சிந்துசமவெளி எழுத்துக்கள்

அன்புள்ள ஜெ,
நான் உங்களுடைய எழுத்துக்களை இணையத்தில் கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து வருகிறேன். இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.

ராஜேஷ் ராவ், என்ற மூளையியல் பேராசிரியர் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் அவர் அளித்த TED சொற்பொழிவில் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துக்கள்  திராவிட மொழியின் (தமிழ்)  ஒரு வடிவமே என்ற கருத்தை ஆய்வுகளின் மூலம் முன்வைக்கிறார். இந்த ஆய்வு முடிவின் வெளியீட்டால் வந்த அச்சுறுத்தல்களையும் கூறுகிறார். இதைத் தங்களின் பார்வைக்குக் கொண்டுவரலாம் என்று….

இதற்குத் தொடர்புடைய சுட்டிகள்,
TED சொற்பொழிவு:
http://www.youtube.com/watch?v=kwYxHPXIaao
http://www.ted.com/talks/rajesh_rao_computing_a_rosetta_stone_for_the_indus_script.html

ராஜேஷ் ராவ் இணையதளம்:
http://www.cs.washington.edu/homes/rao/
http://www.cs.washington.edu/homes/rao/indus.html

அன்புடன்,
பாலாஜி

 

அன்புள்ள பாலாஜி

இந்த  விஷயத்தில் கருத்துச்சொல்லுமளவுக்கு நான் நிபுணன் அல்ல. ஆனால் ஐராவதம் மகாதேவன் போன்றவர்களின் ஆய்வுகளுக்குப் பின்னர் சிந்து சமவெளி மற்றும் அதே காலகட்டத்தைச் சேர்ந்த லோத்தல் போன்ற இடங்களில்  கிடைத்துள்ள எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள்,தென்னகப் பண்பாட்டையும் தமிழ் உட்படப் பல மொழிகளுக்கு மூலமொழியாக இருந்த ஒரு தொல்மொழியையும் சேர்ந்தவையாக இருக்கலாமென்ற ஊகம் வலுப்பெற்று வருகிறதென நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைசுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்
அடுத்த கட்டுரைரப்பர் நினைவுகள்