லண்டனில் ஒரு நினைவுச்சின்னம்

லண்டன் பக்கிம்ஹாம் அரண்மனைக்கு போகும் வழியில் (விவேகானந்தர் குறுக்குச் சந்துக்குப்பின்!) இந்த நினைவுத்தூண் இருக்கிறது.
உலகப்போர்களில் நேச நாடுகள் சார்பில் போரிட்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு வீரர்களுக்காக…
ஒரு நிமிடம் பொறுங்கள்…உலகப்போர்களின் போது பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளே இல்லையே, இந்த வீரர்கள் இந்திய வீரர்கள் என்றுதானே அறியப்பட்டார்கள், அப்படித்தானே போரிட்டார்கள், உயிர் நீத்தார்கள்…இது வழக்கம்போல் பிரிட்டிஷ் குசும்புதானே…அல்லது இது ஒன்றும் தப்பில்லையோ?

சிவகுமார் கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள சிவகுமார்

எனக்கு அப்படித் தோன்றவில்லை. அப்படிச் சொல்லப்போனால் பிரிட்டிஷ் இந்திய வீரர்கள், பிரிட்டனின் குடிமக்கள் என்றல்லவா இருகக்வேண்டும்? அதைவிட இப்படி இருப்பது மேல் அல்லவா?

 

ஜெ

முந்தைய கட்டுரைதொடக்கம்
அடுத்த கட்டுரைஒரு பழைய படம்