நம்மாழ்வார் நினைவு இன்று

வணக்கம்.

நெஞ்சார்ந்த வணங்குதல்களும் பிரார்த்தனையும்

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் அன்று ஜெயமோகன் அவர்களின் “யானை டாக்டர் ” சிறுகதையினை மீண்டும் வெளியிட உள்ளோம்.

“யானை டாக்டர்” சிறுகதை ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டு 4 வருடங்களுக்கு முன்பு வெளி வந்தது.இன்று வரை இந்த சிறுகதை வீரிய விதையாக பலதரப்பட்ட மக்களின் பதிந்து உள்ளது.”யானை டாக்டர் ” கிருஷ்ண மூர்த்தி அவர்களின் வாழ்வினை அடிப்படையாக கொண்ட உண்மை கதை இது.

தன் வாழ்வின் பெரும் பகுதியினை வன விலங்குகளின் நலனுக்காக குறிப்பாக யானைகள் குறித்த அவரது பணி உலகம் முழுவதும் சென்று சேர்ந்து உள்ளது.யானைகளின் மனநிலை,உடல் மொழி,பிரசவம் மற்றும் அவற்றுக்கான சவப் பரிசோதனை என பல தளங்களில் தன்னை ஈடு படுத்திக் கொண்ட மனிதனின் உயிர்ப்பான கதை.

நம்மாழ்வார் போலவே இயற்கையின் முழுமையை உணர்ந்த யானை டாக்டர் கோவில்களில் வாழும் யானைகளின் வாழ்வியல் அதன் நெருக்கடிகள் குறித்தும் தீவிர பணியாற்றி உள்ளார் .இன்று வருடம்தோறும் நடைபெறும் யானை புத்துணர்வு முகாம்கள் இவரின் வடிவமைப்பாகும்.

ஜெயமோகன் அவர்களின் அறம் தொகுப்பில் இடம் பெற்ற இந்த கதை பல உறுதியான மனிதர்களை கூட கதறி அழவைத்தது,பலரின் மனதில் நீங்காத வண்ணம் வாழும் இந்த புத்தகம் பல முறை மறு பிரசுரம் செய்யப்பட்டு பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக கூட வழங்கப்பட்டது.தங்கள் வீட்டின் விசேசங்களின் போது இந்த புத்தகம் கொடுத்து மகிழ்ந்தனர்.தமிழ் பேசும் மக்கள் தாண்டியும் இந்த படைப்பு அனைவரின் ஆன்மாவினையும் சென்று அடைய வேண்டி ஆங்கிலத்திலும் நண்பர்களால் மொழிபெயர்க்கப் பட்டு தற்போதைய புத்தகத்தில் இணைக்கப் பட்டு உள்ளது.

யானை விரும்பாத குழந்தைகள் உண்டா உலகத்தில்,இந்த கதையினை உள்வாங்கி குழந்தைகள் தங்கள் மொழியில் நாடகமாக நடித்து காட்ட உள்ளனர் .நிச்சயம் உங்கள் வாழ்நாளில் நிச்சயம் மறக்க முடியாத நாளாக அமையும்

.நம்மாழ்வார் அய்யாவின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவரும் தங்கள் கைகளை இருக்க கோர்த்து கொண்டு முன்னேறி செல்ல வேண்டிய கால கட்டம் இது…

நிகழ்வு நடைபெறும் நேரம் மற்றும் இடம்,

2014 டிசம்பர் 30 , காலை 11 மணி..
வானகம்,சுருமான் பட்டி,கடவூர்.

நிகழ்வின் முக்கிய ஆளுமைகள்

எழுத்தாளர் ஆயிஷா நடராஜன்
மருத்துவர் ஜீவா
மரம் தாத்தா நாகராஜன்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரன்
சூழலியலாளர் மனிஷ் பியுஸ்
நாடக கலைஞர் வேலுசரவணன், ராம்ராஜ்

வானகம் – குக்கூ – இயல்வாகை

அறம் அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைவிழா கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73