அறத்தின் எதிர்முகம் : கச்சர் கோச்சர் மற்றும் தேவகி சித்தியின் டைரி

literature-main

அறத்தின் எதிர்முகம் : கச்சர் கோச்சர் மற்றும் தேவகி சித்தியின் டைரி

சமீபத்தில் விவேக் ஷான்பாகின் கச்சர் கோச்சர் என்ற குறு நாவலைப் படித்தேன் (ஆங்கில மொழியாக்கம் ஸ்ரீநாத் பேரூர். தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டதாக தெரியவில்லை).

சாதாரண கூட்டுக்குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையும் காலப் போக்கில் அவ்வாழ்க்கையில் ஏற்படும் பரிணாமத்தையும் அசாதாரண துல்லியத்துடன் முன்வைக்கும் கதை. மொழி மற்றும் மொழி நடையில் தழைக்கும் எளிமையில் புதைந்துள்ளது வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதல்கள்.

குடும்பக் கதைகள் பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலிருந்து பேசப்படுவதைத்தான் காண்கிறோம். மாறாக, கச்சர் கோச்சர் அக்குடும்பத்தின் ஆண்மகனின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டுள்ளது என்னைக் கவர்ந்தது. செயற்கையான பெண்ணிய கருத்துக்களுக்கு சிறிதளவும் இடம் கொடுக்காமல், ஆழ்நோக்குடனும் நேர்மையுடனும் எழுதுகிறார் விவேக்.

திருமணத்திற்கு முன்பும், திருமணமாகிய முதல் சில நாட்களிலும் நிகழும் உணர்வெழுச்சியை மொழிநடையின் மாற்றம் உயர்த்திக் காட்டுகிறது. இப்பகுதியில் மட்டுமே மொழி எளிமையை உதறி கவித்துவம் பெறுகிறது. பெரும்பாலும் ஆண்களின் காதல் அனிச்சையானது. ஏன் எதற்கு என்றெல்லாம் ஆராய்வதில்லை. வாழ்க்கையின் ஒரு நிகழ்பாடாக பரிசீலனையின்றி அவர்களால் ஒப்புக் கொள்ள முடியும். அனீதாவின் கணவனும் அப்படித்தான். ஆனால் பெண்களின் காதல் சற்று அறிவுப்பூர்வமானது. ஆணின் குணங்களை (உ. திறமை, தன்னம்பிக்கை, சுதந்திரமான நோக்கு) மதிப்பிட்டே அது வளர்கிறது. In that sense, their love is conditional. அனீதா அத்தகைய பெண்.

இது காதலைப் பற்றிய கதை அல்ல. ஆனால் அதை ஆராய்வதன் மூலம் ஷான்பாக் கதாப்பாத்திரங்களுக்கு மேலும் அருகே நம்மைக் கொண்டு செல்கிறார்.

நாவலில் இரு முக்கியமான மைய ஓட்டங்கள் பிணைக்கப்பட்டுள்ளன:

(1) கூட்டுக்குடும்பத்திற்குள் திருமணமாகி வரும் ஒரு பெண்ணின் பார்வையிலும் அக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவளுடைய கணவனின் பார்வையிலும் ஈடுசெய்ய முடியாத வேறுபாடு முளைக்கின்றது. அவர் அவர் கோணத்தில் அவை சரியான பார்வையாக இருந்தும், இணை கோடுகள் போலத் தனித்து நிற்கின்றன.

அனீதா கறாரான நோக்குடன் குடும்பத்தினர்களின் “இன்றைய” நடத்தையை மதிப்பிடுகிறாள். அவர்களுடைய குணாதிசயங்கள் அவளுக்கு அசையா குளம்போல. அவனுக்கோ அவை பாயும் நதி போல – ஊற்றுண்டு, முன்னும் பின்னும் உண்டு, விசை உண்டு, அசைவுண்டு. எனவே அவர்களிடமிருக்கும் குறைகளை அவனால் இயல்பாகக் கடந்து செல்ல முடிகிறது. அனீதாவுக்கு அவை பாறைப்போல் கனத்து உறைந்து நிற்கின்றன. இதில் சரியான / தவறான பார்வை என்று எதுவும் இல்லை.

“It’s natural to ask, I suppose, why the six of us should live together. As natural as it is for families to pretend that they desire what is thrust upon them as inevitability. It’s one of their strengths”

காலப்போக்கில் கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பே செயற்கையான வடிவமாக மாறிவிட்டது. செயற்கையான அமைப்பினால் ஏற்படும் முரண்பாடுகளையும், அந்த அமைப்பு மாறி வரும் திருப்பு முனையில் சிக்கிக்கொண்டுள்ள தலைமுறையின்  தத்தளிப்புகளையும் நுட்பமாகச் சித்தரிக்கின்றது கச்சர் கோச்சர்.

organisation, and would gradually grow incensed as she told me about her day. The things she said about men I took as applying to myself. I could only sit there mute, feeling vaguely guilty. She might say, ‘How could you break her arm simply because the tea was not to your taste?’ Or, ‘Do you kill your wife because she forgot to leave the key with the neighbour?’ I knew that tea shouldn’t lead to a broken arm or a forgotten key to murder. It wasn’t about the tea or the key: the last strands of a relationship can break from a single glance or a moment of silence. But how was I to explain this to her?”   கச்சர் கோச்சர் ஆணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டது போல “தேவகி சித்தியின் டைரி” சிறுவனின் கோணத்திலிருந்து சொல்லப்படுவது கதைக்கு முக்கியத்துவத்தை கூட்டுகிறது. சிறுவனாக இருப்பதனால் ஒருவரையும் சாராமல் அவதானிப்புகளை மட்டுமே முன்வைக்கிறான்.(சிறுவனின் “cuteness” மட்டும் சற்று மிகையாகத் தோன்றியது. எழுதியது – ஒப்பு நோக்குகையில் – இளைய ஜெயமோகன் என்று நினைவூட்டியது).   இரண்டுமே ஆழம்மிக்க, வலிமையான கதைகள்.

ப்ரியம்வதா

 

    மீண்டும் புதியவர்களின் கதைகள் – பிரியம்வதா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
அடுத்த கட்டுரைஎன்னைப்பற்றிய ஆவணப்படம் -கடிதங்கள்