Found 32 search results for keyword: தெளிவத்தை ஜோசப் விருது விழா

விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை

  விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல்  ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது   விஷ்ணுபுரம் அமைப்பின் உறுதியான நடத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111472

இன்று விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது.

    இன்று விஷ்ணுபுரம் விருதுவிழா. மலேசியாவின் மூத்தபடைப்பாளியாகிய சீ முத்துசாமிக்கு 2017 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. 2010ல் கோவையில் தொடங்கப்பட்ட விருது இது. தொடர்ச்சியாக தமிழின் மூத்த படைப்பாளிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஆ.மாதவன்,பூமணி,தேவதேவன்,தெளிவத்தை ஜோசப்,ஞானக்கூத்தன்,தேவதச்சன்,வண்ணதாசன் ஆகியோருக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது.   சீ.முத்துசாமி மலேசியாவின் மூத்தபடைப்பாளிகளில் ஒருவர். மலேசியத்தமிழர்கள் நூற்றைம்பதாண்டுகளுக்கு முன் மலேசியாவில் தோட்டத்தொழில் தோன்றியபோது பிரிட்டிஷாரால் அங்கு கொண்டுசெல்லப்பட்டவர்கள். தோட்டக்காட்டில் பண்ணையடிமைகள்போல வாழ்ந்தவர்கள்.கடும் துயரங்களும் தொடர்போராட்டங்களும் நிறைந்தது அவர்களின் வாழ்க்கை. இன்று மலேசியாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104629

சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை சற்று முன்னரே அறிவிக்கவேண்டிய சூழல் அமைந்தது. ஈராண்டுகளுக்கு முன்னரே மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுக்கு விருது அளிப்பது என முடிவுசெய்திருந்தோம். இவ்வருடம் மலேசியாவில் கூலிம் நகரில் சுவாமி பிரம்மானந்தா அவர்களின் குருகுலத்தில் நிகழ்ந்த இலக்கியக் கருத்தரங்குக்கு சீ.முத்துசாமி வந்திருந்தார். கருத்தரங்கின் முடிவில் மலேசிய இலக்கியத்தின் தேக்கநிலை, சாத்தியங்கள் குறித்த கொஞ்சம் கறாரான விவாதம் நிகழ்ந்தது. நான் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக சீ.முத்துசாமியை காண்கிறேன். கூடவே அவரது ஆக்கங்கள் பற்றிய, பங்களிப்பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99181

விஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை

விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. 2008இல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்றபேரில் ஒரு எளிய நண்பர் கூட்டு ஆரம்பமானது. ஒரு விருது வழங்கினாலென்ன என்னும் எண்ணம் ஒருமுறை பேச்சில் எழுந்தது. முன்னோடிகள் அரசுத்துறைகளாலும் கல்வித்துறையாலும்  கௌரவிக்கப்படாது போவதற்கு எதிரான ஒரு செயல்பாடாக இது தொடங்கப்பட்டது. முழுக்கமுழுக்க வாசகர்கள் அளிப்பது, சக எழுத்தாளர் அளிப்பது என்று பெயரிலேயே தெரியவேண்டும் என்பதற்காகவே விஷ்ணுபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. முதல் விருது 2010ல் ஆ மாதவனுக்கு அளிக்கப்பட்டது இன்று பழைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93641

விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை

unnamed

அன்புள்ள நண்பர்களுக்கு, மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம். இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67272

விழாவில் ஓர் உரை

இந்தியாசவிலிருந்து பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் கதைகளில் எனக்கு, ‘பால் மரக்காட்டினிலே’ என்ற கதையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’யும், ‘காக்காய் விரட்டப் போனவன்’, என்ற கதையும் நினைவிலிருக்கிறது. ஆனால் அவை ஒரு நாவல் அளிக்கக்கூடிய முழுமையான வாழ்வின் அனுபவத்தை எனக்கு வழங்கவில்லை. நான் அறிந்திராத இலங்கை மலையகத் தமிழ் வாழ்க்கை, தெஜோ. அவர்களின் எழுத்தின் மூலம் மலையகத்தின் குளிர், மழையில் நனைந்த அந்த மண் மணம், தேயிலை வாசம், தொழிலாளர்களின் வியர்வைக் குருதி மணம் ஆகியவை முகத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44242

விழா வாழ்த்துக்கள் யோசனைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் உங்களை அறிந்து உங்கள் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்கள் அறிமுகம் எனக்கு யூட்யூப் மூலமாகவே நிகழ்ந்த்து. சங்க இலக்கியம் பற்றி தேடும் போது உங்களின் ஒரு பேட்டியை காண நேர்ந்த்து. ஐந்து நிமிடம் பார்த்ததுமே அதில் உள்ள செறிவான விஷயங்கள் என்னை திரும்ப திரும்ப அந்த பேட்டியை பார்க்க வைத்தது. சுமார் பத்து முறையாவது பார்த்திருப்பேன். ஏனெனில் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43802

விழா பதிவுகள்

இதுவரை விஷ்ணுபுரம் விருது, ஆ. மாதவன், பூமணி, தேவதேவன் மற்றும் இப்பொழுது தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பூமணி அவர்களைத் தவிர, மற்ற மூவரையும் முன்னர் நான் அறிந்ததில்லை. அந்த வகையில், மூத்த படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ஜெயமோகன் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள் இப்படிக்கு இளங்கோ பதிவு படங்கள் டோக்கியோ செந்தில்

Permanent link to this article: https://www.jeyamohan.in/43686

விழா 2013

மீண்டும் ஒரு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. இன்றுகாலை நாகர்கோயில் ரயிலில் திரும்ப வந்திறங்கியபோது ஆழ்ந்த மனநிறைவும் சோர்வும் எஞ்சியிருந்தது. எல்லா விழாக்களும் இனிய சோர்வைத்தான் மிச்சம் வைக்கின்றன. வாழ்க்கை விழாவாகவே இருந்துவிடமுடியாது என்ற யதார்த்தம் அளிக்கும் சோர்வு அது. மிட்டாயையே மூன்றுவேளையும் உணவாகச் சாப்பிடமுடியாது என்று உணரும் குழந்தையின் நிலை. இருபத்தொன்றாம்தேதி நானும் அஜிதனும் காலையில் தங்குமிடமாக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்திற்குச் சென்றபோது அங்கே முப்பது நண்பர்களுக்குமேல் ஏற்கனவே வந்திருந்தனர். குளித்துக்கொண்டும், உடைமாற்றிக்கொண்டும், பேசிக்கொண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43537

விழா எதிர்வினைகள்

இவ்வாண்டு விருது விழா மிகச் சிறப்பாக நடந்தது. சனிக்கிழமை இரவு ஒன்பதரைக்கு அங்கு சென்றிறங்கியது முதல் தனா என்னை ஞாயிறு இரவு இரவு பத்தரைக்கு பஸ் ஏற்றி விடும் வரை எவருடனோ பேசிக்கொண்டோ அல்லது எவர் பேசுவதை கவனித்துகொண்டோ தான் இருந்தேன். தெளிவத்தை, இ.பா, ஜெ, நாஞ்சில், தேவதேவன், யுவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சு.வேணுகோபால், சூத்ரதாரி கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், ரமேஷ் என படைப்பாளுமைகளுடன் சரி நிகராக அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பது ஒரு அலாதியான அனுபவம். படைப்பிலக்கியலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43552

Next page »