பினாங்கில் நான்காம்நாள்..

இன்றும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமத்தில் இருக்கிறேன். இங்குள்ளவர்களுக்கு தேவையான ஓர் ஆன்மீகச்சூழல் இங்கே உள்ளது என நினைக்கிறேன். ஒரு அன்னிய தேசத்தில் தங்கள் கலாச்சாரம் மதம் மொழி ஆகிய மூன்றையுமே ஒன்றாகவே எண்ணி பாதுக்காக்கவேண்டிய நிலை இம்மக்களுக்கு இருக்கிறது. இங்கே இந்துமதம் தமிழ் தமிழர் வாழ்க்கை மூன்றையும் பிரித்துப்பார்க்க எவரும் முயல்வதில்லை என்று பட்டது

நேற்று மாலை கீதையும் யோகமும் என்ற தலைப்பில் பேசினேன். குருகுலத்தில் கிட்டத்தட்ட 200 பேர் வந்திருந்தார்கள். வியாழக்கிழமை தோறும் நடக்கும் கூட்டம். வழக்கமாக வருபவர்கள்தான். மாலையில் கோலாலம்பூரில் இருந்து நவீனும் மணிமொழியும் வந்திருந்தார்கள்.நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்

இன்றுமாலை சுங்கைப்பட்டாணி தமிழ் எழுத்தாளர் சங்க கூட்டத்தில் நவீன இலக்கியம் பற்றி பேசுகிறேன்

முந்தைய கட்டுரைகணியான் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசு.வேணுகோபால், ஒரு கடிதம்