கடிதங்கள்

அன்புள்ள ஜெ,
http://jeyamohan.in/?p=2160

-ல் எம்.டி.யின் நாலுகட்டு, இரண்டாமிடம் இரண்டும் தமிழில் கிடைக்கின்றன
என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘காலமும்’ கிடைக்கின்றது. மணவை முஸ்தபா
மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கின்றது. விலை 100 ரூ.
பக்கங்கள் 368.

ISBN-81-260-1254-4.

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.

அன்புள்ள ஜெ,

உங்களுடைய “இயற்கை உணவு : என் அனுபவம்” (http://jeyamohan.in/?p=373)
என்ற கட்டுரையை மீண்டும் ஒரு முறை இன்று படித்தேன். அதில் நீங்கள்
குறிப்பிட்டுள்ள “நோயின்றி வாழ முடியாதா?” என்ற நூல் இன்றும்
கிடைக்கிறதா? Google-ல் தேடிப் பார்த்தேன். சரியான தகவல் கிடைக்கவில்லை.

நன்றி


கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்,
இப்போது அந்த நூல் சந்தையில் உள்ளது என்று படவில்லை. அம்பாசமுத்திரம் சிவசைலம் அருகே உள்ள ந்த ஆசிரமத்தில் ‘நல்வாழ்வு ஆசிரமம்’ ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் அதைவிட மேலும் விரிவான சிறந்த இயற்கை உணவு நூல்கள் கிடைக்கின்றன
ஜெ
அன்புள்ள ஜெயமோஹன்,
’கங்காரு’வா ’காங்கரு’வா?
காங்கரு என்றுதான் சொல்லுவார்கள் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
எஸ். கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி
ஆஸ்திரேலியாவே ஒரு பன்முக பண்பாட்டு நாடு. வகைவகையான உச்சரிப்புகள். கேங்கரு என்று தொலைக்காட்சியில் சொல்கிறார்கள். ஆனால் காங்கரு கென்கேரு என்றெல்லாம் காதில் விழுந்தன. நம்முடைய உச்சரிப்பும் ஆஸ்திரேலியப்பண்பாட்டுக்கு கொடையாக இருக்கட்டுமே
ஜெ
வணக்கம்
                     திரு ஜெயமோகன் சார் நான் உங்களின் வலைத்தளம் இரண்டு வருடங்களாக வசித்து வருகிறான் .நல்ல கருத்துகளை எழ்துகிரிகள் .உங்களின் ஆஸ்திரேலியா கட்டுரை படிக்க படிக்க ஆர்வமாக உள்ளது.நீங்க ஏன் பிரிஸ்பன் பக்கமே வரவில்லை? உங்கள் எழுத்துப்பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
மைனார் சாமி
அன்புள்ல சாமி
என் திட்டம் மிகச்சிறியது. அழைக்கபப்ட்ட இடங்களுக்கு மட்டுமே நான் சென்றுவந்தேன். இன்னொரு முறை பார்க்கலாம். எங்கே போய்விடப்போகிறது ஆஸ்திரேலியா?
ஜெ
.
அன்புள்ள ஜெ,

நான் கூட இளைக்க வேண்டும். ஆம்-வேயின் புரதப் பொடியை இரவில் சாப்பிட்டிற்கு பதில் அருந்தினால் உடல் இளைக்கும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.

சாஸ்த்ர பிரகாரம், சூர்யா அஸ்தமனத்திற்குப் பின் உணவு உட்கொள்ளல் கூடாது, எனவே மாலை ஐந்து மணி அளவிலேயே ஏதேனும் ஆதாரம் செய்துவிட்டு, இரவில் சிறிது மோர் அருந்தலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

நாளை முதல் இதில் ஏதாவது ஒன்றைச் செய்துவிடுவேன் என்ற தினம் மனவுறுதி பூண்டு விட்டு, சுலபமாக அடுத்த நாள் கச்சேரி முடிந்து இரவு பத்து மணிக்கு மேல் வீடடைந்ததும் வயிற்றின் குரலுக்கு செவி சாய்த்தபடி நாட்கள் நகர்கின்றன…


wishes,

Erode Nagaraj.

1. http://ramsabode.wordpress.com/2006/10/07/erode-nagaraj/

2. http://www.chennaionline.com/chennaicitizen/2004/02nagarajan.asp

3. http://www.nscottrobinson.com/southindiaperc.php

அன்புள்ள நாகராஜ்

இளைக்க வாழ்த்துக்கள். ஆனால் பொதுவாக இசைக்கலைஞ்சர்கள் இளைப்பதில்லையே.. சுகவாசிகள் என்பது காரணமா, இல்லை இசைக்கு உடலை குண்டாக்கும் சக்தி ஏதாவது உண்டா?

ஜெ

முந்தைய கட்டுரை‘யாரும் திரும்பவில்லை’
அடுத்த கட்டுரைஅ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி