நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்

சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்
சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்

தன்மீட்சி

இயற்கைக் கடலைமிட்டாய்

செயல்படுவோர் அளிக்கும் மீட்பு

 

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களிடம் இருந்து ஆறு நாட்களுக்கு முன் இருந்து வந்த கடிதத்தை அது வந்த சேர்ந்த சூழலை மறக்க முடியாது.உங்கள் கடிதத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் திரும்ப திரும்ப வாசித்து அதற்கு உண்மையாக இருக்க எங்களை தயார் செய்து கொள்கிறோம்.

ஆகப்பெரிய மனநம்பிக்கையும், செயல்தீவிரமும் பெற்றுக்கொண்டுஉள்ளோம்.கொஞ்சம் பயமும் கூச்சமும் கலந்த மனநிலையாக உள்ளது.இதனை பெரிய உதவியாக நன்றியாக நினைக்கிறோம்.

உங்களின் அத்தனை வாசகர்கள்,நண்பர்கள் தொலைபேசி மற்றும் கடிதத்தின் வழியே தொடர்பு கொண்டு அத்தனை நம்பிக்கையாய்,உற்சாகமாய் பேசினார்கள்.எங்கள் பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டார்கள்.

காந்தி, கல்வி, தன்வழி,யதி அவர்களின் உரையாடல்கள், இன்றைய காந்தியில் வெளிவராத கட்டுரைகள் மற்றும் உங்களின் மிக முக்கியமான மேடை பேச்சுக்களையும் , மிக முக்கியமான கட்டுரைகளை தொகுத்து மிக நல்ல புத்தகமாக கொண்டுவர பெரும் விருப்படுகிறோம்.நம்மாழ்வார் அய்யாவின் புத்தகங்களை ஊர் ஊராய் கொண்டு போய் சேர்த்து அதன் வழியே நாங்கள் பெற்ற மன எழுச்சி மற்றும் நண்பர்களின் எண்ணிக்கையும் பெரியது.

சிவராஜ் அண்ணனின் தீராத விருப்பம் தான் இந்த தும்பி சிறுவர் மாத இதழ்.மிகப்பெரிய பொருளாதாதர நெருக்கடிகளையும் தாண்டி தும்பி சிறுவர் மாத இதழலில் 18 புத்தகங்களை கொண்டு வந்துள்ளோம்.குக்கூ காட்டுப்பள்ளியின் வளர்ப்பான பிரகாஷ் அவர்களின் ஓவியத்தில் உருவான 18வது இதழ் மிக முக்கிய முயற்சியாக உணர்கிறோம்.இதன் ஆசிரியர் சிவராஜ் அண்ணன், நேசன் மற்றும் சுயம்பு செல்வி மொழிபெயர்ப்பாளர்கள் .இதழ் வடிவமைப்பு சங்கர் அண்ணன் மற்றும் தியாகு அண்ணன்.

அன்றைய உரையாடலில் நீங்கள் எங்கள் கண்களை நோக்கி இந்த தொழில்களில் எல்லாம் பணம் வருகிறதா என கறாராக கேட்டது போலவே “யாதும்” பழனியப்பன் எனும் அண்ணன் பெரும் செயல் செய்து எங்களை எல்லாம் பொருளாதாரமாக நல்வழியில் நடத்துவதுடன் தும்பியினை பலதரப்பட்ட மக்களிடமும் கொண்டுபோயும் சேர்த்து உள்ளார்.
https://www.facebook.com/thumbi4children/

About

குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் பதிப்பகம் 7 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.காந்தி,விநோபா,குமரப்பா,நம்மாழ்வார் என நாங்கள் கைபிடித்து நடக்கும் ஆன்மாக்களின் சொற்கைளை புத்தகமாக கொண்டு வந்துள்ளோம்.

Home

சிரட்டை சிற்பி ஆனந்த பெருமாள் அண்ணா சிரட்டைகளை கொண்டு கலை பொருட்கள்,அன்றாட உபயோகப் பொருட்களை செய்வதுடன்,இயற்கை பொருட்களை கொண்டேன் அரங்க வடிவமைப்பு செய்கின்றார்.மிக முக்கியமாக புத்தக கண்காட்சியின் அரங்குகள் ,திருமண மேடைகள் மற்றும் அங்காடிகளின் உள்கட்ட வடிவமைப்பை உருவாக்கிக்
கொடுக்கிறார். https://m.facebook.com/kavingallery/

யானை டாக்டர் கதையின் ஒரு காட்சியினை சிரட்டை சிற்பமாக செய்து சட்டகம் ஒன்றை உங்களிடம் பரிசளிக்க சொல்லி கொடுத்திருந்தார்.அதனை உங்களுக்கு கூரியரில் அனுப்பி உள்ளோம் .

நம்பிக்கையின் வழி,கைநெசவும் தனிவழியும்,செயல்படுவோர் அளிக்கும் நம்பிக்கை இந்த மூன்று கடிதங்கள் எங்களை நெக்குறுக செய்கின்றது.குக்கூ காட்டுப்பள்ளி நிலத்தில் உங்களுக்காவும் உங்கள் குடும்பத்தாருக்காகவும் ஒரு மரக்கன்றினை பிராத்தனையுடன் நட்டுள்ளோம்.

Home

நிச்சயம் டிசம்பர் 22,23 கோவையில் நடக்க இருக்கும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வில் நண்பர்கள் அனைவருடனும் கலந்து கொண்டு ஸ்டால் போடுகிறோம். நிகழ்விற்கு எங்களால் இயன்ற அளவு வேலைகளும் செய்கிறோம்..
உங்கள் அன்பிற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி.

ஸ்டாலின்

 

சிவகுருநாதந் குக்கூ சிவராஜ்
சிவகுருநாதந் குக்கூ சிவராஜ்

அன்புள்ள ஸ்டாலின்

வரும் 19 ஆம் தேதி சென்னிமலைக்குச் சென்று சிவகுருநாதனைப் பார்க்கலாம் என்று கிருஷ்ணனும் ஈரோட்டு நண்பர்களும் சொல்கிறார்கள்.

கெட்டவிஷயங்களுக்கு மட்டுமல்ல, நல்லவற்றுக்கும் ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10
அடுத்த கட்டுரைபுல்வெளிதேச மானுடர்