சி.வி -50

cv

மலையாள எழுத்தாளர்களில் எம்.டி.வாசுதேவன் நாயர், டி.பத்மநாபன், ஸகரியா தலைமுறைக்குப்பின்னர் வந்த அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் முக்கியமானவர் சி.வி.பாலகிருஷ்ணன். மென்மையான உணர்வுநிலைகளை எழுதியவர். புனைவியல்புகளால் வண்ணதாசனுடன் பெருமளவுக்கு ஒப்பிடத்தக்கவர். ஆயுஸிண்டே புஸ்தகம் அவருடைய முக்கியமான நாவல்.

தன் பதினான்காவது வயதில் சி.வி எழுதவந்தார். இப்போது அவருடைய எழுத்துவாழ்வின் ஐம்பதாவது ஆண்டு. அதை அவருடைய சொந்த ஊரான காஞ்ஞாங்காட்டில் இரண்டுநாள் விழாவாக நடத்துகிறார்கள். இரண்டுநாளிலும் காலைமுதல் இரவு வரை இலக்கியநிகழ்வுகள். முதல்நாள் துவக்க விழா, பகலில் இரு கருத்தரங்குகள். மாலையில் கலைநிகழ்ச்சிகள். மறுநாள் இரண்டு கருத்தரங்குகள். மாலையில் நிறைவுவிழா. ஏறத்தாழ நூறு படைப்பாளிகள் அவரைப்பற்றி பேசுகிறார்கள் வடகேரளத்தின் பெரும்பாலும் அத்தனை கலாச்சார , அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்கிறார்கள்

cv1cv2

ஆகஸ்ட் 29,30 தேதிகளில் விழா நிகழ்கிறது. முப்பதாம் தேதி மாலை நிகழும் நிறைவுவிழாவை நான் தொடங்கிவைத்துப் பேசுகிறேன். சி.வி அவருடைய ஊரின் ஓர் அடையாளம். அதை அவர்களும் அறிந்திருப்பது நிறைவளிக்கிறது.

***

முந்தைய கட்டுரைஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97