சிறுகதைகளும் படிமங்களும்

அன்புள்ள ஜெயமோகன்,


பூமணியின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரையில்
ஜானகிராமன், வண்ணதாசன் , புதுமைப்பித்தன் கதைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் படிமங்கள் அபாரம். ஒவ்வொருவருக்கும் இதே மாதிரி படிமங்கள் என் மனசிலும் உண்டு. எனக்கு ஜானகிராமன் கதைகள் என்றாலே காவேரியில் இருந்து ஏறிவரக்கூடிய கல்படிகள்தான் ஞாபகத்துக்கு வரும். அதேபோல வண்ணதாசன் கதைகள் என்றாலே சின்னஞ்சிறிய சிமிண்ட் திண்ணைகள். அப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

பூமணிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் படிமம் அபாரமானது. கவிதை மாதிரி. இலக்கிய விமர்சனமே எப்படிக் கவிதையாகிறது என்பதை இந்தக் கட்டுரையிலேதான் கண்டேன்.

செம்மணி அருணாச்சலம்

ஜெ,

பூமணியின் சிறுகதைகள் கட்டுரை வாசித்தேன்

பூமணியின் கதைகளை உறைந்து கறுத்த ரத்தத்துளிகளாகவே என்னால் உணர முடிகிறது…. ஆனால் அடிபட்ட காயத்தில் இருந்து வழியும் குருதியாக அவை இல்லை. என்றோ எப்போதோ பட்ட அடியில் இருந்து சொட்டி உலந்து கருகி கரிப்பொட்டாக ஆகி எஞ்சியிருக்கும் குருதி. தொட்டு முகர்ந்தால் மட்டுமே அது குருதி என்று தெரிகிறது

அன்புள்ள ஜெயமோகன், எனக்குத்தெரிந்து ஒரு படைப்பாளியின் கதைகளுக்கு அளிக்கப்பட்டவற்றில் மிகச்சிறந்த படிமம் இதுதான். என்ன ஒரு தீவிரம். வாசிக்க வாசிக்க பதற்றமாகவும் ஈர்ப்பாவும் ஒரேசமயம் இருக்கிறது. அதற்கு உதாரணமாக நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் கதை இருக்கே, பயங்கரம்

செல்வன்

முந்தைய கட்டுரைஇசையுடன் மரபைக் கொண்டாடுவோம்…
அடுத்த கட்டுரைபூமணியை ருசித்தல்-கடிதம்