சூரியதிசைப் பயணம் – 19 நிலம்

வடகிழக்கின் நிலம் பெரும்பாலும் கேரளம் போன்றது. மலைச்சரிவுகள், காடுகள் அடர்ந்த பள்ளத்தாக்குகள், வளைந்து செல்லும் பாதைகள், சிறிய வீடுகள். இங்கே கேரளம் போலவே தெரு என்ற அமைப்பு மிகக்குறைவு. பெரும்பாலான வீடுகள் தங்களுக்கான சிறிய வேலி வளைவுக்குள் தோட்டம் நடுவே அமைந்துள்ளன. பல வீடுகளுக்கு முன்னால் குளமும் உள்ளது.

வயல்வெளிகள் வருடத்தில் மூன்றுமாதம் அப்படியே விடப்படுகின்றன. இன்னமும் வடகிழக்கு நிலம் வளமாக இருப்பதற்கு இந்த ஓய்வும் ஒரு காரணம். நீர் வளம் விரிவாக இருந்தும் பாசன வசதி இல்லாமலிருப்பதும் இந்த ஓய்வுக்குக் காரணமாக இருக்கலாம்

வடகிழக்கு முழுக்க பசுக்கள். ஆனால் பால் வங்காளத்தில் இருந்து வருகிறது. ஏனென்றால் எழுபதுகளில் தமிழகத்தில் தொடங்கிய வெண்மைப்புரட்சி இங்கே வந்துசேரவில்லை. இங்குள்ள பசுக்கள் அரை லிட்டர் கறந்தாலே கொண்டாட்டம். ஆனால் இரவுபகலாக மேய்ந்துகொண்டே இருக்கின்றன

வடகிழக்கில் எங்குபார்த்தாலும் குளங்கள். ஆனால் மீன் ஆந்திராவிலிருந்து வருகிறது. இங்குள்ளவர்களின் மீன் தேவையை இந்தக்குளங்களும் ஆறுகளும் தீர்ப்பதில்லை. மீன் பதினைந்த்நாள் பழையது. சென்ற ஐந்தாண்டுக்காலத்தில் மேகாலயா மட்டும் ஏராளமான தனியார்க்குளங்களை உருவாக்கி மீன் உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவை அடைந்துள்ளது

வடகிழக்கில் பன்றிதான் முக்கியமான மாமிசம். ஆனால் அது பெரும்பாலும் வங்கத்திலிருந்தே வருகிறது. துணி நெசவு உள்ளது, ஆனால் பெரும்பாலான துணி வங்காளத்து இறக்குமதிதான்.

இன்னமும் தொடங்கப்படாத ஒரு பொருளியல். ஆகவே பெரும்பாலும் மானுட உழைப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலம்

மேலும் படங்கள்

முந்தைய கட்டுரைபங்குச்சந்தை- கடிதம்
அடுத்த கட்டுரைபுலியூர் முருகேசனின் புனைவுச்சுதந்திரம்