கெ.எம் மாத்யூ

அன்புள்ள ஜெ.மோ. அவர்களுக்கு,

கே.எம். மத்யூ என்பவரைப்பற்றி, அவரது மரணத்திற்கு பின்னால், தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிப்பட்டு வருகின்றன. கேரளாவிலும், பத்திரிக்கை துறையிலும் அவர் முக்கியமானவரா?, அவரது சுயசரிதையும் முக்கியமானதா?, அவரைப்பற்றி உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அவரைப் பற்றிய அல்லது அவரைப்ப்ற்றிய புத்தகங்கள் போன்ற விவரங்களை எனக்கு தெரியப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

கே.ஜே.அசோக்குமார்.

அன்புள்ள அசோக் குமார்

டாக்டர் கெ.எம்.மாத்யூ மலையாள மனோரமா மற்றும் எம்ஆர்எஃப் டயர்ஸ் குழுமத்தின் உரிமையாளர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். மலையாளமனோரமாதான் கேரளத்தில் முதலிடம் வகிக்கும் நாளிதழ் மற்றும் பிரசுர நிறுவனம். அதன் ஆசிரியராக அவர் இருந்தார். திரு மாத்யூ தனிப்பட்ட முறையில் சீரிய இலக்கியத்தில் ஆர்வமுடையவர். இலக்கியவாதிகளை ஆதரித்தவர். மலையாள மனோரமா குழுமத்தின் பாஷாபோஷினிதான் கேரளத்தின் முதன்மையான இலக்கிய இதழ். அவரது சுயசரிதை கடந்த அரைநூற்றாண்டு கேரள இதழியல் -பண்பாட்டு சரித்திரத்தை ச்சொல்வதும்கூட. அவருக்கு இருக்கும் முக்கியத்துவம் அப்படி வந்ததே

ஜெ

முந்தைய கட்டுரைமனித ஆயுதம்
அடுத்த கட்டுரைஅரங்க மனிதன்