வாசிப்பறை கடிதங்கள்

புதிய வாசிப்பறை! ஆஹ அருமையான படங்கள் மற்றும் வழக்கம் போல கடைசி வாக்கியங்கள் ஒரு மாதிரி பண்ணிவிட்டது  , இந்த மாதிரி படங்களையும்   அப்போ அப்போ கொஞ்சம் update பண்ணுங்க சார்  உங்கள் special வாசகர்களுக்காக ;


Regards
dineshnallasivam

 

அன்புள்ள தினேஷ்
பொதுவாக கன்யாகுமரி படங்கள் ஜனங்களுக்கு பிடித்திருக்கின்றன. மலைகளும் பசுமையும்தான் காரணம்போல
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் சார், உங்கள் கணியாகுளம் / ஆலம்பாறை படங்கள் இப்போது தான் பார்த்தேன். தெரிந்த இடங்கள் ஊடகங்களில் பார்க்கும் போது எப்போதுமே மகிழ்ச்சிதான். சைதன்யாவுக்கு என் வாழ்த்துக்கள். என்னிடம் உள்ள கொஞ்சம் படங்களைக் கூட ஆா்வமுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பாறையடியிலிருந்து சன் கல்லூரிகள் தாண்டி, துவரங்காட்டை நோக்கி. நான் வெகு தூரத்துக்கு உங்களை அழைத்துப் போகவில்லை என்று நம்புகிறேன் :)
இது நீங்கள் தினமும் பார்க்கிற குளம்தான். இதன் பெயர் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.


என்னுடைய பாக்கி படங்களின் சேகரத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. ஒன்றிரண்டு தவிர மீதம்அனைத்தும் குமரி மாவட்டத்து படங்கள் தாம்.

அன்புடன் குமார்
அன்புள்ள குமார்
படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் பொறியியல் கல்லூரிகள் வந்து வந்து அப்பகுதியே சந்தடி மிக்கதாக ஆகிவருகிறது.
ஜெ
அன்புள்ள ஜெமோ
உங்கள் ராஜ் பார்க். என் ஐ ஃபோன் காமிராவில்
அழகம்பெருமாள்
இயக்குநர்
அன்புள்ள ஜெயமோகன்,

 

    உங்கள் அறை நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த நாற்காலியையும் கணிப்பொறியையும் மாற்றலாம். ரொம்பவே பழசாகிவிட்டது .நீங்கள் படிப்பது எப்படி? படுத்துக்கொண்டு படிப்பீர்களா? அல்லது உட்கார்ந்து கொண்டா? படிக்கும்போது குறிப்புகள் எடுத்து கொள்வீர்களா? உங்கள் வீட்டு நூலகம் இதை விட பெரிசாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
    உங்கள் கட்டுரையின் கடைசி பத்தியை படிக்கும் போது மனது கனக்கிறது. 
     
அன்புடன்,
பிரபு
அன்புள்ள பிரபு
என் வீட்டில் கீழே கட்டும்போதே கூடத்திலும் அறையிலும் எல்லா சுவர்களையும் புத்தக அலமாரா வைத்தே கட்டினேன். கீழே முழுக்க புத்தகங்கள். எல்லா அறைகளிலும். புத்தகம் சேர்வதனால் வருடம் தோறும் புத்தகங்களை ‘கழித்து’ கட்டுவேன். இருந்தாலும் புத்தகங்கள் சுமையாக சேர்கின்றன
மேலே குறிப்புதவி நூல்களை மட்டுமே கொண்டு வந்தேன்
நான் படுத்துக் கொன்டு படிப்பதில்லை. நார்காலியில் காலை நீட்டிக்கொண்டு, அல்லது உயரமாக தூக்கி வைத்துக்கோன்டு படிப்பதுதான் வழக்கம்
ஜெ
வணக்கம் குரு.,
                உங்கள் வாசிப்பறையை பற்றி எழுதிய உடனேயே உங்கள் வலி கட்டுரை தான் (அதனால் ஏற்பட்ட விழுப்புண்) நினைவில் வந்தது.அவ்வறையின் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் மிகவும் மனநிறைவுடன் இருந்ததை முந்தைய சில கட்டுரைகள் தெரியபடுத்தின. எப்போதோ பார்க்க போவதாக நினைத்த தங்கள் இல்லத்தை தற்போது கண்முன் காண்பித்து விட்டீர்கள். நீங்கள் அமர்ந்து எழுதும் (தட்டச்சும்) இருக்கையை பார்த்தவுடன் மனதில் பல நினைவுகள், உங்கள் ஒவ்வொரு எழுத்தின் ஊற்று முகம் போல. வாசிப்பறையை பார்த்தவுடன் பெரும் பரவசம் ஏற்பட்டது.
 
            இந்த எளிமையான,சிக்கனமான வசதிகளை கூட இவ்வளவு மனநிறைவுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த இருக்கையில் கூட வலது பக்கம் உள்ள மரச்சட்டம் காணவில்லை!!! உங்கள் நிறைவுக்காண காரணம் நீங்கள் காந்திய வாதி என்பதால்..
 
           இறுதியான வரிகள் சற்று வருத்தம் அளிக்கிறது!! ஆக தாங்கள் இலக்கியத்தில் எதிர்பார்த்தது பொருளாதார வசதிகளை தானா? உங்களுக்கென உருவாகியுள்ள உங்கள் முகம் கூட அறிந்திடாத வாசக திரள்கள் உங்கள் சாதனை அல்லவா? எழுத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றம் என்பது நிகழ சாத்தியமா? எவ்வாறான மனநிலையில் உங்களிலிருந்து வெளிப்பட்டது என தெரியவில்லை.. என்னால் கேட்காமலும் இருக்கமுடியவில்லை!
பணிவன்புடன் மகிழவன்.,

அன்புள்ள மகிழவன்,

நான் இலக்கியத்தை எனக்கு பொருளியல் வசதியை தேடித்தரவேண்டிய ஒரு துறையாக எண்ணவில்லை. அப்படிபப்ட்ட பொருளியல் கனவுகளும்  எனக்கு இல்லை. ஆரம்பத்தில் பெரிய வாசகர் வட்டம் பற்றிய எதிர்பார்ப்பும் அது சார்ந்த மகிழ்ச்சியும் இருந்தது என்றாலும் இப்போது அதுவும் பெரிய பரவசம் அளிப்பதில்லை. எழுதுவது ஒன்றே இப்போது எழுதுவதன் நோக்கம்
நான் சொல்ல வந்தது, ஓர் எழுத்தாளனுக்கு அவனுக்கான சில அடிபப்டை வசதிகளைக்கூட எழுத்து அளிப்பதில்லை என்பதைச் சுட்டவே. நான் இவவ்ருடம் பெற்ற மொத்த ராயல்ட்டி பணம் எனக்கு இவ்வருடம் எழுத்தில் செலவான தொகையை விட குறைவானது. இவ்வளவுக்கும் நான் எதையுமே செலவழிப்பவன் அல்ல. தமிழில் மிக அதிகமாக எழுதுபவன், அதிகமாக வாசகர்களைக் கொண்டவனும்கூட
இந்நிலை மலையாளத்தில் வங்கத்தில் ஏன் கர்நாடகத்தில் கூட இல்லை. ஓர் எழுத்தாளன் பயணம் செய்ய, நூல்கள் வாங்க, அமர்ந்துஎ ழுத ஓர் இடம் தேட எழுத்து உதவவில்லை என்றால் அச்சமூகம் அவனை கைவிட்டுவிட்டதென்றே பொருள்
என் நண்பர் ஒருவர் சொன்னார். மாதம் ஒருலட்சம் ஊதியம் வாங்கும் நண்பர் ஒருவர் 12 கிலோமீட்டர் காரில் வந்து தன்னிடம் ஒரு நுலை இரவல் வாங்கிச்சென்றதாக. அந்த நண்பரால் அந்நூலை வாங்கியிருக்கமுடியும்– அவரது வீடு அருகிலேயே கடைகள். ஆனால் வாங்க வில்லை. வாசித்த பின் தூக்கி போடப்போகிறோம் என்று அதற்குப் பதில். ஆனால் 500 ரூ ட்க்கெட் எடுத்து சிவாஜி படம் பார்க்கும்போது இது தோன்றுவதில்லை
சினிமாவுக்காக தமிழர் செலவழிப்பதன் 1 சதவீதத்தை நூல்களுக்குசெலவழித்தால் தமிழின் பண்பாட்டுத்தளத்தில் புரட்சிகள் நிகழும். நான் சொல்லவந்தது அதையே
ஜெ 
888
சார்,
உங்க புதிய வாசிபரை கட்டுரையில ” நான் நேசித்த எதையும் என்னால் இலக்கியம் மூலம் அடைய முடியவில்லை” என்று எழுதியிருந்திர்கள். நீங்கள் நேசிக்கும் சில, பல பொருளாதார வசதிகளை வேணுமானால் உங்களால் இலக்கியத்தின் மூலம் அடையமுடியாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள் நேசிக்கும் உங்கள் ஆருயிர் நண்பர்கள், வாழ்கையை ஒரு வரமாக எண்ணி ஒவொரு நாளையும் குதுகாலதுடன் வாழும் உங்களின் மனநிலையை, உலகத்தில் நீங்கள் அதிகம் நேசிக்கும் உங்கள் அன்பு மனைவியை இவற்றை எல்லாவற்றையும் விட உங்களை நேசிக்கும் என் போன்ற பலாயிரக்கணக்கான வாசகர்களை உங்களுக்கு அளித்து இந்த இலக்கியம் என்பதை தயவுகுர்ந்து மறந்துவிட வேண்டாம்.
இவன்
செந்தில்- சென்னை.
(இப்படியெல்லாம் அறிவோட யோசிகரநேனு அடுத்த உங்க படத்துல ஹீரோ ரோல் பண்ணுன்னு தொந்தரவு செய்ய கூடாது.

அன்புள்ள செந்தில்

உண்மை.

இலக்கியத்தைவிட்டால் நான் நேசிக்கும் விஷயம் என்பது பயணம்தான். நாம் சேர்ந்து எத்தனை பயணங்கள் செய்திருக்கிறோம். மழையில் காட்டில் இந்தியக்கிராமங்களில். அப்பயணங்கள்மூலம்தான் நம் நட்பு வளர்ந்த்து. நீங்கள் சொல்லும் இனிய நண்பர்களுடனான இனிய பொழுதுகள் பல அமைந்தன

நான் சினிமாவில் பணியாற்றவில்லை என்றால் அவை எதையுமே நான் கற்பனைசெய்திருக்க முடியாது. ஒருநாளில் எட்டு மணிநேரத்தை அலுவலகத்தில் செலவழித்தபின் எஞ்சும் நேரத்தில் கொஞ்சம் எழுதியிருப்பேன். வாழ்க்கையை தீவிரத்துடன் வைத்திருக்கவே எழுத்தாளன் விரும்புவான். அதற்கு எதிரானது சலிபூட்டும் அன்றாட உழைப்பு. நான் என்றும் ஆசைபப்ட்டது அதில் இருந்து விடுதலை. கால்வாசியேனும் அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது – சினிமாவால்

நான் சொன்னது அதையே.

ஜெ

 

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 17,ரயிலில்
அடுத்த கட்டுரைஊடக இல்லம்