குழந்தையிலக்கியம் – தொகுப்பு

bed
குழந்தையிலக்கியம் பட்டியல்கள்
குழந்தையிலக்கியம் – கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நமலறிய ஆவல். குழந்தை இலக்கியம் குறித்த கடிதங்களை தங்கள் தளத்தில் காண்பதற்கு பெரும்மகிழ்ச்சியாக உள்ளது. சிறார் இலக்கியம் என்று வகைமை தொடர்ச்சியாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கவே செய்கின்றது. சமீப வருடங்களில் அதற்கான வெளிச்சம் கூடிக்கெண்டே போவது கண்டு மகிழ்ச்சி. ஆனாலும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் ஏராளம். குழந்தைகளை வாசிக்க வைத்தல், எழுத்தாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள், குழந்தைகளை எழுத வைத்தல். குழந்தைகளுக்கான ஓவியர்களை உருவாக்குதல், அரசிடம் சிறார் புத்தகங்களுக்கான சலுகைகள், நூலக ஆர்டர்கள், புக் மேக்கிங்கில் முன்னேற்றம், இன்னும் ஏராளம்.

தமிழில் வெளிவரும் குழந்தைகளுக்கான இதழ்களை கீழே தொகுத்துள்ளேன். இதில் சில இதழ்கள் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பரவலான கவனத்தை பெற்றால் மேலும் உற்சாகம் கொள்வார்கள்.

https://vizhiyan.wordpress.com/childrens-magazines-in-tamil/

கடந்த வருடம் நானும் விஷ்ணுபுரம் சரவணனும் தமிழில் தற்சமயம் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களை பட்டியலிட்டோம்.

https://vizhiyan.wordpress.com/2016/04/28/contemporary-tamil-children-writers/

சமகாலத்தில் வெகுவாக மாணவர்களிடையே சென்றடையும் புத்தகங்களை ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ பதிப்பித்து வருகின்றது. அதே போலவே மணிகண்டன் துவங்கியுள்ள ‘வானம்’ பதிப்பகமும் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

விரைவில் வயதுவாரியான நூல்களின் அட்டவணையை தயாரித்து அனுப்புகிறோம்.

அன்புடன்

விழியன்

***

ஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44
அடுத்த கட்டுரைகடைசிமுகம் -கடிதம்