சென்னைக்கு சிறில்

இந்த இணையதளத்தினை நடத்தும் நண்பர் சிறில் அலெக்ஸ் கிட்டத்தட்ட எட்டுவருடக்காலம் அமெரிக்காவில் கணிப்பொறித்துறையில் வேலைபார்த்துவிட்டு சொந்த மண்ணில் இருக்கவேண்டும் என்ற விருப்புடன் சென்னைக்கு திரும்புகிறார். ஊர்திரும்புவதுகுறித்து நான் அவருக்கு அளித்த பயமுறுத்தல்கள் எதுவும் பலிக்கவில்லை என்று நினைக்கிறேன். வேலையின் உற்சாகம், அழகிய சுத்தமான சூழல், குழந்தைகளுக்கு உத்தரவாதமான எதிர்காலம் ஆகியவற்றை அவர் இழக்கிறார்.

மறுபக்கம் எப்போதும் சூழ்ந்திருக்கும் தனிமையை வெல்கிறார். சமானமான பல மனங்களை கண்டுகொள்ள முடியும். கலை இலக்கியம் போன்ற துறைகளில் ஆர்வமிருப்பின் உற்சாகமும் படைப்பூக்கமும் நிறைந்த ஓரு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். பத்துவருடம் அமெரிக்காவில் இருந்தபின் ஊர் திரும்பி மூன்றுவருடங்களாக இங்கிருக்கும் கெ.பி.வினோத் இசையிலும் இலக்கியத்திலும் ஒரு சுற்று வந்துவிட்டார். எட்டுமடங்கு சம்பளம் தருவதாக இருந்தாலும் சென்னை விட்டு போவதாக இல்லை. போவதென்றால் நாகர்கோயிலுக்கு போக தயார் என்கிறார். சிறிலும் அப்படிச் சொல்வார் என எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்
அடுத்த கட்டுரைவளைகுடா அடிமைத்தனம்