விஷ்ணுபுரம் விருதுவிழா இன்று முதல்

IMG_20181222_082016

 

விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இன்றுமுதல் தொடங்குகிறது. இன்று [22=12-2018] காலை 930 மணிக்கு கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடங்கும். விருந்தினர் உட்பட பன்னிரண்டு எழுத்தாளர்கள் பங்குகொள்கிறார்கள்.

வெளியூரிலிருந்து விழாவுக்கு வருகைதருபவர்கள்தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானி சங் அரங்கிலும் அருகிலுள்ள இரு விடுதிகளிலும். முன்னரே பதிவுசெய்தவர்களுக்கு முன்னுரிமை. தொடர்புக்கு

எழுத்தாளர் சந்திப்புகள் எழுத்தாளர்கள் சிறியமேடையில் அமர்ந்திருக்க வாசகர்கள் அரங்கென அமைந்து அவர்களிடம் அவர்களின் படைப்புக்களைப் பற்றி கேள்வி எழுப்பி பதில்பெறும் வடிவில் இருக்கும். எழுத்தாளர்களின் பதில்களை பெறுவதும். அவர்களின் கருத்தை அறிந்துகொள்வதுமே இச்சந்திப்புகளின் நோக்கம்

தொடர்ச்சியான சந்திப்புகள் இரவு 9 மணி வரை உண்டு. 9 மணிக்கு சென்ற ஆண்டுகளைப்போல இவ்வாண்டும் இலக்கிய வினாவிடை நிகழ்ச்சி நடைபெறும். நண்பர் குவிஸ் செந்தில் நடத்துகிறார். உற்சாகமான ஒரு விளையாட்டாக அது அமையும்

நாளை [23-12-2018] மாலை 530 மணிக்கே ராஜஸ்தானி சங் மைய அரங்கில் பரிசளிப்புவிழா தொடங்கும். நண்பர் கே.பி.வினோத் தயாரித்துள்ள ராஜ் கௌதமனைப்பற்றிய ஆவணப்படமான பாட்டும் தொகையும் திரையிடப்படும். தொடர்ந்து பரிசளிப்புவிழா நிகழும்

அனைவரும் இன்று ஒன்பது மணிக்கே அரங்குக்கு வரவேண்டும் என்றும் நாளையும் நிகழும் சந்திப்புகளில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் மாலை ஐந்தரை மணிக்கே வந்து ஆவணப்பட திரையிடலில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் கோருகிறேன்

 

ஜெ

 

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா :எழுத்தாளர் சந்திப்புகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா:விருந்தினர்