பழைய நினைப்புடா

இந்த இணையதளத்தில் [ http://www.neerottam.com/artpost/ ] அந்தக்கால அச்சு இதழ்களின் படங்களை வலைப்படுத்தியிருக்கிறார்கள். என்னைப்போன்று நாற்பதுக்கு மேல் வயதுள்ளவர்கள் மலரும் நினைவுகளுக்காக வாசிக்கலாம். அறுபதுக்கு மேல் வயதானவர்கள் மலரும் நினைவுகளுக்குள் செல்லாமலிருப்பதே மேல் என்று சொல்வேன். அது தேவையில்லாமல் ஒரு மனச்சுமையை உருவாக்கி செயல்மயமான உலகில் இருந்து விலக்கி விடும்.

ஒருமுறை பாலுமகேந்திராவைச் சந்தித்தபோது அவரது சிறுவயது படங்கள் மற்றும் குடும்ப படத்தொகுதிகளை மறு அச்சு போட்டு வைத்து பேசிக்கொண்டிருந்தார். அவற்றை அப்படியே தூக்கி கடாசும்படிச் சொன்னேன். கலைஞனுக்கு சென்றகால ஈர நினைவுகள் போல சுமை ஏதுமில்லை. அவன் நிகழ்காலத்தில் வாழ வேண்டும். இறந்தகால ஏக்கம்கூட நிகழ்காலக் கலையின் வடிவில் மட்டுமே வெளிப்பட வேண்டும்

முந்தைய கட்டுரைசில எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைமுச்சந்தி இலக்கிய வட்டம்