ராஜ் கௌதமனை அறிய…

raj

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

இனிய ஜெயம்

மார்க்சிய உரையாடல்களில் இரண்டு வகைமைகளை காண்கிறேன் .ஒன்று கோசாம்பி போன்றோர் முன்வைக்கும் செவ்வியல் மார்க்சியம் .மற்றொன்று ரொமிலா தாப்பர் போன்றோர் முன்னெடுக்கும் [இங்கு இருப்பவை அனைத்துமே முரண்கள் ,முரண்களன்றி வேறில்லை எனும் நோக்கு ] உடைப்புவாத மார்க்சியம் . தமிழில் பெரும்பாலும் காணக் கிடைப்பது இரண்டாம் வகை கம்பு சுற்றல்களே .

இந்த இரண்டாம் நிலை மட்டுமேதான் மார்க்சிய அறிவு தரப்பு என்று சொல்லி , எளிதாக ஒரு வலிமையான உரையாடல் தரப்பையே புறக்கணிக்க முயலும் இங்கிருக்கும் எதிர் தரப்புகள் . ஆகவே இங்கே தமிழ் சூழலில் பொது வெளியில் மார்க்சியத்துடன்  உரையாடலே அற்ற ஒரு தேக்க நிலைதான் காணக் கிடைக்கிறது.

இந்த நிலைக்கு வெளியில் நின்று ,இன்று சமூக பண்பாட்டு அரசியல் வெளியில்,வினை புரியும் அனைத்து கருத்தியல் தரப்புகளும் ,ஆக்கப்பூர்வமான நோக்கில் , இன்றைய மார்க்சிய கோட்பாடுகளுடன் உரையாட வேண்டும் ,எனும் நோக்கில் சீரிய பல கட்டுரைகள் எழுதி வருபவர் ,நா .முத்துமோகன் அவர்கள் .  அவர் முன்வைக்கும் தரப்பின் நோக்கில் போதாமைகள் இருக்கலாம் ,  அவருடன் கருத்து வேறுபாடுகள் எல்லாம் , இவற்றைக் கடந்து , அவருடன் உரையாட பல விவாதப் புள்ளிகள் உண்டு . இதக்கு விவாதப் புள்ளிகளை நோக்கி ,உரையாடலை திறக்கும் தமிழின் மிக சில மார்க்சிய கோட்பாட்டாளர்களில் நா .முத்துமோகன் அவர்களும் ஒருவர் . குறிப்பாக எதையும் கருப்பு வெள்ளையாக மட்டுமே பார்க்க இயன்ற எளிய மார்க்சிய கோட்பாட்டாளர் அல்ல . இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்.  இவரது சமீபத்திய நூல் , இந்திய, தமிழ் நில சமூக உருவாக்கத்தில் தத்துவங்களின் உரையாடல் வழியே நிகழ்ந்த முரண் இயக்கம் மீது மையம் கொண்டது .

na mu

இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் என்ற எனது நூலுக்கான முன்னுரை

இவர் ராஜ் கௌதமன் அவர்களின் ஆய்வுகளை புரிந்து கொள்ள மார்க்சிய கண்ணோட்டத்தில் வைத்து எழுதப்பட்ட   கட்டுரை இது .

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்————இன்றைய கோட்பாட்டு விவாதங்களில் ராஜ் கௌதமன் எழுத்துக்கள்

கடலூர் சீனு

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்
ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்
ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்
சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1
ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2
சிலுவைராஜ் சரித்திரம் பற்றி
ராஜ் கௌதமனின் உலகம்
ராஜ் கௌதமனும் தலித்தியமும்
ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்
ராஜ் கௌதமன் படைப்புக்கள்
ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்
ராஜ்கௌதமனின் இரு நூல்கள்
ராஜ் கௌதமன் -கடிதங்கள்
பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்
ராஜ் கௌதமன் -கடிதங்கள்
முந்தைய கட்டுரைதமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிதைவு -அனிதா அக்னிஹோத்ரி