எஸ்.ரமேசன் நாயர் -கடிதங்கள்

s-rameshan-nair

எஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அக்காதமி விருது

அன்புள்ள ஜெ

ரமேசன் நாயர் இயற்றிய’வனஸ்ரீ முகம் நோக்கி’   மலையாள திரைப்பாடலின் ஓசை நயமும் உங்கள் மொழியாக்கமும் மிகவும் அழகு. வெண்முரசில் இடம்பெறத்தக்க வரிகள். (துரியோதனன் பானுமதிக்கு தோதாக இருக்கும் என்று தோன்றியது)

ஆனால் கே வி மகாதேவன் இசையில் வீணையும் வயலினும் சேர்ந்து மென்மை குலைவது போல் உள்ளது.

மது

***

அன்புள்ள மது

அந்தப்பாடல் சினிமாவில் ஒரு மேடைநடனத்துக்காக அமைக்கப்பட்டது. ஆகவேதான் சற்று வேகமான தாளமும் சலங்கையும் கலந்துள்ளன

***

அன்புள்ள ஜெ

எஸ்.ரமேசன்நாயருக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டிருப்பதைப்பற்றிய செய்தியைப் பார்த்தேன். அவரை ஒரு பாடலாசிரியராகவே தெரியும். இசைக்கவிஞராகவும் மொழியாக்க நிபுணராகவும் நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்

அவருடைய ஆளுமை வியப்பளிக்கிறது. கருணாநிதிக்கு நெருக்கமானவர். ஆனால் ஆர் எஸ் எஸின் அமைப்பின் தலைவராக இருந்திருக்கிறார். நாயர். ஆனால் நாராயணகுருவைப்பற்றிய நூலுக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றிருக்கிறார்

இதில் மு கருணாநிதி அவர்களின் குணச்சித்திரமும் தெரிகிறது. தனிப்பட்ட நட்புகளிலும் கலை கல்வி சார்ந்த விஷயங்களிலும் அரசியல் மாச்சரியங்களைக் கலக்காதவராக இருந்திருக்கிறார். இன்றைய இணையத்தலைமுறை அதை கவனிக்கவேண்டும்

அவரை நம் மண்ணின் மைந்தன் என நினைப்பதில் பெருமை

ரவிச்சந்திரன்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9
அடுத்த கட்டுரைஉரையாடும் காந்தி