்த்தேன். மகிழ்ச்சியில் நானும் கலந்துகொண்டதுபோல் உணர்ந்தேன். இப்படி கூடிக் கொண்டாட்டமாக இருப்பது கல்லூரி நாட்களுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பின்னரும் கூடுகைகள் உண்டு. பெரும்பாலும் தொழில்நிமித்தம். ஆகவே குடி உண்டு. குடி இருந்தாலே இரண்டு விஷயங்கள் நிகழும். ஒன்று அதீத ஜாக்ரதை வந்துவிடும். அதை மறைக்க செயற்கையான உற்சாகம். ஒருகட்டத்தில் என்ன நிகழ்கிறதென்றே தெரியாது நீங்கள் சொல்வதுபோல என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மயங்கியிருப்பதை எப்படி கொண்டாட்டம் என்று சொல்லமுடியும் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/116787

சிரிப்புடன் புத்தாண்டு

ஈரட்டிச் சிரிப்பு… ஈரட்டி சந்திப்பு இம்முறை புத்தாண்டை ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் நண்பர்களுடன் கொண்டாடலாம் என்று திட்டமிட்டேன். நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து ஈரோடுக்கு  வந்தனர். சிலர் இறுதிநேரச் சிக்கல்களால் வரமுடியாமலாகிவிட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சி முடிந்து ஐந்தாறுநாட்களே ஆகிவிட்டிருந்தமையால் பலருக்கு விடுப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ஈரட்டிக்குச் செல்லலாம் என முடிவுசெய்தமைக்குக் காரணம் சென்றமுறை நண்பர்களுடன் அருவிப்பயணம் சென்றபோது அங்கே ஒருநாள் இரவு மட்டுமே தங்கி கிளம்பியதனால் உணர்ந்த நிறைவின்மைதான். நவம்பர் முதல் ஜனவரி முடியத்தான் ஈரட்டி மிதமான …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/116724

வெண்முரசு விவாதக்கூடுகை – புதுச்சேரி

அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசு விவாத” கூடுகை புதுவையில் சென்ற 2017 பிப்ரவரி முதல் மாதம் தொரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. இந்த மாதத்திற்கான கூடுகை ( ஏப்ரல் 2017 ) “வெண்முரசு முதற்கனல் -எரியிதழ் ” என்கிற தலைப்பில் நடைபெற இருக்கிறது . நாள்:-  வியாழக்கிழமை (20-04-2017) மாலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை நடைபெறும் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/97496

வெண்முரசு சென்னை சந்திப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இம்மாதத்திற்கான (ஏப்ரல் 2017)   வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 4:00 மணி முதல்  8 மணி வரை நடைபெறும். ராகவ்.வெ  “வெண்முரசில் இணைமாந்தர்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றுவார். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:-  வரும் ஞாயிறு (09/04/17) மாலை 4:00  மணிமுதல் 08:00 மணி வரை இடம்:-  Satyananda Yoga -Centre 11/15, south perumal Koil 1st Street Vadapalani …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/97059

தஞ்சைச் சந்திப்பு -கடிதம்

  தஞ்சை சந்திப்பு மறக்க முடியாத நிகழ்வாக, முன்பே கூறியது போல ‘நல்ல திறப்பாக’ அமைந்தது. சில தீவிர வாசகர்களின் அறிமுகமும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு வருவதற்கு முந்தைய இரண்டு நாட்களாக தூங்காமல் இருந்தேன். போதாதற்கு இரவு ரயில் பயணம் வேறு. அந்த அளவிற்கு விழிப்புடன் நிகழ்வு முழுக்க இருந்தது பெரிய ஆச்சரியம்தான். புகைப்படத்தில் பார்த்தால் யாரோ போல இருக்கிறேன். . சந்திப்பிற்கு வர  ஒரே காரணம் தான் இருந்தது. தீவிரமாக இயங்குபவர்களை எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/96613

Older posts «