வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்

பொதுவாக நன்றாக சாப்பிட கூடிய எனது கணவர் களைப்பாகவும், தடுமாற்றத்துடனும் இருப்பதாகபட்டது. தனது கைகளை உணவு மேசை மேல் வைத்து கொண்டு மெல்ல அசை போட்டு சாப்பிட்டவாறே அறையில் எதையோ பார்த்துக் கொண்டும், என்னை பார்த்துக்கொண்டும், பார்வையை விலக்கி கொண்டும் இருந்தார். வாய் துடைக்கும் துண்டால் வாயை துடைத்து விட்டு தோளை குலுக்கியவாறு உண்பதை தொடர்ந்தார். எங்களிருவருக்குமிடையில் எதுவோ உருவாகியிருந்தது. அவ்வாறு இல்லை என அவர் என்னிடம் நிரூபிக்க முயன்றாலும் உபயோகமில்லை.

‘என்ன நீ என்னையே வெறிச்சி பார்த்து கொண்டிருக்கிறே?” என கேட்டார். ‘என்ன விஷயம்?” என்று சொல்லியபடியே முள் கரண்டியை கீழே வைத்தார்.

‘நான் வெறிச்சி பார்த்தேனா?” என்றபடியே முட்டாள்தனமாக தலையை ஆட்டினேன், முட்டாள்தனமாக.

தொலைபேசி மணியடித்தது. ‘அதை எடுக்காதே” என்றார். ‘இது உங்கள் அம்மாவாக இருக்கலாம்” என்றேன். ‘டீன் டீனைப்பற்றிய ஏதாவது ஒரு விஷயமாக இருக்கலாம்.”

‘வேண்டுமென்றால் பாரேன்” என்றார்.

பேசியை எடுத்து ஒரு நிமிடம் காதில் வைத்து கேட்டேன். அவர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். நான் எனது உதட்டை கடித்துக்கொண்டே தொலைபேசியை கீழே வைத்தேன்.

‘நான் சொன்ணேனா இல்லையா?” என்றார். மறுபடியும் உண்ணத் தொடங்கினார். பின்பு துண்டை தூக்கி தட்டில் எறிந்துவிட்டு, ‘கடவுளே, ஏன் மனதர்கள் அவரவர் வேலைகளைப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? நான் என்ன தப்பு செய்தேன் என்று சொல்லு, நான் கேட்டுக் கொள்கிறேன். இது ஞாயமேயில்லை. அவள் செத்து போயிட்டா இல்லையா? மற்றவர்களும் என்னுடனிருந்தார்கள், நாங்கள் எல்லோரும் பேசித்தான் முடிவெடுத்தோம்.

அப்போதுதான் நாங்கள் அங்கே போய் சேர்ந்திருந்தோம். பல மணிநேரம் நடந்து சென்றிருந்தோம். உடனே திரும்ப முடியாது எங்களின் கார் நிறுத்திய இத்திலிருந்து ஐந்து மைல் தொலைவியிருந்தோம். அதுவும் அதுதான் முதல் நாள், என்ன பெரிய மயிறு, எனக்கு ஒன்றும் தப்பாக தெரியவில்லை, இல்லை எனக்கு தப்பாக தெரியவில்லை. என்னை அப்படி பார்க்காதே, கேட்டாயா? நீயெல்லாம் என்னைப் பார்த்து ஞாயம் சொல்வதை ஒப்புக்கொள்ளமாட்டேன். நீ அதை சொல்ல கிடையாது”.

‘உங்களுக்கு தெரியும்” என்றபடியே தலைய ஆட்டினேன்.

‘கிளேர், எனக்கு என்ன தெரியும்? சொல்லு, என்னிடம் சொல்லு என்ன தெரியுமென்று. எனக்கு ஒன்றைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ‘இந்த விஷயத்தில் நீ அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டாம்” என்பது மட்டும்தான்” என்றபடியே என்னை, தான் ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்ப்பதாக நினைத்துக் கொண்டு பார்த்தார். ‘அவள் சொத்துப் போயிருந்தாள். செத்துட்டா செத்துட்டா, நான் சொல்றது காதுலே விழுகிறதா?” ஒரு நிமிடத்திற்கு கழத்து, ‘இது மகா கொடுமைதான், ஒப்புக் கொள்கிறேன். அவள் ஒரு இளம் பெண், இது கொடுமைதான், எனக்கும் பாவமாகத்தான் உள்ளது. மற்றவர்களைப் போல் நானும் பரிதாம்படுகிறேன். ஆனால் அவள் இறந்து போயிருந்தாள் கிளேர், இறந்திருந்தாள். இப்போது அதை விட்டுத் தெலைக்கலாம்”.

‘தயவு செய்து கிளேர், நாம் இப்போது இதை விட்டுவிடலாம்”.

‘அதைத்தான் சொல்றேன்”. என்றேன். ‘அவள் செத்துட்டாள், உங்களுக்கு தெரியவில்லையா? அவளுக்கு உதவி தேவையாக இருந்ததில்லையா”.

‘என்னால் முடியவில்லை” என்றபடி தனது கைகளை தூக்கியபடி மேசையிலிருந்து நாற்காலியை பின் தள்ளிவிட்டு, தனது சிகரெட்களையும் பீர் டப்பாவையும் எடுத்து கொண்டு முன்புற வாசலுக்கு சென்றார். முன்னும் பின்னுமாக சில நிமிடங்கள் நடந்துவிட்டு, புல்வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து நாளிதழை மறுபடியும் எடுத்தார். முதல் பக்கத்தில் அவரது பெயரும் அவரது நண்பர்களின் பெயர்களும் இருந்தது. பிணத்தை முதலில் கண்டவர்கள் என போட்டிருந்தது.

பாத்திரம் கழுவும் மேடையை பிடித்துகொண்டு ஒரு நிமிடம் கண்ணை மூடினேன். நான் இதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதை விடவேண்டும். என் மனத்தியிருந்தும் பார்வையியிருந்தும், கடந்து செல்ல வேண்டும். மெல்ல என் கண்களை திறந்தேன். என்ன ஆகும் என்பதை தெரிந்தே, நான் என் கையை பாத்திரம் கழுவும் தொட்டி மேல் அடுக்கி வைத்திருந்த கண்ணாடி பொருட்களையும் பாத்திரங்களையும் நோக்கி வீசி, அனைத்தையும் கீழே தள்ளி விட அவை தரையில் விழுந்து உடைந்து சிதறின.

அவர் அசையவேயில்லை. அவருக்கு கேட்டிருக்கும் என்பது எனக்கு தெரிந்து தானிருந்தது. கூர்ந்து கேட்பது போல தலையை உயர்த்தினார். ஆனால் வேறு வகையான அசையோ, திரும்பியோ பார்க்கவில்லை. அவர் திரும்பாததற்காக அவரை நான் வெறுத்தேன். கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு பின் தனது சிகரெட்டை இழுத்து கொண்டே நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். ஏகாந்தமாக அமர்ந்து சிகரெட் பிடித்து கொண்டு, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவரை பார்க்கும் போது எனக்கு எரிச்சலாக இருந்தது. காற்று அவரது வாயிலிருந்து சிகரெட் புகையை மெலிதாக வெளியே தள்ளியது. இதை ஏன் நான் கவனிக்கிறேன். இப்படி அவர் அமைதியாக உட்கார்நது, கேட்டுக் கொண்டும் புகைத்துக் கொண்டுமிருப்பதை, பார்க்கும் போது நான் எவ்வளவு பரிதாபப்படுகிறேன் என்பது அவருக்கு எப்போதும் தெரியப் போவதில்லை.

நினைவு நாள் வாரக் கடைசி தினங்களுக்கு, ஒரு வாரம்முன்புதான் அதாவது கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மலைக்கு சென்று மீன் பிடிக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

என் கணவர், கோர்டன் ஜான்சின், மெல் டோர்ன், வெர்ன் வில்லியம்ஸ் ஆகிய நால்வரும் எப்போதும் சீட்டு, ஒன்பது பின் பந்து விளையாட்டு, மீன் பிடித்தல் ஆகிய அனைத்தையும் சேர்ந்தே விளையாடுவார்கள். முன்பாக, ஒவ்வொரு வசந்தகாலத்திலும்,
கிளங் முதல் மூன்று மாதங்கள் கோடையிலும் அவர்கள் சேர்ந்தே மீன் பிடிக்க போவார்கள். குடும்பத்துடனான பயணங்களுக்கு முன்பாக கோடைபருவத்தின் முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பேஸ் பால் விளையாட்டு குழுக்களில் கலந்து கொள்வார்கள். இதில் அவ்வப்போது சாந்தக்காரர்களின் வருகையும் ஊடாகும். இந்த நால்வருமே குடும்பஸ்தர்கள். நல்ல மனிதர்கள்தான். தங்களது பணியிலும் பொறுப்பாக செயல்பட்டவர்கள். இவர்களின் பையன்களும் பெண்களும் எங்களது மகன் டீன் உடன் பள்ளிக்கு சென்று பயின்று வந்தார்கள். வெள்ளிக்கிழமை மதியம் இந்த நால்வரும் நாச்சஸ் ஆற்றில் மூன்று நாட்கள் மீன் பிடிக்க கிளடம்பினார்கள். மேலே மலைக்கு சென்று அங்கே தங்களது காரை நிறுத்திவட்டு பல மைல் தூரம் நடந்து மீன் பிடிக்க வாகான இடம் நோக்கி சென்றனர். தங்களது படுக்கை, உணவு பொருட்கள், சமையல் சாதனங்கள், விளையாட சீட்டு கட்டு, அருந்த விஸ்கி என்று எல்லாவற்றையும் சுமந்து சென்றார்கள். அவர்கள் கூடாரமிட்டு தங்க விழையுமுன்பே, அந்த முதல் நாள் சாயந்திரத்திலேயே, ஆற்றோரம், பல மரக்கிளைக்குக்கிடையே மாட்டி நிர்வாணமாக தலைகுப்புற மிதந்து கொண்டிருந்த அந்த பெண்ணை மெல் டோர்ன்தான் முதலில் பார்த்தார். அவர் மற்ற அனைவரையும் கூவி அழைக்க, எல்லோரும் அவளை பார்க்க கூடினர்.

அவர்கள் என்ன செய்வது என்பது பற்றி ஆலோசித்தார்கள். அவர்களில் ஒருவர், அவர் யார் என ஸ்டூவர்ட் சொல்லவில்லை. அது வெர்ன் வில்லியம்ஸ் ஆக இருக்கலாம். அவர் லகுவில் சிரிக்கும் குண்டான மனிதர்-இவர்களில் அவர்களில் ஒருவர் உடனடியாக காருக்கே திரும்பப் போய்விடலாம் என சொல்லி இருக்கிறார். மற்றவர்கள் தங்கள் ஷ{க்களால் ஆற்று மணலை அனைத்து கொண்டே, தங்கலாம் என கூறியிருக்கிறார்கள். உடல் களைப்பையும், இருட்டி விட்டதையும், ‘எப்படியும்இறந்துபோன பெண் பிணம் எங்கும் போகப் போவதில்லை” எனவும் கூறி, தங்கிவிட முடிவெடுத்தனர்.

அவர்கள் தங்கள் முகாமை அமைத்துக் கொண்டு, இரவின் குளிரை விரட்ட நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டே, விஸ்கி பருக ஆரம்பித்தார்கள். நிறைய குடித்தபின் நிலவேறிய அந்த இரவில் இறந்து போன பெண்ணைப்பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவர்களில் யாரோ ஒருவர் அப்பெண் நீரோட்டத்தில் மிதந்து சென்றுவிடாதபடி ஏதாவது செய்ய வேண்டும் என்றிருக்கிறார். அவ்வாறு பிணம் இரவிலேயே அடித்து செல்லப்பட்டால் அதனால் தங்களுக்கு பிரச்சனை வரலாம் என நினைத்துள்ளார். கை விளக்குகளை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி தட்டு தடுமாறி சென்றுள்ளனர். குளிர்ந்த காற்று சுழற்றி அடித்தது. ஆற்று நீரின் அலைகள் மணல் கன்றுகளின் மேல் வந்து மோதிய வண்ணமிருந்தது. சுவர்களில் ஒருவர், யாரென எனக்கு தெரியவில்லை, அது ஸ்வேர்ட்டாக கூட இருக்கலாம். அவர் செய்யக் கூடிய ஆள்தான் ஆழமற்ற கரையருகில் மிதந்த இன்னும் தலைகுப்பு கிடந்த உடலை அவளின் கைவிரல்களை பற்றி இழுத்து வந்து ஆழமற்ற கரையோரத்தில் உள்ள மரவேர்களில் நைலான் கயிற்றால் மணிக்கட்டுகளை பிணைத்து விட்டார். அதே சமயத்தில் மற்றவர்களின் கை விளக்கு வெளிச்சம் அப்பெண்ணின் உடல் மேல் விளையாடி கொண்டிருந்தது. பின்பு அவர்கள் தங்கள் முகாமிற்கு சென்று நிறைய மேலும் விஸ்கி குடித்தார்கள். அதன் பின் தூங்கினார்கள். மறுநாள் காலை, சனிக்கிழமையன்று காலையுணவு சமைத்தபின் நிறைய காபி குடித்தார்கள். பின் நிறைய விஸ்கி, குடித்து முடித்த பின் இருவர் நதியின் மேல்புறமும் இருவர் நதியின் கீழ்புறமுமாக மீன்பிடிக்க பிரிந்து சென்றனர்.

அன்று இரவு தங்களது மீனையும் உருளைக் கிழங்கையும் சமைத்து சாப்பிட்டபின் காபியையும் விஸ்கியையும் நிறைய குடித்தனர். பின்பு பிணம் மிதந்து கிடந்த இடத்துக்கு சில கெஜ தூரத்திலேயே தங்கள் பாத்திர பண்டங்களை கழுவினாள்.

மறுபடியும் குடித்தபடியே சீட்டு விளையா தொடங்கினர். சீட்டு கண்ணுக்கு தெரியாத வரை குடித்தனர். வெர்ன் வில்லியம்ஸ் தூங்க சென்று விட்டார். ஆனால் மற்றவர்கள் பாலியல் கதைகளையும், தங்களது கூசும்படியான கடந்தகால சாகசங்களைபற்றி பேசினார்கள்.

கோர்டன் ஜான்சன் ஒரு நிமிடம் சம்மந்தமில்லாமல் தாங்கள் பிடித்த டிரொட் மீனின் உடல் திண்மையை பற்றியும், ஆற்றின் பயங்கர குளிர்ச்சிசியான நீரை பற்றி பேசும்வரை, யாரும் அந்தப் பெண்ணைப்பற்றி யோசிக்கவேயில்லை. அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவர்களில் ஒருவர் இருட்டில் லாந்தர் விளக்கு இடறி சபித்துக்கொண்டே விழும் வரை குடித்தனர். அதன்பின் தங்களின் தூங்கும் பைகளுக்குள் புகுந்து கொண்டார்கள். மறுநாள் காலை தாமதமாக எழுந்தவர்கள், அதிகமான விஸ்கியை குடித்தார்கள். குடித்துக்கொண்டே இருந்ததால் குறைவாகவே பிடித்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை, மதியம் ஒரு மணி சுமாருக்கு, தாங்கள் திட்டமிட்டிருந்தத்றகு ஒருநாள் முன்பாகவே கிளம்ப முடிவு செய்தனர். தங்களது கூடாரத்தை கழற்றி விட்டு, தூங்கும் பைகளை சுற்றி கட்டினர். பாத்திர பண்டங்களையும் பிடித்த மீனைம் தூண்டில் மற்றும் இதர சாமான்களையும், கட்டிக்கொண்டு நடையை கட்டினர். போகும் வரை அவர்கள் அந்தப் பெண்ணை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தங்களது காரை வந்து அடைந்து பிரதான சாலையில் தொலைபேசி கூண்டு வரும் வரை யாரும் பேசாமல் வந்தார். ஸ்ரூவர்ட், ஷெர்பின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் சொல்வதை உஷ்ணமான சூரியனின் வெப்பத்தை உணர்ந்த வண்ணம் நின்று கொண்டிருந்த மற்றவர்கள் கேட்டனர். தொலைபேசியின் மறுமுனையிலிருந்தவரிடம் தங்களின் பெயர் மற்ற விபரங்கள் அனைத்தையும் கொடுத்தார். அவர்கள் எதையும் மறைக்க வேண்டிய அவசியமோ அசிங்கப்படவோ ஏதுமில்லை. மேலும் இதே இடத்தில் காத்துக் கொண்டிருக்கவும் ஒப்புக்கொண்டார்கள். அலுவலகத்திலிருந்து யாராவது ஒருவர் வந்து மேலதிக விபரங்களையும் தனித்தனியாக வாக்குமூலங்களையும் பெறும் வரை காத்திருக்க சம்மதித்தனர்.

அன்று இரவு பதினோரு மணியளில் அவர் வந்ததை தூங்கி கொண்டிருந்த நான் அவரின் அரவம் சமையலறையில் ஒலிப்பதைக் கேட்டு எழுந்தேன். குளிர் சாதனம் பெட்டி மீது சாய்ந்தவாறு பீரை எடுத்து பருகிகொண்டிருப்பதை பார்த்தேன். அவர் தனது கனத்த கரங்களால் என்னை அணைத்து எனது பின்புறத்தை தடவிக்கொடுத்தார். இரண்டு தினங்களுக்கு முன் விட்டு சென்ற அதே கைகள் என நினைத்துக்கொண்டேன்.

எங்களது படுக்கையிலும் அவர், தனது கைகளை என் மேல் போட்ட படிலே தயங்கினார், எதையோ நினைப்பது போல், நான் லேசாக திரும்பி பின், கால்களை அகட்டி கொடுத்தேன். எல்லாம் முடிந்தபின்பும்,அவர் வெகு நேரம் விழித்துக் கொண்டிருந்ததிலிருந்தார் என்பதை நான் தூங்கியதற்கு பின்பு விழித்துக் கொண்டிருந்ததிலிருந்து அறிற்து கொண்டேன். வெகு நேரம் கழித்து நான் ஒரு நிமிடம் அசைந்து லேசான சத்தத்தினால் முழித்து பார்த்தபோது, அது போர்வைகளை விலக்கினதால் ஏற்பட்ட சத்தமாக கூட இருக்கலாம், ஜன்னலுக்கு வெளியே காலை வெளிச்சம் சற்றேறக் குறைய வந்திருந்தது. புறவைகள் பாடிக் கொண்டிருந்தனன. அவர் புகை பிடித்துகொண்டு திரை சிலைகள் மூடிய ஜன்லைப் பார்த்தபடி சாய்ந்து உட்கார்ந்திருந்தார். பாதிதூக்கத்தில் நான் அவர் பெயலை சொல்லி கூப்பிட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. நான் மறுபடியும் தூங்கிவிட்டேன்.

அன்றைய காலை, நான் படுக்கையிலிருந்து எழவதநற்கு முன்பாகவே அவர் எழந்து தயாரகியிருந்தார். ஏதாவது அதைப்பற்றி தினசரி பத்திரிக்கையில் வந்திருக்கிறதா என பார்ப்பதற்கு கூட இருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டேன். எட்டு மணிக்கு பிறகு தொலை பேசி மணி அடித்தது.

‘நாசமாய் போ” என அவர் தொலைபேசியில் கத்துவதைக் கேட்டேன் சிறிது நிமிடம் கழித்து மறுபடியும் மணியடித்தது. நான் சமையலறைக்குள் அவசரமாக ஒடி வந்தேன். ‘ நான் ஷெரிபிடம் சொன்னதந்கு மேல் கொண்டு சொல்ல ஏதுமில்லை , ஆமாம்” என்று கூறியபடியே தொலைபேசியை ஒங்கி அறைந்து வைத்தார். ‘என்ன நடக்கிறது?” என பதறிய படியே கேட்டேன்.
‘உட்காறேன்” என்றார் மெதுவாக. முழிக்கப்படாத தாடை மயிர்களை தேய்த்துக் கொண்டே” உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் , நாங்கள் மீன்பிடிக்க சென்றபோது ஒரு விஷயம் நடந்தது ‘ நாங்கள் எதிரெதிராக உட்கார்ந்து கொண்டபின் அவர் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னார்.

குhபி குடித்துக் கொண்டே அவர் பேசுவதை உற்று கேட்டேன் பின்பு அவர் தினசரியை என்முன் தூக்கி போட அதை எடுத்துப் படித்தேன். …’ பதிரெண்டு வயது முதல் இருபத்தி நான்கு வயது மதிக்கத்தக்க … அடையாளம் தெரியாத பெணின் உடல் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை ஆற்று நீரில் மிதந்துள்ளது … கற்பழிப்பு ஒரு காரணமாக இருக்கலாம்… ஆரம்ப கட்ட பரிசோதனையில் கழத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என வந்துள்ளது … வெட்டு கீறல் காயங்களும் கன்றிப்போன தடயங்களும், அவளது மார்பகங்களிலும் அடிவயிற்று பாகங்களிலும் இருந்திருக்கிறது. பிரேத பரிசோதனை … கற்பழிப்பு … மேலும் விசாரணையில் உள்ளது”

‘நீ கொஞ்சம் புரிந்து கொள்ளவேண்டும்” என்றார். ‘ என்னை அப்படி பார்க்காதே, ஜாக்கிரதை , நான் நிஜமாக சொல்கிநேன், நிதானமாக யோசி கிளேர்”

ஏன் றேற்று இரவே என்னிடம் சொல்லவில்லை? என்று நான் கேட்டேன்.

நான் … சொல்லவில்லை, அதனாலென்ன? என்றார். ‘ நான் என்ன கேட்கிறேன் என்பது உங்களுக்கு புரிகிறது” என்றேன் நான் அவரது கரங்களையும், அகன்ற விரல்களையும், மயிநடர்ந்த புறங்கைகளையும் பார்த்தேன். அந்தவிரல்கள் இப்போது ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைக்கத் தொடங்கியது. நேற்று இரவு என் மேலும், எனக்குள்ளும் படர்ந்த விரல்கள்.

அவர் தனது தோள்களை குலுக்கினார், நேற்று ராத்திரியோ இன்று காலையோ இதில் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது? நேற்று மிகவும் நேரமாகியிருந்தது, நீயும் தூங்கி வழிந்து கொண்டிருந்தாய், அதனால் காலையில் சொல்லி கொள்ளலாம் என முடிவு செய்தேன்” அவர் வாசலைப் பார்த்தார் : புல்தரையிலிருந்து ஒரு கருங்கரிச்சான் குரவி பறந்து வந்து தோட்டத்து மேஜை. மேல் அமர்ந்து கொண்டு தனது இறக்கைகளாப் பிரித்து சுத்தம் செய்து கொண்டிருந்தது.

‘அது உண்மையில்லை” என்றேன். ‘நீங்கள் அவளை அப்படியே விட்டு விட்டு வந்து விட்டீர்களா?”
அவர் சட்டென திரும்பி, ‘நான் என்ன செய்தேன்? நான் சொல்வதை கவனமாக கேள். எதுவுமே நடக்கவில்லை இறுதியாக நான் வருத்தப்படும் படியோ குற்ற உணர்ச்சினை கொள்ள வேண்டிய அவசியமோ இல்லை தெரியுதா?

நான் எழந்து டீனின் அறைக்கு சென்றேன். அவன் பை ஜாமா அணிந்து கொண்டு புதிர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு மாற்று உடைகளை அணிவித்துவிட்டு, அவனது காலை உணவை மேறையில் போட்டு வைக்க சமையலறைக்கு சென்றேன்.

இரண்டு அல்லது மூன்று முறை தொலைபேசி மணியடித்து ஸ்ரூவர்ட் எடுத்து பேசும் போதும் எல்லாம் சுரக்கமாக பேசிவிட்டு வைக்கும் போது கோபத்துடன் வைத்தார்;;. அவர் மெல் டோர்னையும் கோர்டன் ஜான்சனையும் தொலைபேசியில் அழைத்து நிதானமாகவும் கவனமாகவும் பேசிவிட்டு பின்பு ஒரு பீர் டப்பாவை உடைநத்து திறந்து குடித்துக் கொண்டே புகைக்கவும் ஆரம்பித்தார். டீன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனது நண்பர்களைப் பற்றியும், பள்ளியைப்பற்றியும் சாதாணமாக ஏதும் நடக்காதது போல விசாரித்துக் கொண்டிருந்தார்;.

வெளியில் சென்றிருந்தபோது என்ன செய்து கொண்டிருந்திர்கள் என டீன் அவரை நோக்கி வனவ, ஸ்ருவர்ட் குளிர் பதனப் பெட்டியிலிருந்த சில மீன்களை எடுத்து அவனுக்கு காட்டினார்.

‘இவனை உங்களது அம்மாவிடம் இன்று கூட்டிப் போகிறேன்” என்றேன்.

‘சரி” என்றார் ஸ்குவர்ட். உறைந்து போயிருந்த டிரொட் மீனை பிடித்துக் கொண்டிருந்த டீனை பார்த்தபடியே, ‘நீயும் அவனும் போக விரும்பினால் போங்கள், போக வேண்டியதில்லை தான் தப்பு ஒன்று இல்லை.” என்றார் எனக்கு போகவேண்டும் போலுள்ளது” என்றேன்.

‘நான் அங்கே நீச்சல் அடிக்க போகலாமா?“ என்றபடியே டீன் தனது விரல்களை தனது கால் சட்டையில் துடைத்துக் கொண்டான்.

‘போகலாம் என்று தான் நினைக்கிறேன், இது ஒரு வெயில் நாள் தான், நீ உனது நீச்சல் உடையை எடுத்து வைத்துக் கொள். உனது பாட்டியும் அனுமதிப்பார் எனத்தான் நினைக்கிறேன்.” ஸ்குவர்ட் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடியே எங்களை பார்த்தார்.

டீனும், நானும் நகரத்தின் மறு பக்கத்தில் உள்ள ஸ்குவர்டின்தாயார் வீட்டிற்கு காரில் சென்றோம். அவர் ஒரு அடுக்கு மாடி குடியிறுப்பில் வசதியும் இருந்தது. அங்கு நீச்சல் குளமும், நீராவி குளியில் வசதியும் இருந்தது. அவளது பெயர் கேத்தரின் கேள், அவளது கேன் என்ற பெயர் எனது பெயலைப் போலவே கேன் என்றிருந்தது நம்பமுடியாத படிதான் இருந்தது.

ஸ்குவர்ட் என்னிடம் சொல்லியிருந்தார், தனது தாய் பல வருடங்களுக்கு முன்பு தனது நண்பர்களால் கேண்டி என்று அழைக்கப்பட்டதாக. அவள் உயரமாகவும், வெளிறிய வெண் முடி கொண்டவளாகவும் பார்வைக்கு இறுக்கமான பெண் மணியாகவும் தென்பட்டாள். எனக்கு அவள் நபர் என்ற எப்போதும் எல்லோரையும் எடை போட்டுக்கொண்டிருக்கும் உணர்வை அவள் இன்னும் தினசரி பத்திரிக்கையை படிக்க வில்லையாதலால் நான் டீனை மாலையில் வந்து அழைத்து கொள்கிறேன் என்றும் சொன்னேன்.

‘நான் அவனது நீச்சலுடையை கொண்டு வந்துள்ளான் என்றேன்” ஸ்குவர்ட்டும் நானும் சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டும்” என மேலோட்டமாக சொனனேன். அவள் தனது சரிந்த மூக்கு கண்ணாடிக்கு மேலாக கண்களை உயர்த்தி நிதானமாக பார்த்தாள். புpன்பு என்னைப் பார்த்து தலையை அசைத்துவிட்டு, டீனை நோக்கி திரும்பி, எப்படி இருக்கே என் குட்டி பையா? ஏன்றபடி குணிந்து அவனை அணைத்துக் கொண்டாள். நான் பார்த்தாள். ஏதும் சொல்லாமலேயே என்னை அவள்பார்க்கும் பழக்கம் இருந்தது.

நான் வீடு திரும்பிய போது ஸ்குவர்ட் டேபிளிலிருந்து எதையோ எடுத்து சாப்பிட்டுக் கொண்டும், பீரை குடித்துக் கொண்டுமிருந்தார்…

கொஞ்சம் நேரம் கழித்து, உடைந்த கண்ணாடி சில்லுகளையும் உடைந்த பாத்திர துண்டுகளையும் பெருக்கி வாரி அதை வெளியே கொண்டுபோய் கொட்டினேன். அப்போது ஸ்குவர்ட் வெளியே புல்தரையில் மல்லாந்து படுத்திருந்தார் அருகே பீர்டப்பாவும் தினசரி பத்திரிக்கையுமிருந்தது அவர் வானத்தை பார்த்தபடி சாய்ந்திருந்தார். அன்று காற்றோட்டமாக இருந்தாலும் உஷ்ணமான தினமாக இருந்தது. பறவைகள் கலைசலாக கத்திக் கொண்டிருந்தன.

‘ஸ்டுவர்ட் நாம் எங்காவது வெளியில் போகலாமா?“ என்றேன். புரண்டு படுத்த வாறெ என்னை பார்த்து சரி என தலையசைத்தார்.“ நாம் கொஞ்சம் பீர் டப்பாக்களை எடுத்துக் கொள்வோம்” என்றார் இதைப் பற்றி இப்போது நீ சரியாக புரிந்து கொண்டிருப்பாய் என நினைக்கிறேன், இதைத்தான் நான் உன்னிடம் கேட்கிறேன்” என்றபடியே புல்தரையிலிருந்து எழந்து உள்ளே செல்லும் போது எனது இடுப்பை தொட்டு, ‘ஒரு நிமிடத்தில் தயாராகி வந்து விடுகிறேன்” என்றார்.

காரில் ஏதும் பேசாமல் நகரத்தை கடக்க ஆரம்பித்தோம். நாட்டுப்புறத்தை அடையுமுன் பாதையோ கடையொன்றில் ஸ்டுவர்ட் பீர் வாங்கிகொண்டார். அந்தக் கடையின் கதவின் பின்புறம் பெரும் அடுக்காக தினசரி பத்திரிக்கைகளை அடுக்கி வைத்திருந்ததைப் பார்தேன். மேல் படிக்கட்டில் அச்சிட்ட உடைஉடுத்திருந்த ஒரு குண்டான பெண்மணி ஒரு சிறு குழந்தைக்கு குச்சி மிட்;டாயை கொடுத்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் நாங்கள் எவர்சன் ஒடையை தாண்டி நீர் பரப்பிற்கு அருகே சில அடி தூரத்தில் உள்ள சுற்றுலா வளாகத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த ஒடை பாலத்திற்கு கீழே ஒடி ஒரு பெரிய ஒரியாக சில றூறு கெஜங்கள் தூரத்தில் கலந்து பத்து பனிரௌண்டு நபர்களும் பையன்களும் கலையோரம் உள்ள வில்லோ மரங்களின் நிழலில் அமர்ந்தவாறு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

வீட்டின் மிக அருகே இவ்வளவு பெரும் நீர் பரப்பு , ஏன் இவர் பல மைல்கள் கடந்து மீன் பிடிக்க போக வேண்டும்? ‘இருக்கின்ற எல்லா இடங்களையும் விட்டு விட்டு அங்கே” ஏன்தான் மீன் பிடிக்க போனீர்ககளா? என்றேன்.

நாச்செஸ்சுக்கா? நாங்கள் எப்போதும் அங்கே தானெ போகிறோம் ஒவ்வொரு வருடமும் ஒரு முறையாவது”வெயில் ஒரு பெஞ்சில் இருவரும் அமர்ந்து கொண்டோம். இரண்டு பீர் டப்பாக்களை திறந்து ஒன்றை என்னிடம் கொடுத்தார்.

‘இந்த மாதிரி ஒரு கர்மம் நடக்கும் என எனக்கு எப்படி தெரியும்?”

அவர் தலையை அசைத்தபடி தனது தோள்களை குலக்கிகொண்டார் யாருக்கோ பல வருடங்களுக்கு முன் நடந்ததைப் போல் நினைத்து. ‘இந்த மதிய நேரத்தை அனுபவி கிளேர், இந்த பருவ நிலையை பாரேன்” என்றார்;.

‘அவர்கள் தங்களை அப்பாவிகள் என்று சொல்லிக்கொண்டார்கள்”

‘யாரு? ஏதைப்பற்றி நீ பேசுகிறாய்?”

‘மேடாக்ஸ் சகோதார்கள். அவர்கள் ஆhலின் !!ஹப்லி என்ற பெண்னை கொன்று அவள் தலையை வெட்டி விட்டு அவளைக்ளி ஈலம் ஆற்றில் எறிந்து விட்டார்கள். நானும் அவரும் ஒரே உயர் நிலைப் பள்ளியில் தான் அந்த உயரில் படித்தோம். இதெல்லாம் நான் சிறுமியாக இருந்தபோது நடந்தது”.

‘ எந்த கருமத்தை எப்போது நினைப்பது என வேண்டாம்?” என்றார்.

‘முதலில் இதை விட்டு தொலை என்னை கேள்வி கேட்டு துளைத்தெடுக்கப்போகிறாய். இப்போ என்னை செய்யப்போகிறாய்? கிளேர்?”

நான் நீரோடையையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஏரியை நோக்கி கண்கணை தறந்தவாறே கவிழ் படி மிதந்து செல்கிறேன். காற்றினால் நான் எரியை நோக்கி தள்ளப்படுகிறேன், ஒடையின் அடியில் உள்ள பாறைகளையும் பாசிகளையும் பார்த்தவாறே மிதக்கிறேன். வித்தியாசமாக ஒன்றும் நடக்காது. நாங்கள் இப்படியே போய்கொண்டே போய்கொண்டே போய்கொண்டே இப்போது கூட எதும் நடக்காதது போல பாவித்துக் கொண்டு சென்ற படிதான் இருக்கிறோம். நான் மேiஐக்கு அப்புறம் உட்கார்ந்திருந்த எனது கணவலை பார்வையின் உக்கிரமாக அவரது முகம் வெளிறியது.

‘உனக்கு என்ன பிரச்சனை என எனக்கு தெரியவில்லை என்றபடி ‘ எனக்கு தெரிய …“
நான் என்ன நடக்கிறது என யோசிக்கும் முன்னர் அவரை ஒங்கி அறைந்தேன். கையை ஒங்கி ஒரு நொடி தாமதித்துவிட்டு மறுபடியம் கன்னத்தில் அறைந்தேன்.

இது பைத்தியக் காரத்தனமாக உள்ளது என அவலை அறையும் போதே நினைத்துக் கொண்டேன் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் எங்கள் விரல்களை கோர்த்துக்கொண்டும் இருக்க வேண்டிய தருணம்.

இது பைத்தியக்காரத் தனம் தான்.

மறுபடியும் நான் அறையும் முன் அவர் என் கையை படித்து கொண்டு தன் கையை ஒங்கினார். நான் அடி வாங்க பதுங்கி காத்திருந்த போது அவர் கண்களில் ஏதோ ஒன்று தோன்றி பின் மறைந்தது. அவர் தன் கையை கீழே தாழ்த்திக் கொண்டார். நான் மேலும் வேகமாக எரியில் சுற்றி சுற்றி மிதந்தேன்.

‘வா வந்து காரில் ஏறு’ ‘ நான் உன்னை வீட்டிற்கு கூட்டி செல்கிறேன்” என்றார்.
‘வேண்டாம். வேண்டாம் “ என்றபடியே திமிறினேன்.

‘அடவா” “பெரிய கண்ராவியாக போச்சு” என்றார்;.

‘நீ என்கிட்டே நியாயமாக நடந்து கொள்ள வில்லை என்று காரில் செல்லும் போது சொன்னார்;. வயங்களும் மரக்கூட்டங்களும், இருந்தன.

‘நாம் இருவருக்குமே நீ நியாயமாக நடந்து கொள்ளவில்லை அல்லது டீனுக்கு கூட என என்னால் சொல்லமுடியும் ஒரு நிமிடம் டீனைப்பற்றி நினைத்துப் பார். என்னைப்பற்றி நினைத்துப் பார். கர்மம் பிடித்த உன்னைப்பற்றி மட்டும் நினைக்கறதை விட்டு விட்டு அதற்கு பதிலா மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்.

எனக்கு இப்போது அவரிடம் சொல்வதற்கு ஏதமில்லை. அவர் பாதையை பார்த்து வண்டிய ஒட்ட முனைந்தார். ஆனாலும் பின்புறம் பார்க்கும் கண்ணாடி முலம் அவ்வப்போது பார்த்துக் கொண்டார். அவருக்கு பக்கத்தில், முட்டிகளை நாடியில் இடிக்கும் வண்ணம் வளைந்து உட்கார்ந்திருந்து என்னை தன் ஒரப் பார்வையால் பார்த்துக்ட கொண்டார். சூரியன் எனது தோள்களிலும் முகத்தின் ஒரு பாதியிலும் உஷ்ணமாக விழந்த வண்ணயிருந்தது. அவர் மற்றும் ஒரு பீர் டின்னை உடைத்து குடித்துக் கொண்டே வாகனத்தை செலுத்தினார். பின்பு டின் தனது இரு தொடைகளுக்கும் நடுவே வைத்துக் கொண்டு நீண்ட பெருமுச்சை விட்டார். அவருக்கு தெரியும். நூன் அவரது முகத்துக்கு நேராக சிரிக்க முடியும்.

இன்றைய காலைப் பொழதில் என்னை தூங்குவதற்கு அனுமதித்ததாக ஸ’டுவர்ட் நினைத்திருக்கலாம். ஆனால் நான் கடிகாரத்தின் மணி அடிப்பதற்கு முன்பே விழித்துவிட்டேன். கட்டிலின் இந்த விரல்களிரலிருந்தும் தூரமாக விலகி படுத்திருந்தேன். ஒரமாக படுத்தவாறே சிற்தித்துக் கொண்டிருந்தேன். அவருடைய ரோமம் அடர்ந்த கால்களிலிருந்தும் கனத்த அசைவற்ற அவரே டீனை பள்ளிக்கு கிளப்பி தயார் செய்தார். பின்பு செய்து உடை அணிந்து கொண்டு வேலைக்க புறப்பட்டு சென்றார். புறப்படும் போது இரு முறை படுக்கை அறையைப் பார்த்து தொண்டையை செருமினார். ஆனால் நான் கண்களை முடியவாறே இருந்தேன்.

சமையலறையில் ஸ்டுவர்ட்டின் துண்டு கடிதாசி இருந்ததை கண்டேன். அதில் அன்புடன் என்று எழதி கையெழத்திட்டிருந்;தார்;. சூரிய வெளிச்சம் படும்படி உணவு மேiஐயிருகே அமர்ந்து கொண்டு காபியை குடித்துக் கொண்டே அந்த கடிதாசியில் காபி கோப்பையால் காபி வளையத்தை உருவாக்கினேன். தொலைபேசி அடிப்பது நின்றிருந்தது. அது பெரிய விஷயம்தான். நேற்று இரவிலிருந் எந்த அழைப்பும் வரவில்லை. நான் தினசரியை எடுத்து இப்படியும் அப்படியுமாக திருப்பினேன் பின்பு அருகில் எடுத்து படிக்கத் தொடங்கினேன். அந்த உடல் இன்னும் இன்னார் என அடையாளம் காணப் படவில்லை. சொந்தம் கொண்டாடப்படவுமில்லை. காணாமல் போனதாக புகாருமில்லை.

ஆனால் கடந்த இருபத்திநான்கு மணி நேரமாக மனிதர்கள் அதை ஆராய தொடங்கியிருந்தார்கள். கருவிகளை உபயோகித்து வெட்டினார்கள், எடை போட்டார்கள், அளந்தார்கள், மறுபடியும் உள்ளே வைத்தார்கள், தைத்தார்கள், துல்லியமான மரண நேரத்தையும் காரணத்தையும் ஆராய்ந்தார்கள். கற்பழிப்பிற்கான சான்றுகளை தேடினார்கள். அவர்கள் கற்பழிப்பாக இருக்கலாம் என நம்பியதாக எனக்கு பட்டது. கற்பழிப்பாக இருந்தால் புரிந்து கொள் வசதியாக இருக்கும். மற்ற விபரங்கள் தெரியும் வரை உடலை கீத் மற்றும் கீத் ஈமச் சடங்குகள் நிறுவனத்தில் வைத்துள்ளதாக தினசரியில் வெளியிட்டிருந்தார்கள். விபரம் ஏதேனும் யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லும்படியும் கேட்டு இருந்தார்கள்.

இரண்டு விஷயங்கள் உறுதியாக தெரிந்தன. மனிதர்களுக்கு, மற்றவர்களுக்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலையோ அக்கரையோ ஏற்படுவதில்லை.

2) எதுவும் எப்பொழுதும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. நடந்ததையே பாருங்கள். இருந்தும் ஸ்டூவர்ட்டுக்கும் எனக்கும் எந்த வித மாறுதலும் ஏற்பட போவதில்லை.

நான் சொல்வது, உண்மையான மாற்றம். இருவருக்கும் வயதாகி முதுமை வரும். இப்பொழுதே அதை எங்கள் முகத்தில் பார்க்கலாம். குளியலறை கண்ணாடியை சில நேரம் நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் பயன்படுத்தும் பொழுது எங்கள் முகங்களில் பார்க்க எங்களை சுற்றியுள்ளவைகளில் குறிப்பாக சில மாறலாம். சுலபமாகவோ அல்லது கடினமாகவோ, இப்படியோ அல்லது அப்படியோ, ஆனால் எதுவுமே உண்மையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை என்பதை நான் நம்புகிறேன். நாங்கள் எங்கள் முடிவுகளை எடுத்துவிட்டோம். எங்கள் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அது முடியும்வரை போய்க் கொண்டேயிருக்கும். ஆனால் அது உண்மையெனில் அதன்பின் என்ன நடக்கும்? நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் நம்பத் தொடங்கி ஆனால் அதை மறைத்து வைத்திருந்தால் என்றோ ஒரு நாள் ஏதாவது நடந்து எதையாவது மாற்றினால், அது எதையுமே முடிவாக மாற்றுவதில்லை என்பதை இறுதியாக தெரிந்து கொள்வீர்கள். அப்பொழுது என்ன நடக்கும்? அதே சமயத்தில் உங்களை சுற்றியுள்ள மனிதர்கள் நீங்கள் நேற்று இருந்த ஆதெ ஆளாகவோ நினைத்து பேசவும் பழகவும் செய்வார்கள் நேற்று இருந்தவளே, அல்லது முதல் நாள் இரவோ, அல்லது ஐந்து நிமிடத்திற்கு முன் இருந்தவராகவோ நினைத்து ஆனால் நீங்கள் இக்கட்டை அனுபவித்து கொண்டிருப்பீர்கள். உங்கள் இதயம் காயப்பட்டிருக்கும்.

கடந்த காலம் தெளிவற்றிருந்தது. ஏதோ ஒரு திரை அந்த ஆரம்ப வருட்ஙகளா மூடி மறைத்திருந்ததைப் போலிருந்தது. எனக்கு நடந்தவைகள் அனைத்தும் எனக்கு நடந்தவையா என்பதேயே உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த சிறுமிக்கு ஒரு தாயும் தந்தையுமிருந்தனர். தந்தை சிறிய உணவகத்தை நடத்தி வர, அதில் தாய் காசாளராகவும் சிப்பந்தியாகவும் வேலை செய்து வந்தாள். ஏதோ கனவில் நகர்வதைப் போல் அவள் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளியிலும், பின் ஒரு வருடமோ அல்லது இரு வருடமோ காரியதரிசி ஆக பயிற்சி பெற்றாள். பின்பு, இடைப்பட்ட காலம் என்னாயிற்று? என்றே தெரிய வில்லை. மிக பிந்தி இதற்கு அப்புறம், அவள் வேறு ஒரு நகரத்தில் மின்னியல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வரவேற்பாளராக வேலை செய்து கொண்டிருந்த போது அங்கே பணியாற்றிய ஒரு பொறியாளருடன் நட்ப ஏற்பட்டது. அவள் அவளிடம் நட்பாக பழக முற்பட்டாள். அவரது குறிக்கோளைப் புரிந்து கொண்டு, தன்னை மயக்க இடம் கொடுத்தாள். அந்த நேரத்தில் அந்த வசப்படுத்துதல் சம்மந்தமாக தனக்குள் ஏற்பட்ட உள்ளுணர்வை பின் எப்போதும் நினைவுக்கு கொண்டு வரவே அவனால் முடியவில்லை. சிறிது காலத்தற்கு பின்பு அவர்கள் மணந்து கொள்ள முடிவெடுத்தார்கள். ஆனால் அதற்குள்ளாகவே அவளது கடந்தகாலம் நழுவி ஓடிக்கொண்டிருந்தது. எதிர்காலத்ததைப் பற்றி எந்தவித கற்பனையும் செய்ய முடியவில்லை. அவள் தனது எதிர்காலத்ததைப் பற்றி சிந்திக்கும்பொழுது ஏதோ ரகசியத்தை வைத்திருப்பதைப் போல் எண்ணி புன்னகைத்துக் கொள்வாள். ஒருமுறை, அவர்கள் திருமணம் முடிந்து ஐந்து வருடமிருக்கும். அப்போது ஏதோ ஒரு பிணக்கில் இருவருக்கும் வாக்குவாதம் வந்த போது எதனால் என்று இப்போது கவனத்திற்கு வராத ஒருவாக்கி வாதத்தின் போது இப்படியே போனால் இந்த உறவு (அவருடைய வார்த்தைகள் உறவு) கை கலப்பில்தான் போய் முடியுமென்று? அவர் சொன்னார். அதை அவள் மறக்கவேயில்லை. தன்னுடைய நினைவில் எங்கோ ஞாபகமாக தொகுத்து வைத்திருந்தாள். அவ்வப்போது இந்த வார்த்தையை சத்தமாக சொல்லியும் பார்த்துக் கொள்வாள். சில நேரங்களில் அவள் டீன் உடனும் அவனது நண்பர்கள் ஒன்றிரண்டு பேருடன் சாலை முழுதும் கார் நிறுத்துமிடத்தில் இருந்த மணல் பெட்டி அருகே மண்டியிட்டு அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பாள்.

ஆனால் ஒவ்வொரு மதியமும் நான்கு மணிக்கு தலை வலிக்க ஆரம்பிக்கும். தனது வலியினால் தலையை பிடித்துக்கொண்டு துடித்துப் போவாள். ஸ்டூவர்ட் அவளை டாக்டரை பார்க்க சொல்லி அவளும் போய் பார்த்தாள். டாக்டர் அன்பாக கவனித்து கேட்டதைப் பார்த்து அவள் ரகசியமாக சந்தோஷப்பட்டாள். டாக்டரின் சிபாரிசின் படி அவள் சில காலம் வேறு இடத்தில் தங்கியிருந்தாள். குழந்தையை கவனித்துக் கொள்ள ஸ்டூவர்ட்டின் தாய் ஒஹையோ விலிருந்து அவரசமாக வந்தாள். ஆனால் கிளேர் அனைத்தையும் கெடுப்பது போய் சில வாரங்களில் வீடு வந்து சேர்ந்தாள். அவரது அம்மா நகரத்தின் மறு பக்கமாக ஒரு குடியிருப்பில் தங்கி கொண்டு ஏதோ காத்திருப்பது போல் தொத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாளிரவு இருவரும் படுக்கையில் தூங்க தொடங்கியபோது மருத்துவமனையில் சில பெண் நோயாளிகள் வாய் வழி புணர்ச்சி பற்றி பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி அவரிடம் சொன்னாள். இதைப்பற்றி அவர் கேட்க இஷ்டப்படுவார் என நினைத்தாள். ஸ்டூவர்ட்டுக்கு இதைக் கேட்க சந்தோஷமாக இருந்தது. அவர் அவளது கையை வருடி கொடுத்தாள். எல்லாம் சரியாகப் போய்விடும் என சொன்னார். இப்போதிலிருந்து அவர்கள் இருவருக்கும் எல்லாம் வித்தியாசமாகவும் நல்லதாகவும் ஆகப் போவதாக தெரிந்தது. பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஸ்டூவர்ட்க்கு கிடைத்தது. அவர்கள் மற்றொரு காரைக் கூட வாங்கினார்கள். அதுதான் தற்போதைய அவருடைய கார்.

அவர்கள் நிகழ்காலத்தில் சௌகர்யமாக வாழ போகிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் ஓய்வாகவும், நிதானமாகவும் இருக்க முடிகிறதாக அவர் சொன்னார். இருளில் அவளது கையை வருடியவண்ணமிருந்தார். தொடர்ந்து அவர் சீட்டு விளையாட்டும், ஒன்பது பின் விளையாட்டையும் விளையாடி வந்தார். மற்ற மூன்று நண்பர்களுடன் மீன பிடிக்கவும் செல்வான்.

அன்று மாலை மூன்று விஷயங்கள் நடந்தது. டீன் அவனது பள்ளியில் மற்ற குழந்தைகள், அவனது தகப்பனார் ஆற்றில் ஒரு பிணத்தை கண்டெடுத்ததைப் பற்றி சொல்லி விட்டு அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினாள். ஸ்டூவர்ட், கதையின் பெரும்பாலான விஷயங்களை தவிர்த்துவிட்டு தானும் மற்ற மூன்று பேரும் மீன் பிடிக்க சென்ற போது இறந்து போன உடலை கண்டதாக மட்டும் சொன்னான்.

‘என்ன உடல் அது?” அது ஒரு பெண்ணா?” என டீன் கேட்டான்.

‘ஆம், அது ஒரு பெண். அதைப் பார்த்தபின் ஷெரிப்பிடம் கூப்பிட்டு சொன்னோம்” என்றவாறே ஸ்டூவர்ட் என்னைப் பார்த்தார்.

‘அவர் என்ன சொன்னார்?” என டீன் கேட்டான்.

‘அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக சொன்னார்”.

‘அது பார்க்க எப்படி இருந்தது? பயப்படும்படியாக இருந்ததா?”

‘இந்த பேச்சு இத்துடன் போதும்” என்றேன்.

‘டீன் உனது தட்டை கழுவிவிட்டு போ பார்க்கலாம்” என்றேன்.

‘ஆனால் அது எப்படி இருந்தது பார்க்க?” என பிடிவாதம் பிடித்தான். ‘எனக்கு தெரிய வேண்டும்” நான் சொன்னதைக் கேட்டாயா இல்லையா? டீன்? டீன்! என்ற எனக்கு அவளைப் பிடித்து உலுக்க வேண்டும், அவனைப் பிடித்து உலுக்கி அவன் அழும் வரை குலுக்க வேண்டும் போல் இருந்தது.

‘உனது அம்மா சொல்வது போல் கேள்” என அமைதியாக ஸ்டூவர்ட் சொன்னார். ‘அது ஒரு உடல், அவ்வளவுதான்”

நான் டேபிளிலிருந்து எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ஸ்டூவர்ட் பின்புறமாக வந்து எனது தோளைத் தொட்டார். அவரது விரல்கள் தகித்தன. நான் திடுக்கிட்டு, கிட்டத்தட்ட ஒரு தட்டை கீழே போட்டிருப்பேன்.

‘என்ன ஆச்சு?” என்றபடி கையை கீழே போட்டபடி

‘கிளேர் என்ன, ஏன்?” என்றார்.

‘நீங்கள் என்னை பயமுறுத்தி விட்டீர்கள்” என்றேன்.

‘அதைத்தான் நான் சொல்கிறேன். நீ துள்ளி விழாமல் உன்னை நான் தொட வேண்டும்” என்றபடி என் முன் ஒரு சிறு சிரிப்புடன் வந்து நின்று கொண்டு, என் கண்களை தனது கண்களால் கவர முயன்று கொண்டே தனது கரத்தால் எனது இடையை வளைத்துக் கொண்டார். தனது மற்ற கையால் எனது கையை பற்றி அதை தனது கால் சட்டையின் முன் பக்கமாக வைத்தான்.

‘தயவுசெய்து, ஸ்டூவர்ட்” என்றபடியே கையை இழுத்துக் கொண்டேன். அவர் பின் நகர்ந்து கொண்டு தனது விரல்களை சொடுக்கி கொண்டார்.

‘போய் தொலையட்டும் அப்போ” என்றார். ‘நீ இதைத்தான் விரும்புகிறாய் என்றால் அப்படியே ஆகட்டும், ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்”.

‘எதை ஞாபகம் வைத்து கொள்ள?” என சட்டென்று கேட்டேன். மூச்சை அடக்கியபடி அவனையெ பார்த்துக் கொண்டிருந்தேன். தோளை குலுக்கியபடியே, ‘ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்றார்.

இரண்டாவது விஷயம் அன்று சாயங்காலம் நாங்கள் தொலைக்காட்சியை பார்க்கும் போது நடந்தது அவர் தனது தோலாலான சாய்வு ஆசனத்திலும், நான் ஒரு கம்பளி போர்வையுடனும் ஒரு மாத இதழ் ஒன்றை கையில் வைத்தபடி சோபாவிலும் சாந்திருந்தேன். வீடு தொலைக்காட்சியின் ஒலியைத் தவிர நிசப்தமாக இருந்தது. நிகழ்ச்சியின் நடுவே ஒலித்த ஒரு குரல், கொலை செய்யப்ட்ட பெண் அடையாளம் காணப்பட்டதாக கூறியது. குழு செய்தி பதினொரு மணி செய்தியின் போது சொல்லப்படும் என கூறியது.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சில நிமிடங்களில் அவர் எழுந்து கொண்டு, தூங்குவதற்கு முன் கொஞ்சம் குடிக்கப் போவதாகவும், எனக்கு குடிக்க கொண்டு வரவா? என கேட்டார்.

‘வேண்டாம்” என்றேன்.

‘நான் தனியாக குடிக்க கவலைப்படவில்லை” என்றபடி ‘இருந்தாலும் உன்னையும் கேட்கலாம் என நினைத்தேன்” என்றார். தெளிவாக சொல்லமுடியாதபடி அவர் புண்பட்டிருப்பது எனக்கு புரிந்தது. நான் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டேன். எனக்கு ஒரே நேரத்தில் அவமானமாகவும் கோபமாகவும் உணர்ந்தேன்.

அவர் சமையலறையில் வெகு நேரம் இருந்து, செய்திவரும் நேரத்தில் கையில் தனது பானத்துடன் வந்தார்.

செய்தி அறிவிப்பாளர் மறுபடியும் நான்கு உள்@ர் மீன் பிடிப்பாளர்கள் அந்த உடலை கண்டுபிடித்த கதையை சொன்னார். பின் அந்த செய்தி நிலையம், ஒரு பள்ளியில் பட்டம் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அப்பெண்ணின் புகைப்படத்தைக் காட்டியது. கரிய கூந்தலும் வட்டமுகமும் புன்னகைக்கும் உதடுகளும் உடையவளாக அந்த பெண் தோன்றினாள். அப்பெண்ணின் பெற்றோர்கள் அவளை அடையாளம் காட்ட, ஈமச் சடங்குகள் நடக்கும் நிறுவனத்திற்குள் செல்வதை தொலைக்காட்சி காட்டியது. கரிய சூட் அணிந்த மனிதன் அவர்களுக்காக கதவை திறந்து காத்திருக்க, சோகமாகவும், ஆழ்ந்த துக்கத்தில் திகைப்புடனும் அவர்கள் மெதுவாக நடந்து சென்றார்கள். அதன்பின் சில நொடிகளே கடந்த உடன் அவர்கள் உள்ளே சென்று விட்டு உடனே திரும்பியது போய் அந்த தம்பதிகள் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறுவதையும் காட்டினார்கள். அந்தப் பெண்மணி தனது கண்ணீரை தனது கைக்குட்டையால் துடைத்தப்படி வர, அம்மனிதர் செய்தியாளரிடம், ‘அது அவள்தான், அது சூசன்தான், இப்போது வேறு எதுவும் சொல் முடியவில்லை. இதை செய்தவனையோ அல்லது செய்வர்களையோ மறுபடியும் இம்மாதிரி செய்வதற்குள் பிடித்து விட வேண்டும். இந்த வன் செயல்”………. என்றபடி மெதுவாக தொலைக்காட்சி காமிராவை நோக்கி கையை அசைத்தார். அதன்பின் இருவரும் ஒரு பழைய காரில் ஏறி, பின் மதிய போக்குவரத்து நெரிசலில் ஓட்டி சென்றனர்.

எங்க@ரிலிருந்து 120 மைல் தூரத்தில் உள்ள சம்மிட் என்ற ஊரில் அந்த பெண் சூசன் மில்லர் வசித்து வந்ததாகவும், அவள் சினிமா திரையரங்கு ஒன்றில் காசாளர் ஆக வேலை பார்த்து வந்ததாகவும் அறிவிப்பாளர் சொன்னார். மேலும் ஒரு புதிய மாடல் பச்சை நிற காரில் அவள் காத்திருந்து கடைசியாக ஏற் சென்றதாக சாட்சிகள் சொன்னார்கள். திரையரங்கின் வாசலில் அவள் காத்திருந்து ஏறிசென்றதால் காரிலிருந்தவர் அவளது நண்பராகவோ அல்லது தெரிந்தவரோகவோ இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தார்கள். அவர்கள் அந்த பச்சை நிற காரின் ஓட்டுனரை விசாரிக்க விரும்புவதாகவும் சொன்னார்.

ஸ்டூவர்ட் தொண்டைய செருமிக்கொண்டு, தனது இருக்கையில் சாய்ந்தபடியே தனது பானத்தை சுவைத்தான்.

மூன்றாவது விஷயம் செய்தி முடிந்தபின், ஸ்டூவர்ட் சோம்பல் முறித்தபடி கொட்டாவி விட்டுக் கொண்டு என்னை பார்த்தபோது நடந்த நான் எழுந்து அந்த சோபாவிலேயே படுத்துக்கொள்ள ஆயுத்தப்படுத்திக் கொண்டிருந்தேன்.

‘நீ என்ன செய்கிறாய்?” என புரியாமல் கேட்டார்.

‘எனக்கு தூக்கம் வரவில்லை” என்றபடி அவரது கண்களை தவித்தேன். ‘நான் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து எதையாவது படித்துவிட்டு பின் தூங்கப் போகலாம் என நினைக்கிறேன்” என்றேன்.

நான் படுக்கை விரிப்பை சோபா மேல் போடுவதை வெறித்து பார்த்தார். நான் தலையணையை எடுக்க படுக்கை அறைக்கு போகும் போது வாசலை அடைத்துக் கொண்டு வழி மறித்து நின்றான்.

‘நான் இன்னொரு முறையும் உன்னைக் கேட்கப் போகிறேன்” என்றபடி ‘என்ன கருமத்தை இதன் மூலம் நீ அடையப் போகிறாய், என்னதான் நினைத்துக் கொண்டுள்ளாய்?” என்றார்.

‘இன்றிரவு நான் நானாக இருக்க விரும்புகிறேன்” என்றேன்.

‘எனக்கு யோசிக்க சற்று நேரம் வேண்டும்” என நான் சொல்ல அவர் பெருழூமூச்சு விட்டபடியே, கிகோர்? நீ இப்படி நடந்து கொள்வது ஒரு ரெம்ப தப்பு என நான் னினைக்கிறேன். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை மறுபடியும் யோசித்து பார்” என்றார்.

நான் பதில் அளிக்கவில்லை. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் திரும்பிப கம்பளி விரிப்பை உள்புறம் செருக தொடங்கினேன். அவர் மேலும் சற்று நேரம் என்னை வெறித்து பார்த்து விட்டு தோளை உயர்த்திய படியே ‘அப்போ அப்படியே வைத்துக் கொள், நீ எது செய்தாலும் அதை குறையாமே என்னால் திருப்பி கொடுக்க முடியும்” என்றபடியே திரும்பி கழுத்தை சொறிந்தபடி நடந்து சென்றார்.

இன்றைய காலைப் பத்திரிக்கையில், சூசன் மில்லரின் ஈமச் சடங்குகள் சம்மிட்டில் உள்ள பைன்ஸ் தேவாலயத்தில் மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு நடைபெறவுள்ளதாக படித்தேன். மேலும் போலீசார் மூன்று சாட்சிகளிடம், அப்பெண் பச்சை நிற செவர்டிலட் காரில் ஏறியதைப் பார்த்த மூன்று சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அந்த காரின் லைடிசன்ஸ் எண் பற்றி இன்னும் தெரியவில்லை என்றும் போட்டிருந்தது. விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

நான் தினசரியை கையில் வைத்தவாறே நீண்ட யோசனையிலிருந்தேன். பின் எனது சிகையலங்கார நிலையத்திற்கு போன் செய்து வர நேரம் கேட்டேன்.

மில்லி எனது விரல் நகங்களை அழகுபடுத்திக் கொண்டிருக்க, நான் ஒரு மாத இதழை மடியில் வைத்தவாறே தலைமுடியை காயவைக்கும் உலர்ப்பான் கீழே அமர்ந்திருந்தேன்.
அங்கு முன்பு வேலை செய்து பின், நின்றுவிட்ட பெண்ணைப் பற்றி பேசியபின், ‘நான் நாளைக்கு ஒரு சவ அடக்கத்திற்கு போகலாம் என உள்ளேன்” என்றேன்.

மில்லி என்னைப் பார்த்துவிட்டு பின் எனது விரல்களைப் பார்த்தால் ‘கேட்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. திருமதி.கேன், உண்மையாகவே கஷ்டமாக உள்ளது” என்றாள்.

‘இது ஒரு இளம் பெண்ணின் சவ அடக்கம்” என்றேன்.

‘அது மிக கொடுமையான விஷயம். நான் சிறு பெண்ணாக இருந்தபோது என் சகோதரி இறந்து போனதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை, யார் இறந்தது? என்றாள்.

‘எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லாத ஒரு பெண், இருந்தாலும்……”

‘ரொம்ப கொடுமை, உண்மையிலேயே கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனாலும் கவலைப்பட வேண்டாம், உங்களை அலங்கரித்து விடுகிறேன். இது எப்படி இருக்கிறது பார்ப்பதற்கு?”

இது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது, மில்லி நீ எப்போதாவது வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என நினைத்தது உண்டா அல்லது ஒன்றுமே, ஒன்றுமே இல்லாத ஆளாக நினைத்துப் பார்த்தது உண்டா?”

அவள் என்னையே பார்த்தாள்? ‘அப்படி எப்போதும் உணர்ந்ததாக எனக்கு நினைவில்லை. இல்லை, இல்லை, நான் வேறு ஆளாக இருந்திருந்தால் அது எனக்கு பிடிக்காமல் கூட போயிருக்கலாம்.” அவள் எனது விரல்களை பிடித்தபடியே ஒரு நிமிடம் யோசித்து விட்டு, ‘எனக்கு தெரியவில்லை, தெரியவேயில்லை. உங்களது மற்ற கையை கொடுங்கள் திருமதி.கேன்” என்றாள்.

அன்று இரவு பதினொரு மணிக்கு மறுபடியும் நான் சோபாவிலேயே விரிப்பு அமைத்து படுத்துக் கொள்வதை ஸ்டூவர்ட் வெறுமனே பார்த்துக் கொண்டார். தனது நாக்கை உதடுகளுக்குள் சுழித்தபடியே படுக்கையறைக்கு சென்றார். இரவில் விழித்து கொண்டு காற்றினால் வாயில் கதவு வேலியில் மோதுவதை கேட்டபடியே இருந்தேன். விழித்திருப்பதை விரும்பாவிட்டாலும் தூக்கம் வராததால் கண்மூடியே படுத்திருந்தேன். முடிவாத் தலையணையை எடுத்து கொண்டு வீட்டு கூடத்துக்குள் வந்தேன்.

எங்களது படுக்கையறை விளக்கு எரிந்து கொண்டிருக்க, ஸ்டூவர்ட் மல்லாந்து வாய் திறந்து மூச்சு விட்டபடி தூங்கி கொண்டிருந்தார். நான் டீனின் அறைக்கு சென்று அவனுடன் படுத்துக் கொண்டேன். தூக்கத்திலேயே எனக்கு படுக்க இடம் கொடுத்தான் குழந்தை. ஒரு நிமிடம் அப்படியே படுத்திருந்து விட்டு என் முகம் அவனது தலை மயிரை முகர அணைத்துக் கொண்டேன்.

‘என்ன அம்மா?” என்றான்.

‘ஒன்னுமில்லை தேனே, திரும்ப தூங்கு போ, ஒன்றுமில்லை”

காலையில் ஸ்டூவர்ட்டின் அலார மணி யோசை கேட்டு எழுந்து காபி தயாரிக்கவும், காலையுணவு செய்யவும் முனைந்தேன். அவன் அப்போது சவரம் கொண்டிருந்தாள். வெற்று மார்புடன், தோளில் துண்டை போட்டவாறே சமையலறை கதவறகே நின்று என்னை பார்த்தார்.

‘இந்தாங்க காபி” என்றேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் முட்டை வெந்து விடும். அவன் தலையாட்டினான்.

நான் டீனை எழுப்பி தயார் செய்தபின் நாங்கள் மூவரும் காலையுணவு அருந்தினோம். ஓரிரு முறை என்னோடு பேச முயற்சி செய்த போதெல்லாம் நான் டீன் உடன், பால் வேண்டுமா அல்லது ரொட்டி வேண்டுமா என அவனுடன பேசிக் கொண்டிருந்தேன்.

கதவருகே சென்று ‘நான் உன்னுடன் அப்புறம் பேசுகிறேன்” என்றார் ஸ்டூவர்ட்.

‘நான் இன்று வீட்டில் இருக்க மாட்டேன்” என உடனே சொன்னேன். ‘இன்றைக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் இரவு உணவிற்கே தாமதாக கூட வர வேண்டியதாகலாம் என நினைக்கிறேன்” என்றேன். ‘அப்ப சரி” தனது கைப் பெட்டியை மாற்றி மாற்றி பிடித்து கொண்டு ‘இன்று இரவு சாப்பிட வெளியே” போகலாமா? உனக்கு எப்படி வசதி? என்றபடி என்னையே பார்த்தார்.

அந்தப் பெண்ணைப் பற்றிய நினைவே அவருக்கு இல்லை. உனக்கு சம்மதமா? என்றார்.

நான் அவரது டையை சரிசெய்ய கையை கொண்டு போனவள் அப்படியே கையை சரித்து கொண்டேன். அவர் என்னை முத்தமிட விரும்பினார். நான் ஓரடி பின் நகர்ந்து கொண்டேன். ‘சரி இந்த நாள் ஒரு நல்ல நாளாக இருக்கட்டும்” என்றார். முடிவாக திரும்பி தனது காரை நோக்கி நடந்து சென்றார்.

நான் கவனமுடன் உடை உடுத்தி கொண்டேன். பல வருடங்களாக அணியாத தொப்பியை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து கொண்டேன். பின்பு அதை கழற்றி வைத்துவிட்டு, கொஞ்சமாக முகத்தை அலங்கரித்து கொண்டேன். டீனக்கு ஒரு சீட்டு எழுதி வைத்தேன்.

தேனே, அம்மாவிற்கு மதியம் பூராவும் செய்ய வேலையிருக்கிறரு. ஆனால் முடிந்தபின் நான் வீட்டுக்கு வந்து விடுவேன். நீ வந்த பின் வீட்டிலேயோ அல்லது பின் கொல்லைபுறத்திலோ நாங்கள் இருவரில் யாராவது ஒருவர் வரும்வரை காத்திருக்கவும்,
அன்புடன்.

நான் அன்புடன் என்ற வார்த்தையை பார்த்துவிட்டு அதை அடிக் கோடிட்டேன். இந்த சீட்டை எழுதும் போது கொல்லைபுறம் என்ற பதம் ஒரு சொல்லா அல்லது இரண்டு சொல்லா என தெரியவில்லை. நான் இதுவரை அதை யோசித்ததில்லை. அதைப்பற்றி சிந்தித்தபின் அந்த பதத்தை இரு சொல்லாக எழுதினேன்.

நான் பெட்ரோல் நிரப்பவும் சம்மிட்டிற்கு போக வழி கேட்கவும் நிறுத்தினேன். நாற்பது வயதான் மீசைக்கார மெக்கானிக் பேரி, ஓய்வறையிலிருந்து வந்து காரின் முன்புறம் சாய்ந்தபடி நிற்க, மற்றொரு ஆளான லூயில் டாங்கில் பெட்ரோல் போட்டபடி முன்புற கண்ணாடியையும் மெதுவாக துடைக்க தொடங்கினான்.

‘சம்மிட்டிற்கா” என்றபடியே தனது மீசையை நீவி விட்டபடி என்னை பார்த்து பேரி கேட்டான்.

சம்மிட் போவதற்கு நல்ல பாதையே கிடையாது திருமதி. கேன் அவர்களே, எப்படி போனாலும் இரண்டு, இரண்டரை மணி நேர பிரயாணம் ஆகும். மலைகளை கடந்து போக வேண்டும், ஒரு பெண் தனியாக ஓட்டி செல்வது கொஞ்சம் கஷ்டம்தான். சம்மிட்டிற்கா? சம்மிட்டில் என்ன வேலை திருமதி. கேன்? என்றாள்.

‘எனக்கு ஒரு வேலை இருக்கிறது” என்றேன். லேசாக அடிசளகரியமாக இருந்தது. வேறு ஒரு வாடிக்கையாளரை கவனிக்க லூயிஸ் சென்றான்.

‘எனக்கு இங்கு இருக்கின்ற வேலைகள் இல்லையென்றால்” என்றபடியே தனது கை கட்டை விரலால் வேலைகளை சுட்டி காட்டியபடி ‘நானே உங்களை சம்மிட்டிற்கு கூட்டிப் போய் வந்து விடுவேன். பாதை அவ்வளவு ஒன்றும் நன்றாக இருக்காது, என்னவென்றால் பாதை கூட பரவாயில்லை. ஆனால் நிறைய வளைவுகளும் மேடு பள்ளங்களுமாக இருக்கும்” என்றான் பேரி.

‘நன்றி, அதனால்தான் பரவாயில்லை” என்றேன். நான் கொடுக்க பர்ஸை திறந்தபோது, அவனது பார்வை என்மேலிருந்ததை உணர்ந்தேன். பேரி கடனட்டையை பெற்றுக் கொண்டு, இரவில் வண்டி ஓட்ட வேண்டாம், நான் சொன்னது போல் அந்த பாதை அவ்வளவு சரியில்லை” என்றான்.

‘மேலும் இந்த காரைப் பற்றி எனக்கு தெரியும். இது உங்களுக்கு எந்த தொந்திரவையும் கொடுக்காது. ஆனால் டயர் பழுதுதாவது போன்று ஏதாவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் ஜாக்கிரதைக்காக இந்த டயர்களை மட்டும் பார்த்துவிடலாம்” என்று கால் ஷ{க்களால் முன்புற டயர்களை தட்டி காட்டினான்.

‘அதிக நேரமாகாது, மேலே தூக்கி பார்த்துவிடலாம்”

‘இல்லையில்லை, பரவாயில்லை, இனிமேலும் பொறுக்க நேரமில்லை. டயர்கள் நல்ல மாதிரிதான் இருப்பதாக தோன்றுகிறது”.

‘அட ஒரு நிமிஷம்தான் ஆகும். எதுக்கும் நல்லது”

‘நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன், அதைப் பார்த்தால் நன்றாகத் தான் உள்ளது, நான் போக வேண்டும் பேரி……..”

‘திருமதி. கேன்?”

‘நான் இப்போது போக வேண்டும்”

நான் கையெழுத்திட்டு கொடுத்தேன். அவன் ரசீதையும், கடனட்டையையும், சில ஸ்டாம்புகளையும் கொடுத்தான், அவை அனைத்தையும் எனது பர்ஸில் போட்டுக் கொண்டேன். ‘ஜாக்கிரதையாக போய் வாருங்கள். அப்புறம் பார்க்கலாம்” என்றான்.

நான் ரோட்டின் போக்குவரத்து நெரிசலில் நுழைந்து கொள்வதற்கு காத்திருக்கையில் திரும்பி பார்த்தபோது அவன் என்னை கவனித்துக் கொண்டிருந்த நான் என் கண்களை மூடி திறந்தேன். அவன் என்னைப் பார்த்து கையை அசைத்தான்.

முதல் சிக்னல் விளக்கில் நான் திரும்பி சென்று மறுபடியும் திரும்பி ஓட்டி சென்று நெடுஞ்சாலைக்கு வந்தபோது பலகையில் சம்மிட் 117 மைல்கள் என எழுதியிருந்தது. அப்போது மணி பத்து முப்பது ஆகியிருந்தது. பருவநிலை இதமாக இருந்தது.

நகரத்தின் விளிம்பை ஒட்டியே நெடுஞ்சாலை சென்றது. பின்பு பண்ணை நிலங்களையும், ஓட்ஸ் வயல்களின் ஊடாகவும், சர்க்கரை பீட் கிழங்கு, ஆப்பிள் தோட்டங்கள் வழியாகவும், பாதை சென்றது. இங்கும் அங்கும் கால்நடைகள் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்தன. அதன் பின் எல்லாமுமே மாறிற்று. பண்ணைகள் குறைந்த வண்ணமிருந்து வீடுகள் குடிசைகளாகவும், தோட்டங்களுக்கு பதில் காட்டு மரக் கூட்டங்களும் வரத் தொடங்கின. திடீர் என நான் மலையேற தொடங்கியிருந்தேன். எனக்கு வலப்புறம் பாதாளத்தில் எங்கோ நாச்சஸ் ஆறு ஓடுவதை விட்டு விட்டு பார்க்க முடிந்தது.

எனக்கு பின்புறம் ஒரு பச்சை நிற சரக்கு வாகனம் வந்து கொண்டே இருந்ததை பார்த்தேன். அது என் பின்புறமே பல மைல்களாக தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. நான் பொருத்த மற்ற நேரங்களில் வண்டியை மெதுவாக ஓட்டினேன். இதனால் அந்த வாகனம் என்னை முந்தி சென்றுவிடும் என நினைத்தேன். பின்பு பொருத்தமற்ற நேரங்களில் வண்டியை வேகமாக செலுத்தினேன். கை வலிக்கும் அளவிற்கு இறுகப் பிடித்து வண்டியை ஓட்டினேன்.

பின்பு வளைவுகள் அற்ற நேரான பாதையில் செல்லும் போது அவன் என்னை கடந்து போனான். ஆனால் கடப்பதற்கு முன்பு ஒரு நிமிடம் எனது வண்டியின் பக்கமாகவே செலுத்திக் கொண்டு என்னை பார்த்தான், நானும் அவளைப் பார்தேன். சுமார் முப்பத்தைந்து வயதிற்குள் இருக்கும் நீலநிற, பணி சீருடை உடையணிந்திருந்தான். தலைமுடியை ஓட்டக் கத்திருந்திருந்தான். என்னைத் தாண்டும் போது என்னைப் பார்த்து கையை அசைத்துவிட்டு, இருமுறை ஹாரன் அடித்து விட்டு சென்றான்.

மண் பாதையோரம் வண்டியை மெதுவாக செலுத்தி இடம் பார்த்து நிறுத்தினேன். இஞ்சினை அணைத்து விட்டேன். கீழே எங்கோ மரங்களுக்கும் கீழே நதியின் சத்தத்தை கேட்டேன். எனக்கு முன்னால் புழுதிப் பாதை, மரங்களுக்கு ஊடாக சென்றது. அதன் பின்பு சரக்கு வாகனம் திரும்பி வரும் சத்தம் கேட்டது.

நான் என் காரின் இஞ்சினை இயக்கியபோது சரக்கு வாகனம் என் பின்புறம் வந்து நின்றது. நான் எனது காரின் கதவுகளை பூட்டி கொண்டேன். ஜன்னல்களையும் ஏற்றிக் கொண்டேன்.

என் முகத்திலும் கைகளிலும் வியர்வைத் துளிகள் வரலாயிற்று. நான் காரை கியரில் இயக்கினாலும் போவதற்கு வழியில்லை.

‘உங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லையே?” என்றபடி அந்த மனிதன் என் காரருகே வந்தான். ‘ஹலோ, ஹலோ என்னங்க” என்றபடி எனது கண்ணாடி ஜன்னலை தட்டினான்.

‘தொந்திரவு ஒன்றுமில்லையல்லவா?” என்றபடி தனது கைகளை எனது காரின் கதவுகளில் வைத்தபடி முகத்தை ஜன்னல் அருகில் கொண்டு வந்தான்.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, வார்த்தை எதும் பேச எனக்கு வரவில்லை.

‘நான் உங்களை தாண்டி சென்ற பிறகு மெதுவாக ஓட்டிக் கொண்டே பின்புறம் பார்த்தால் உங்கள் காரை காணவில்லை. அதனால் ஓரமாக நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் தாமதித்தேன். அப்படியும் நீங்கள் வராததால் திரும்பி வந்து பார்க்கலாம் என வந்தேன். எல்லாம் சரியாக உள்ளது அல்லவா. எப்படி இந்த மாதிரி பூட்டிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள்?” என்றான்.

நான் என் தலையை அசைத்தேன்.

‘அட, அந்த கண்ணாடியை இறக்குங்கள், ஹேய், உங்களுக்கு ஒன்றுமில்லையே. நன்றாக இருக்கிறீர்கள் தானே? தனியாக ஒரு பெண் வண்டியோட்டிக் கொண்டு போகும் பாதையில் இந்த பகுதி” என தலையை ஆட்டிக் கொண்டே பாதையையும் என்னையும் பார்த்துக் கொண்டர்ன.

‘இப்போ, கண்ணாடியை இறக்குங்கள், இறக்கமாட்டீர்களா? இப்படியே நாம் பேச முடியாது” என்றான்.

‘தயவுசெய்து, நான் போக வேண்டும்”.

‘கதவைத் திறங்கள், சரியா?” ஏதோ நான் சொன்னதைக் கேட்காதவன் போல் கேட்டான். ஜன்னலையாவது இறக்குங்கள். மூச்சு திணறப் போகிறது” என்றபடியே எனது மார்பகங்களையும், தொடைகளையும் பார்த்தான். எனது பாவாடை எனது முட்டிகளுக்கு மேல் ஏறிக் கிடந்தது. அவனது பார்வை எனது தொடைகள் மேலேயே படர்ந்தது. இருந்தும் பயத்தினால் நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன்.

‘மூச்சு திணறட்டும் பராவாயில்லை” என்ற நான்,

‘நான் மூச்சு திணறக் கொண்டுதான் இறக்கிறேன் என்பது தெரியவில்லையா?” என்றேன்.

‘என்ன இழவாய் போயிற்று?” என்றபடியே கதவின் அருகிலிருந்து விலகி சென்றான். தனது வாகனத்தின் அருகே சென்றான். பின் பக்கவாட்டு கண்ணாடியில் நான் பார்த்தபோது அவன் மறுபடியும் திரும்பி வருவதைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டேன்.

‘நான் உங்களை சம்மிட் வரை தொடர்ந்து வர வேண்டியிருக்காதா? எனக்கு ஆட்சேபணையில்லை, எனக்கு நேரமிருக்கிறது” என்றான்.

நான் தேவையில்லை என தலையசைத்தேன்.

அவன் தயங்கியபின் தோள்களை குலுக்கி கொண்டான், ‘சரிதான் பெண்மணி, உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள், சரி” என்றான்.

அவன் நெடுஞ்சாலையை அடையும் வரை காத்திருந்து விட்டு நான் வண்டியை பின்புறம் செலுத்தி, கியரை மாற்றி மெதுவாக சாலைக்கு வந்தேன். அவன் தனது பின்புறம் பார்க்கும் கண்ணாடி மூலம் பார்த்துக் கொண்டிருந்தான். நான் எனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு எனது தலையை ஸ்டீரிங் மீது வைத்து சாய்ந்து கொண்டேன்.

சவப்பெட்டி மூடப்பட்டு வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருந்தது. தேவாலயத்தின் பிற்பகுதியில் போடப் பட்டிருந்த இருகதையில் நான் அமர்ந்து கொண்ட போது ஆர்கன் வாத்தியம் ஒலிக்க தொடங்கியது. ஆட்கள் கொஞ்சம் கொஞ்மாக வந்து உட்கார தொடங்கினார்கள். சிலர் நடுத்தர வயதினர், சிலர் வயோதிகர்கள் ஆனால் பலரும் இள வயதினராக இருபதுகளின் ஆரம்பத்தில் இருப்பவர்களாகவும் இன்னும் வயது குறைந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தாங்கள் அணிந்திருந்த சூட்டிலும், டைகளிலும், ஸ்போர்ட்ஸ் கோட்களிலும், கால் சட்டைகளிலும் தோல் கையுரைகளிலும் அடிசளகரியமாக இருப்பதை உணர்ந்திருந்தார்கள். எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பையன் கால் அகன்ற கால் சட்டையும் மஞ்சள் நிற குட்டை கையுடன் அமைந்த சட்டையையும் அணிந்திருந்தான். அருகில் அமர்ந்து கொண்டு உதட்டை கடித்துக் கொள்ள ஆரம்பித்தான். தேவாலயத்தின் பக்கவாட்டு கதவு ஒன்று திறந்து கொள்ள, நான் தலையை தூக்கி பார்க்கும்போது அந்த கார் நிறுத்துமிடம், ஒரு புல்வெளி சரிவு போல எனக்கு தோன்றியது. ஆனால் அதற்கப்புறம் சூரியன் கார் கண்ணாடிகளில் பட்டு பிரதிபலித்தது. அந்த குடும்பம் ஒன்றாக உள் நுழைந்து திரையிடப் பட்ட பக்கம் போனது.

அவர்கள் அமரும்போது நாற்காலிகள் கிரிச்சிட்டன. சில நிமிடத்தில் ஒரு ஒல்லியான வெளிறிய தலைமுடியுள்ள ஒரு மனிதன் எழுந்து நின்று எல்லோரையும் தலைவணங்கும்படி சொன்னார். அவர் கருமையான சூட் அணிந்திருந்தார். ஜீவித்து இருக்கும் எங்களுக்காக, அவர் மெதுவாக ஜபித்து விட்டு, பின்பு இறந்து போன சூசன் மில்லருக்காக அவளது ஆத்மாவிற்காக மௌனமாக வணங்க சொன்னார். நான் கண்ணை மூடி புகைப்படத்திலும், தொலைக்காட்சியிலும் வந்த காட்சிகளை நினைவுபடுத்திக் கொண்டேன். நான் அவள் சினிமா திரையரங்கிலிருந்து வெளியேறி பச்சை நிற செவர்லெட் காரில் ஏறுவதை பார்க்கிறேன். பின்பு அவளது நதி வழ பயணத்தை கற்பனை செய்து பார்க்கிறேன். நிர்வாண உடல் பாறைகளின் மேல் மோதி பின்பு மரக்கிளைகளில் சிக்கி, உடல் மிதந்தும் திரும்பியும், தலைமூடியெல்லாம் ஆற்றுநீரில் அளைந்து கொண்டும், இருப்பதையும் பின்பு கைகளும் முடியும் மரக்கிளைகளில் சிக்கி ஒரே இடத்தில் மிதக்க ஆரம்பிக்க, பின் நான்கு மனிதர்கள் வந்து அவளை வெறித்து பார்க்கும் வரை அப்படியே மிதந்தபடி இருந்திருப்பான். என்னால் போதையிலிருந்து அந்த மனிதன் (ஸ்டூவர்ட்?) அவளது கையை பற்றி இழுத்து கட்டியதை பார்க்க முடிந்தது. இங்கிருக்கும் யாருக்காவது இதெல்லாம் தெரிந்திருக்குமா? இந்த மனிதர்களுக்கு தெரிந்தால் என்னாகும்? நான் மற்றவர்கள் முகங்களை பார்த்தேன். தொடர்பு இருக்கக்கூடும். இவை அனைத்திற்கும் ஏதோ ஒரு இந்த நிகழ்வுகள், இந்த முகங்கள், என்னால் கண்டுபிடிக்க முடிந்தால், அதை கண்டு பிடிக்க எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக என் தலை வலிக்க ஆரம்பித்தது.

அவர் சூசன் மில்லரின் அருமை பெருமைகளை எடுத்து சொல்ல ஆரம்பித்தார். அவளது குதூகலமான தன்மை, அழகு, பண்பு மற்றும் அவளது முன்முனைப்பு பற்றி பேசினார். மூடிய திரையின் பின்புறம் இருந்த யாரோ ஒருவர் தன் தொண்டையை செருமிக் கொண்டார். யாரோ ஒருவர் விம்மினார். ஆர்கன் வாத்தியம் ஒலிக்கத் தொடங்கியது. சடங்கு முடிவடைந்தது.

மற்றவர்களோடு நானும் சவப்பெட்டியருகே சென்று மரியாதை செய்தேன். முன்புற படிக்கட்டை கடந்து சூடான பின் மத்தியான வெளிச்சத்திற்கு வந்தேன். எனக்கு முன் சென்ற ஒரு நடுத்தர வயது பெண்மணி விந்தி விந்தி நடந்தபடி பாதையோரமாக சென்ற சுற்றும் முற்றும் பார்த்தாள், அவளது படிலிருந்தவளின் பார்வை என்மேல் விழுந்தது. ‘நல்லது அவனை பிடித்துவிட்டார்கள்” என்றாள். ‘ஏதோ அந்த அளவிற்கு திருப்திதான், இன்று காலையில் தான் பிடித்திருக்கிறார்கள், நான் இங்கு வருவதற்கு முன்பாக ரேடியோவில் கேட்டேன். இந்த ஊர்காரன்தான். அவன் ஒரு நீள முடிக்காரன் என்று நீங்கள் யூகித்திருக்கலாம்” என்றபடியே நடைபாதையின் ஓரத்தில் பேசியபடியே நகர்ந்தாள். மனிதர்கள் காரை இயக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு பார்க்கிங் மீட்டர் மேல் கையை தாங்கலாக வைத்து கொண்டு நின்றேன்.

பாலிஸ் செய்த கார்களின் பாகங்களில் சூரிய வெளிச்சம் பட்டு ஜொலித்தது. எனது தலை தெறித்தது. ‘அன்றைய இரவு அவன், அவளுடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டான். ஆனால் அவளை கொல்லவில்லை என்கிறானாம்” என்று ஏளனமாக சொன்னாள். ‘விசாரணைக் கைதியாக வைத்திருந்து விட்டு பின்பு விட்டு விடுவார்கள்” என்றாள்.

‘அவன் தனியாக இதை செய்திருக்க முடியாது” என்றேன். ‘அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். தனது சகோதரனுக்காகவாவது அல்லது சில நண்பர்களுக்காவது யாருக்காகவாவது மூடி மறைத்திருக்கலாம்.

‘அவள் சிறு குழந்தையாக இருந்ததிலிருந்து எனக்கு தெரியும்” என்றபடியே அந்த பெண்மணி உதடுகள் துடிக்க சொல்லிக் கொண்டே போனான். ‘எனது வீட்டிற்கு வரும் போது அவளுக்கு சாப்பிட ஏதாவது சுட்டு கொடுப்பேன். அவரும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பார்ப்பாள்” என்றபடியே தனது தலையை குலுக்கி கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது.

ஸ்டூவர்ட் மேஜையின் முன் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார். அவரது கண்கள் சிவந்து போயிருந்தன. ஒரு நிமிடம் அவர் அழுது கொண்டிருப்பதைப் போல் தோன்றியது. என்னைப் பார்த்துவிட்டு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். டீனுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என கலவரமடைந்தேன். எனது இதயமே புரண்டது போல் இருந்தது.

எங்கே அவன்? எங்கே டீன்? என்றேன்.

‘;வெளியே இருக்கிறான்” என்றார்.

‘ஸ்டூவர்ட் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. ரொம்ம பயமாக இருக்கிறது” என்றபடியே கதவில் சாய்நது கொண்டேன்.

‘எதற்கு பயப்படுகிறாய் கிளேர்? சொல்லு கண்ணே, நான் உனக்கு உதவியாக இருக்கலாம். நான் உதவ தயார், உபயோகப்படுத்திக் கொள், கணவர்கள் இதற்காகத்தானே இருக்கிறார்கள்”.

‘என்னால் விவரிக்க முடியவில்லை, நான் பயந்திருக்கிறேன், நான் என்ன நினைக்கிறேன் என்றால், நினைக்கிறேன் என்றால், நினைக்கிறேன் என்றால்……”

தம்ளரில் இருந்த பானத்தை குடித்து முடித்துவிட்டு எழுந்து நின்று என் மீது வைத்த பார்வையை மாற்றாமல் ‘உனக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும் கண்ணே நான் தான் இப்போது டாக்டர். சரியா? இயல்பா இரு அது போதும்” என்றபடியே எனது இடையை பிடித்து அருகே இழுத்து எனது கோட்டையும் அதன்பின் எனது ஜாக்கெட்டை, ‘முதலில் எது செய்ய வேண்டுமோ அது” என்றபடி கேலியாக பேச முற்பட்டார்.

‘தயவு செய்து இப்போ வேண்டாம்” என்றேன்.

‘தயவு செய்து இப்போ வேண்டாம்” என்று கிண்டலடித்தார்.

‘அதெல்லாம் ஒன்றும் கிடையாது” என்றபடியே என் பின்புறம் நின்று கொண்டு எனது இடுப்பை தனது கரங்களால் வளைத்து இருக்கினார். அவரது ஒரு கை எனது மார்பு கச்சைக்குள் சென்றது.

‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள், நிறுத்துங்கள்” என்று அவரது கால் கட்டை விரல்களை மிதித்தேன்.

அதன்பின் நான் உயரமாக மேலே தூக்கப்பட்டு அப்படியே கீழே போடப்பட்டேன். எனது பாவாடை எனது முட்டிகளுக்கு மேலேறி கிடந்தது. எனது கழுத்து மிகவும் வலித்தது. தலையில் கிடந்தபடியே அண்ணாந்து பார்த்தேன். அவர் கீழே குனிந்து என்னைப் பார்த்து,

பெட்டை கழுதையே, அப்படியே நாசமா போ, கேட்குதா? நான் அடுத்த தடவை தொடுவதற்கு முன்னாலேயே உடன் கழண்டு விழுந்து விடவேண்டும் என விரும்புகிறேன்” என்றபடியே விம்மினார். அவரால் தாங்க முடியவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். அவரால்அவருக்குமே உதவியாக இருக்க முடியவில்லை. எங்களது நடுக்கூடத்திற்கு விரைந்த அவரை பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது.

நேற்று இரவு அவர் எங்கள் வீட்டில் தூங்கவில்லை.

இன்றைய காலை நான் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது வாசல் மணி அடித்தது, பார்த்தால் மலர்கள், சிவப்பும் மஞ்சளுமான கிரைசாந்திமம் பூக்கள், ‘திருமதி.கேன்?” என்றபடி ஒரு பெட்டி நிறைய பூக்களை பிடித்தப்படி ஒரு இளைஞன் முன் வந்தான்.

நான் ஆம் என தலையசைத்து விட்டு எனது அங்கியை கழுத்தை சுற்றி பிடித்துக் கொண்டேன்.
‘இதை கொடுத்தனுப்பியவரை உங்களுக்கு தெரியுமாம் என்று அவர் சொன்னார்” என்றபடி அந்த பையன் கழுத்தருகே திறந்திருந்த என் அங்கியை பார்த்படி முகமன் கூறினான். கால்களை பிரித்து வைத்தபடி மேல் படிக்கட்டில் உறுதியாக நின்றிருந்தான்.

‘நல்ல நாளாக இருக்கட்டும்” என்றான்.

சற்று நேரம் கழித்து தொலைபேசியில் கூப்பிட்டு ஸ்டூவர்ட் ‘கண்ணே, எப்படி இருக்கிறாய்? நான் வீட்டிற்கு சீக்கிரம் வந்து விடுவேன். நான் உன்னை நேசிக்கிறேன்” நான் சொல்வது கேட்கிறதா? நான் உன்மேல் அன்புடன் இருக்கிறேன். மன்னித்துக் கொள். நான் உன்னிடம் சரியாக நடந்து கொள்வேன், வந்தனம், தற்போது நான் வேலைக்கு ஓட வேண்டும்”.

சாப்பிட்டு அறையின் நடுவில் இருந்த சாப்பாட்டு மேஜையின் மேல் மலர்கள் வைக்கும் குவளையில் மலர்களை அடுக்கி வைத்துவிட்டு, எனது பொருட்களை எல்லாம் மற்றொரு படுக்கை அறைக்கு மாற்றி வைத்தேன்.

நேற்று இரவு, நடு ராத்திரியில் ஸ்டூவர்ட் எனது அறையின் பூட்டை உடைத்தெறிந்தார். தன்னால் முடியும் என காட்டவே இப்படி செய்தார் என நினைக்கிறேன். ஏனென்றால் கதவு உடைந்து தெறித்தபோது, ஏதும் செய்யாமல், தனது உள் ஆடையுடன் அசையாமல் நின்றார், முட்டாள்தனமாகவும், தனது காரியத்தை கண்டு தானே ஆச்சரியப்பட்டது போலவும், தனது கோபம் முகத்திலிருந்து மறை நின்றார். மெதுவாக கதவை மூடிவிட்டு சில நிமிடம் கழித்து சமையலறைக்கு சென்று ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

இன்று அவர் தொலைபேசியில் கூப்பிடும் போது நான் படுக்கையில் இருந்தேன். தனது அம்மாவை சில நாட்களுக்கு வரவழைத்துக் கொள்ளலாம் என சொல்லிக் கொண்டிருந்தார். நான் ஒரு நிமிடம் யோசித்து விட்டு அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே தொலைபேசியை வைத்துவிட்டேன் சிறிது நேரம் கழித்து நான் அவரது அலுவலக எண்ணிற்கு கூப்பிட்டேன். முடிவாக அவர் எடுத்து பேச வந்தபோது நான் சொன்னேன்.

‘அது ஒரு பிரச்சனையே இல்லை. ஸ்டூவர்ட், நான் சொல்கிறேன், எப்படி பார்த்தாலும் சரி இது ஒரு விஷயமே அல்ல”.

‘நான் உன்னை விரும்புகிறேன்” என்றார்.

அவர் வேறு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் மெதுவாக தலையை அசைத்து கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு தூக்கமாக வந்தது. பின்பு விழித்து எழுந்து அவரிடம் சொன்னேன்.

‘ஐயோ கடவுளே, அவள் ஒரு சின்ன குழந்தைதான் ஸ்டூவர்ட்”.

[தமிழாக்கம் விஜயராகவன்]

ஏற்காடு இலக்கியமுகாமில் விவாதிக்கப்பட்ட கதை

முந்தைய கட்டுரைசமகாலத் தமிழ்க் கவிதைகள்-கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைநாடகக்காதல்