இயல்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தினமும் தங்கள் இணைய தளத்தில் பதிவுகளைப் படித்துவிட்டே வேலையைத் துவங்கும் எனக்கு, தாங்கள் “இயல்” விருது பெற்றமைக்கான வாழ்த்துக் கடிதத்தை இவ்வளவு தாமதமாக எழுதுவது வெட்கமளிக்கிறது. விடுமுறை தினமான இன்று கூட இதை எழுதாவிட்டால், மேலும் தாமதமாகிவிடுமோ என்ற பயத்தால் அவசரமாக எழுதுகிறேன். உண்மையில், விருதுகளையெல்லாம் தாண்டி நிற்கும் உங்களுக்கு இந்த விருதால் கிடைக்கக் கூடியது ஏதுமில்லை. இருப்பினும் , இயல் விருது தன்னைத்தானே கௌரவித்துக் கொண்டுள்ளது என்று சம்பிரதாயமாகச் சொன்னாலும், என்னைப் போன்ற உங்கள் வாசகர்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கடந்த முறை நீங்கள் சிங்கப்பூர் வந்தபோது பேசியது இன்னும் பசுமையாய் மனதுக்குள் இருக்கிறது. திருக்குறள் பற்றியும், இந்திய பண்பாட்டைப் பற்றியும் எளிய அறிமுகம் தந்து பேசியது என்றென்றும் நினைவில் இருக்கும். வெண்முரசு-விற்கு பின் திருக்குறள் உரையையும் தாங்கள் எழுதத் தொடங்கலாம் (தினம் ஒரு குறள் விளக்கம் ?) என்பதே ஒரு எளிய வாசகனாக என்னுடைய எண்ணம்.

தங்கள் கடிதத்திற்குப் பின், மீண்டும் தீவிரமாக எழுதத் துவங்கியிருக்கிறேன். சிறுகதை என்றால் என்ன என்பது எனக்கு ஓரளவிற்கு பிடிபட்டிருக்கிறது. கூகிள் தமிழ் மென்பொருளில் எழுதுவதுதான் சற்று சிரமமாய் இருக்கிறது. பின்பொரு முறை, என் கதைகளை அனுப்பி வைக்கிறேன். தற்போது, தங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ள தயக்கமாய் இருக்கிறது.

மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்.

அன்புள்ள கணேஷ்

நன்றி

ஜூனில் கனடா செல்கிறேன். ஒரு நல்ல பயணத்துக்கான எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெமோ! வணக்கம். இயல் விருது பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முன்பெல்லாம் எனக்கு செ.யோகநாதன்,பிரபஞ்சன் இருவரையும் மிகப்பிடிக்கும்.இப்போ உங்களையும் அ .முத்துலிங்கம் அவர்களையும் பிடிக்கிறது. மேற்கண்ட நால்வரையும் எனக்கு ஏன் பிடிக்கவேண்டும்?-பால் வரைந்து அமைத்தது,அவ்வளவுதான் சொல்வேன்!-நன்றி.

ரமேஷ் சதசிவம்

அன்புள்ள ரமேஷ்

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 13
அடுத்த கட்டுரைமூதாதையர் குரல்