இன்று முதல் கீதை உரை

1

கோவையில் இன்று மாலை ஆறுமணிக்கு கிக்கானி பள்ளி வளாகத்தில் கீதையுரை ஆற்றுகிறேன்.

நம் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் கடலூர்,சென்னை வெள்ளநிவாரணப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீதை அந்தக் களத்திலேயே கிடைப்பதாக.

பெரும்பாலானவர்கள் வரமுடியாத சூழலிலும் முன்னரே முடிவுசெய்தமையால் இதை நடத்திவிடலாமென நினைத்தோம். ஆர்வமுள்ளவர்கள் வரலாம்.

தொடர்ச்சியாக நான்கு நாட்கள். இத்தகைய உரையை நான் இதுவரை ஆற்றியதில்லை. உரை என் வெளிப்பாட்டு வடிவமும் அல்ல. ஆர்வமுள்ள முகங்கள் முன்னால் இருந்தால் என்னால் பேசிவிடமுடியுமென நம்புகிறேன்.

தத்துவவாதியாக ஆன்மீகவாதியாக என் தெளிவு குறித்தும் ஐயமுண்டு. ஆயினும் ஓர் இலக்கியவாதியாக என் தகுதி குறித்து நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அந்த பீடம்மீது நின்று இவ்வுரையை ஆற்றலாமென நினைக்கிறேன்.

கீதையின் வரலாறு, தத்துவம், மெய்யியல் என்பது தலைப்பு. முதல்நாள் கீதையின் வரலாற்றுப்பின்புலம். இரண்டாவதுநாள் அதன் தத்துவப்பின்புலம். மூன்றாவது நாள் அதன் தத்துவவிவாதமுறைமை. நான்காவதுநாள் அதன் ஆன்மிக மறைஞான உள்ளடக்கம் என வகுத்துக்கொண்டிருக்கிறேன்

கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. அன்புடன் அழைக்கிறேன் , வருக. [இதற்கெல்லாம் பெருந்திரளாக எல்லாம் வரமாட்டார்கள் என்பது ஒரு தைரியத்தை அளிக்கிறது ;)) ]

நாள் டிசம்பர் 6, 7, 8,9 [நான்குநாட்கள்]

நேரம் மாலை 600

இடம் சரோஜினி நடராஜ் அரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம். கோவை.

பிகு

அரங்கில் வெண்முரசு வரிசை நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்

===========================================================

கீதையுரை ஏன், எப்படி,எதைப்பற்றி?

கீதையுரை எவ்வாறு ?

தொடர்புக்கு

9500400093
9842731068

முந்தைய கட்டுரைமழை கடிதங்கள்- 2
அடுத்த கட்டுரைநிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு -கடிதம்