ஷாஜி கட்டுரை

அன்புள்ள ஜெயமோகன்,

ஷாஜியைக் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். உங்கள் பார்வைக்கு.
http://idlyvadai.blogspot.com/2010/09/blog-post_10.html

அன்புடன்,
சேதுபதி

அன்புள்ள சேதுபதி

ஷாஜி இசை விமர்சனங்கள் எழுதியபடி தமிழில் நுழைந்தமைக்கு நான் ஒரு காரணம். அதற்கு முன் அவர் ஆங்கிலத்தில் சில இசை இதழ்களில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தார்.

அவரது இசை விமர்சனங்களை தமிழில் வெகுஜனக்கலை குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கான ஒரு தொடக்கப்புள்ளியாகவே நினைக்கிறேன். உங்கள் விமர்சனங்கள் விவாதத்தை முன்னெடுத்தால், பல கோணங்களில் இருந்து ஆய்வுகள் வந்து நம் கண்ணெதிரே மாபெரும் அமைப்பாக திரண்டிருக்கும் வெகுஜனக்கலையை மதிப்பிட நம்மால் முடிந்தால் அதுகூட ஷாஜியின் பங்களிப்பாகவே அமையும்

என் கருத்துக்களை ஷாஜியின் கூட்டத்திலேயே சொல்கிறேனே.

உங்கள் கட்டுரை வழக்கமான இலக்கியப்பூசலின் நடையில் அமைந்தது துரதிருஷ்டவசமானது. அதற்கு வந்த எதிர்வினைகளைப்பார்க்கையில் நம் வாசகர்கள் இந்த வசை- வழிபாடு மனநிலையில் இருந்து வெளியேறவே இல்லை என்ற என் எண்ணத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது. இந்த தளத்தில் நின்று எழுதுபவர்கள் என் ஆதர்சமான இளையராஜாவை பாராட்டுவதே அவருக்கு இழைக்கப்படும் அவமானம்

ஜெ

முந்தைய கட்டுரைமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்
அடுத்த கட்டுரைஉயிர்மை நிகழ்ச்சி