நான் கடவுள், கடிதம்

அன்புள்ள ஜெ

நான் கடவுள் படத்தைப்பற்றிய எல்லா விமரிசனங்களையும் நான் தொகுத்து அனுப்பியிருக்கிறேன். பார்க்கவும்.

பொதுவாக நான் கவனித்தது என்னவென்றால் இந்தப்படம் பற்றி விதவிதமான எதிர்பார்ப்புகளுடன் சென்றவர்களுக்கு ஒரு வகை ஏமாற்றம் இருக்கிறது. காசி இன்னும் நிறைய இருந்திருக்கலாம், இன்னும் கடுமையான சண்டைக்காட்சிகள் இருந்திருக்கலாம் என்றெல்லாம் நினைக்கிறார்கள்

அதேபோல ஒட்டுமொத்தமாக சினிமாவைப்பார்ப்பவர்களுக்கு இந்த சினிமாவை வகைப்படுத்திக்கொள்ள ஒரு குழப்பம் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு புரியவில்லை, அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதையே சொல்லியிருக்கிறார்கள். நிறைய விமரிசனக்கருத்துக்கள் அந்த புரியாத நிலையில் இருந்து எழுந்து வரக்கூடியவை

உதாரணமாக, பிச்சைக்காரர்களைப் பார்த்தால் பரிதாபம் வரவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள் என்பதை ஒருவர் எழுதியிருந்தார். பரிதாபத்தை உருவாக்குவதற்குப் பதில் அவர்களுடன் சேர்ந்து வாழும் உணர்வை அளிப்பதற்கே இயக்குநர் முயன்றிருக்கிறார் என்பதை கொஞ்சம் கவனித்தாலே புரிந்துகொள்ள முடியும்.

பிச்சைக்காரர்கள் சிரித்துக்கொண்டே இருப்பதாக அவர் காட்டுவதும் அதற்கு அவர் அளித்திருக்கும் குளோஸ் அப் காட்சிகளும் அதைத்தான் காட்டுகின்றன.

தாண்டவன் இருக்குமிடம் இயற்கையாக இல்லை என்று சிலர் சொன்னார்கள். அந்த இடம்  ஒருவகை பாதாளம் — ஏழாம் உலகம் — என்று இயக்குநர் சொல்ல வருகிறார் என்பதும் புரியவேண்டியதே

மொத்தத்தில் ஒரு நல்ல படத்தை கூர்ந்து பார்க்காமல் உடனுக்குடன் என்ன தோன்றுகிறதோ அதை எழுதுகிறார்கள். இந்தப்படம் நிறைவை அளிக்கும் படம் அல்ல. மனக்கசப்பை அளிக்கக் கூடிய படம். மனசாட்சியை தீண்டக்கூடிய படம். அப்படி தீண்டவில்லை என்றால் பிரச்சினை படத்தில் இல்லை.

இந்தப்படத்துக்குள் ஒரு படம் இருக்கிறது. தாண்டவனின் பாதாளம் காட்டப்படும்போது அந்தப்படம் ஆரம்பிக்கிரது. பிச்சைக்காரர்களின் உறவுகள், அன்றாட வாழ்க்கை, அவர்கள் மற்ற ‘நார்மல்’ உலகம் மீது காட்டும் ஏளனம் நக்கல், அவர்களின் கொண்டாட்டம் என்று படம் ஓடுகிறது. கடைசியில் நாயர் வந்து அவர்களைப் பிரிக்கும்போது ராமப்பனின் சாபத்துடன் படம் முடிகிறது. அவ்வகையில் ஒரு முழுமையான கலைப்படம் பார்த்த அனுபவம் இருக்கிறது. சர்வதேசத்தரம் கொண்ட படம் அது. அப்படி எடிட் செய்து ஒரு படத்தை உருவாக்கவே முடியும்

நம்முடைய அன்றாட வியாபார சினிவாவுக்குள்  இப்படி ஒரு அருமையான கலைப்படமும் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்

சண்முகம் குமரவேல்
[தமிழாக்கம்]

அன்புள்ள சண்முகம்,

நான் கடவுள் விமரிசனங்களையும் கடிதங்களையும் நான் என் இணையத்தில் வெளியிடுவதாக இல்லை. காரணம் அவை வந்து குவிகின்றன. நீங்கள் சொன்னதுபோல பலவகையான கேள்விகள், தத்தளிப்புகள். ஆனால் மிகப்பெரும்பாலானவர்களுக்கு படம் ஆழமான அதிர்ச்சியையும் சஞ்சலத்தையும் கொடுத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். பெரும்பாலான கருத்துக்கள் படத்துக்குச் சாதகமானவை. முற்றிலும் எதிர்மறையாக ஏதும் சொல்லப்படவில்லை-

இந்த விமரிசனங்களை நான் வாசிக்க வேண்டாமென எண்ணுகிறேன். இவை படத்தை பலவகையில் உள்வாங்கிக்கொள்லும் முயற்சிகள். இந்த அலை ஓய்ந்தபின் நிதானமான ஒரு கருத்து உருவாகி வரும் அப்போது பார்ப்போம்.

நீங்கள் சொன்னதுபோல் இந்த வணிகப்படத்துக்குள் ஒரு முக்கியமான, நுட்பமான தளங்கள் கொண்ட, வன்மையான ஒரு படம் இருக்கிறது. மீன் வயிற்றுக்குள் இன்னொரு மீன் இருப்பது போல. அல்லது சிப்புக்குள் முத்து இருப்பது போல.அதன் செவ்வி தலைப்படுவாரும் சிலர் இருப்பார்கள்.

சினிமா மட்டுமல்ல இலக்கியப்படைப்புகளைப் பற்றிக்கூட அப்படி போகிற போக்கில் எதையாவது சொல்லிவிடுபவர்கள் நம் மக்கள். இப்போது எல்லாரும் ஏழாம் உலகம் ஒரு கிளாஸிக் என்கிறார்கள். ஆனால் அந்நாவல் வந்தபோது வந்த விமர்சனங்கள் பெரும்பாலும் புரட்டிப்பார்த்துவிடு எழுதப்பட்டவை. டாகுமென்டரி போல இருக்கிரது என்று பலர் சொன்னார்கள். ஏன் நகைச்சுவையே இல்லாத சீரியஸான நாவல் என்றுகூட ஒரு ஆசாமி எழுதியிருந்தார்.

 

ஜெ

http://girirajnet.blogspot.com/2009/02/blog-post_09.html

http://tamilsam.blogspot.com/2009/02/blog-post_07.html

 

http://cablesankar.blogspot.com/2009/02/blog-post_06.html

 

http://ennam.blogspot.com/2009/02/blog-post.html

 

http://www.karkibava.com/2009/02/blog-post_3097.html

 

http://tamil.cinesnacks.in/?p=382

 

http://sharehunter.wordpress.com/2009/02/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/

 

http://ayanulagam.wordpress.com/2009/02/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/

 

http://twitter.com/athisha/statuses/1185848194

 

http://www.saravanakumaran.com/2009/02/blog-post_9588.html

 

http://pitchaipathiram.blogspot.com/2009/02/blog-post.html

 

http://www.tamilvanan.com/content/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/

 

http://www.valaipookkal.com/story.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D—%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

 

http://www.luckylookonline.com/2009/02/blog-post_06.html?showComment=1233907020000

 

http://www.saravanakumaran.com/2009/02/blog-post_9588.html

 

http://thoughtsunlimited.rediffiland.com/blogs/2009/02/08/Movie-Review.html

 

http://www.writerpara.com/paper/?p=488

http://apsaravanan.blogspot.com/2009/02/blog-post_07.html

 

 http://ennam.blogspot.com/2009/02/blog-post.html

 

மதுபாலா:கடிதங்கள்

மதுபாலா

முந்தைய கட்டுரைவழி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆதீனம்:கடிதங்கள்