குந்தவை பீபி

அன்புள்ள திரு ஜெயமோகன்,

வணக்கம். நான் தங்களின் தீவீர வாசகன். தங்களின் படைப்புகளை எனது நண்பர்களுக்கும் பெருமையுடன் அறிமுகம் செய்து வருகிறேன். . சமீப காலமாக வலைதளங்களில் குந்தவை நாச்சியார் தனது இறுதி காலத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டதாகவும் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை திருச்சிக்கு அருகில் ஒரு மசூதிக்குள் இருப்பதாவும் செய்திகள் வருகின்றன….இது தொடர்பான சுட்டியை இவ்வஞ்சலுடன் இணைத்து உள்ளேன். பல நூல்களும் இவ்வாறாக வந்துள்ளன. நான் ஒரு நூலை படித்து தெளிவுக்கு பதில் குழப்பம் அடைந்து உள்ளேன். எனவே…தங்களின் விளக்கம் கேட்டு தெளிவு பெற விரும்பிகிறேன …இருள் போக்கி மருள் நீக்குக…

நன்றி

பா. துரை ராஜ்

http://generationneeds.blogspot.in/2012/04/blog-post_09.html

http://generationneeds.blogspot.in/2012/04/blog-post_12.html
http://generationneeds.blogspot.in/2012/03/blog-post_30.html

அன்புள்ள துரைராஜ்

இப்போது தமிழில் அச்சில் வெளிவரும் மூன்று நூல்களில் ஒன்று இஸ்லாமிய நூல் என்று ஒரு இஸ்லாமியநண்பர் சொன்னார். எந்த புத்தகக் கண்காட்சியிலும் இதை நீங்கள் காணலாம். இஸ்லாமிய இதழ்கள் இருநூறுக்கும் மேல் வந்துகொண்டிருக்கின்றன. எந்த இஸ்லாமிய நண்பர் இல்லத்திற்குச் சென்றாலும் உறைபிரிக்கப்படாத நாலைந்து பத்திரிகைகளை காணலாம்.

காரணம் ஒன்றே. முன்பு சோவியத் ருஷ்யா கடைப்பிடித்த வழி. இங்குள்ளவர்களுக்கு நிதிவரும் வழியாக உள்ளது இந்த நூல்களும் இதழ்களும்தான். பெரும்பாலும் இதழ்களில் ஒரே விஷயத்தையே திரும்பத்திரும்ப எழுதுவார்கள். அப்படியே நகல் செய்து எழுதுவதுகூட உண்டு. நாநூறு பிரதி அச்சிட்டு ஆங்காங்கே கொடுத்து கணக்கு முடிக்கவெண்டும்.

காசுவாங்கினோமா கம்மென்று இருந்தோமா என்றில்லாமல் சிலர் இந்தமாதிரி ‘ஆராய்ச்சி’களில் ஈடுபட ஆரம்பித்துவிடும்போதுதான் வம்பே ஆரம்பிக்கிறது. முன்னர் குலசேகர ஆழ்வார் மதம் மாறினார் என்று ஒரு பீலா உலவியது நினைவுக்கு வருகிறது.

தெய்வநாயகம் என்பவர் இந்துமதமே கிறிஸ்தவத்தில் இருந்து உதயமானது என்கிறார். இவர்கள் ஏன் தங்களுக்குள் ஒரு பெரிய விவாதத்தை நடத்தி சண்டை போட்டு முடித்துவிட்டு மேலே பேசக்கூடாது?

ஆனால் இதை வேடிக்கையாக எடுத்துக்கொள்வதும் சிக்கலே. கிறிஸ்தவர்கள் அச்சோடு சரி. இவர்கள் கொஞ்சநாள் கழித்து குந்தவை முஸ்லீம் இல்லை என்று சொல்வது தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துகிறது என ஆரம்பித்துவிடுவார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஅண்டத்திற்குள் அமிழ்ந்துவிடும் பிண்டத்தின் அலைக்கழிப்பு(விஷ்ணுபுரம் கடிதம் ஏழு)
அடுத்த கட்டுரைராய் மேக்ஸிமம்