அஞ்சலி: நெல் ஜெயராமன்

 

nelq

இலக்குள்ள வாழ்க்கை அரிதாகவே அமைகிறது. அது நம் தெரிவுதான் என்றாலும் நம்மால் பெரும்பாலும் அதைத்தெரிவுசெய்ய முடிவதில்லை. நாம் நமது ஆசைகளாலும் நமது பலவீனங்களாலும் கட்டுண்டிருக்கிறோம். இலட்சியவாதிகள் நமக்கு பெரும் மனக்கிளர்ச்சியை அளிப்பது இதனால்தான். கோழி பருந்தை ஏறிட்டு பார்ப்பதுபோன்றது அது. பண்ணைக்கோழிகளுக்கு பார்ப்பதும் அமைவதில்லை

 

நம் காலகட்டத்தில் இலட்சியவாதிகளில் ஒருவரான நெல் ஜெயராமன் மறைந்தார். இயற்கைவேளாண்மை நிபுணர். மரபுசார்ந்த நெல்வகைகளை பேணி சேமிப்பதில் வாழ்க்கையை பொருள்கொண்டதாக்கியவர். இலட்சியவாதிகள் வாழ்க்கையை செய்தியாக ஆக்கிக்கொண்டவர்கள். நெல் ஜெயராமன் நமக்கு ஓர் அறைகூவல்

 

அஞ்சலி

 

நெல்ஜெயராமன் மறைவு -விகடன்

முந்தைய கட்டுரை2.0 – சில பதில்கள்
அடுத்த கட்டுரைசெல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி