விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு

விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

 

வணக்கம்.

மிக தாமதமாக எழுதுகிறேன். நீங்கள் இரு நாட்கள் முழுவதும் நடத்திய விழாப் பதிவுகளையும், காணொளிகளையும், ஆவணப்படத்தையும் பார்த்து முடிக்க எனக்கு இத்தனை நாட்கள் ஆகி விட்டன. மிகச் சிறப்பாக நடந்திருப்பது புரிகிறது. ஒவ்வொரு மணித்துளியும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது மகிழ்ச்சி.  ராஜ் கெளதமனின் உரை அவரது ஆய்வுக்கட்டுரைகளோடு சமன் வைத்துப் பார்க்க முடியாத எளிமையைக் கொண்டிருக்கிறது. ஆவணப்படம், அவரை முப்பரிமாணத்தில் காட்டியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய நூற் பட்டியலை அவர் மனைவி தெளிவாய் சொல்வதும், அவருடைய பிடிவாதம் குறித்து மனவருத்தத்தை வெளிப்படுத்தியதும் இயல்பானதாகவும், அவரை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது.

எனினும், ஒருவர் முழுநேரப் பேராசிரியர் பணியுடன் சேர்த்து இத்தனை நூல்களை எழுதி இருக்கிறார் என்பது அவருடைய கடும் உழைப்புக்கு சாட்சி. அவ்வாறு சாத்தியப்படுத்தியதில் அவரது இணையருக்கு நிச்சயம் பெரும் பங்கு இருந்திருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துகள்.

2019 ல் படிக்க வேண்டிய புத்தகப் பட்டியல் எனக்கு தயாராகிக் கொண்டு இருக்கிறது. ராஜ் கெளதமன் இவ்வருடம் ஆரம்பிக்கிறேன்.நீங்கள் பரிந்துரைக்கும் வேகத்தில் வாசிக்க முடியவில்லை என்பது வருத்தமாய் இருக்கிறது. உங்களுடைய உரை, உங்களது பாணியில் கச்சிதமான வடிவமைப்புடன் அமைந்தது. கட்டுரையைப் போல், திருத்தமாய் உரையின் உள்ளடக்கம்  இருந்தது சிறப்பு. விவாதங்கள் காணொளி இல்லாவிட்டாலும், உங்களுக்கு வந்த கடிதங்கள் வழி அவற்றையும் பார்த்த உணர்வு. கலைச்செல்வி குறித்து அதிகம் தெரியவில்லை. இனிமேல் வாசிக்கிறேன்.

இலக்கியமெனும் களிப்பு – என்ற பதிவில் இவ்விழா சிறக்க ஈடுபட்ட அனைவரையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பவித்ரா.

 

வணக்கம் ஜெயமோகன் அவர்களுக்கு ,

விஷ்ணுபுரம் விருது விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வாசகர்கள் திரளாக பங்குபெற்று சிறப்பித்த நல்லதொரு இலக்கிய விழா.

350க்கும் மேற்பட்டோருக்கு  இரு நாள்கள் தங்கு மிடமும், ஆறு வேளை உணவும் வழங்கப்பட்டது .இது ஒரு பெரும் பொருள் செலவு. விழா எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது என்பதை தளத்தில் வந்த கடிதங்கள் உறுதி செய்கின்றன.

இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியக் காரணம் நிதி. அந்த நிதியை உலகெங்குமிருந்து  அனுப்பி தந்த வாசகர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் நிதியளித்த அனைவருக்கும் நன்றி.

ஷாஹுல் ஹமீது,

நாகர் கோவில்

 

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழா சிறப்பாக நடைபெற்றதை அறிந்தேன். மிக விரிவான பதிவுகள் வழியாக அங்கே என்னென்ன நடந்தன என்பதை இங்கிருந்தே அறிந்துகொள்ளமுடிந்தது. தமிழகத்தின் அறிவார்ந்த பெருவிழாவாக இது நிகழ்ந்துவருகிறது.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக தமிழிலக்கியத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கும்படியாக விழா இருந்தது. குறிப்பாக முந்தைய நாள் விவாதங்கள். எல்லாவகையிலும் எழுதுபவர்களை அறிமுகம்செய்து விவாதிப்பது ஒரு சிறந்த விஷயம்.

எஸ்.ராகவன்.’

=============================================================================================================

விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை

விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை

விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை

விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை

விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை

விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

=============================================================================================================

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -1

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 2

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3

விஷ்ணுபுரம் விழா :கடிதங்கள் 4

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5

விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 6

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள்-7

விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 8

விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள்-9

விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 10

விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-11

விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-12

விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13

விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-14

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 15

 

முந்தைய கட்டுரையானை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகைத்தறி நெசவும் விஷ்ணுபுரமும்