கண்ணனின் முகம்

அன்புள்ள ஜெமோ,

நீலம் பகுதி 9, பெயரழிதல் முதல் பத்தியிலேயே ஆகாவென சொல்ல வைத்து விட்டது. வேறு எந்த பகுதியின் படங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இப்பகுதியின் படத்திற்கு உண்டு. இது வரை வந்த அனைத்து வெண்முரசின் பகுதிகளின் படங்களில் ஒன்றில் கூட எந்த ஒரு கதை மாந்தரின் முகத்தையும் ஷண்முகவேல் வரைந்ததில்லை. எனக்கு தெரிந்த வரையில் கார்க்கோடகனின் முகம் மட்டுமே வந்துள்ளது. ராதையின் கண்கள் அந்த சோலையினூடாக.

ஆனால் கண்ணன் ஷண்முகவேலையும் கிறங்க வைத்து வரைய வைத்து விட்டான். இப்பகுதியில் ராதை கண்ணனுக்கு மயிற்பீலி சூடும் இடத்தை ஒரு கனவு போல என்னுள் இறக்கி விட்டார் ஷண்முகவேல். குழந்தயைின் முன் ஒரு பருவப் பெண்ணால் மையலுடன் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு வித விதமான பாவத்துடன் ராதை கண்ணனை அணுகுவதன் மூலம் சொன்னீர்கள். இன்று அதை வரைந்தே காட்டி விட்டார். காலாகாலத்திற்கும் என்னுடன் இருக்கப்போகும் ஒரு படம். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து

வெண்முரசுவிவாதங்கள்

முந்தைய கட்டுரைபிரிவின் துயர்
அடுத்த கட்டுரைஒரு டாக்டர்!