பொருளியல், நாகரீகம்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இலக்கியவாதியான உங்களின் பொருளாதார புத்தகம் பற்றிய விமர்சனம் நன்றாக உள்ளது. மேற்கத்திய பொருளாதார வரலாற்றை அவர்களின் கோட்பாடுகளுடன் விவரித்து தமிழில் எழுதியுள்ள பேராசிரியர் நீலகண்டன் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டத் தக்கது. ஏனெனில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல தமிழில் பொருளாதாரம் பற்றிய புத்தகங்கள் மிகவும் அரிதாகவே வருகின்றன. பொருளாதார பதங்கள் நிறைந்துள்ள அந்தப் புத்தகத்தைக் கவனமாகப் படித்து பரிந்துரைத்துள்ள உங்களின் நோக்கமும் ஆர்வமும் பாராட்டுதலுக்குரியது. உங்களின் பரந்த வாசிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.

அன்புடன்

கனகசபாபதி.

அய்யா வணக்கம் ,

தங்களுடைய பந்தி கட்டுரை படித்தேன் , வியக்கும்படி இருந்தது –

தமிழர்கள் ஒருமுறை பயன்படுத்திய தட்டை மறுமுறை பயன்படுத்துவது இல்லை என்று மார்க்கோபோலோ ஒருமுறை வியந்து கூறியதாக கேள்விபட்டேன். அவ்வளவு நாகரிகம் கொண்டிருந்த ஒரு இனம் நாகரீகத்தின் உச்சம் என்று கூறிக்கொண்டு இன்று எந்தளவுக்கு மாறிவிட்டது. இன்னும் எவ்வளவு கலாச்சார சீர்கேட்டை நாம் காணவேண்டி இருக்குமோ ?

அன்புடன்
கோபாலன்

முந்தைய கட்டுரைஅறிதலுக்கு வெளியே-சீனு
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகளும் நானும்