அன்புள்ள ஜெயமோகன், எனது முந்தைய தன்னறம் பற்றிய கடிதத்திற்கு பதில் வரும் என்று எதிர் பார்த்தேன். உங்கள் பயணங்கள் மற்றும் இதர அலுவல்களின் நடுவே இது போன்ற அச்சு பிச்சு கேள்விகளுக்கு பதில் எதிர்பார்ப்பது தவறு தான். ஆனாலும், முயற்சியில் மனம் தளராமல் இன்னும் இரண்டு கேள்விகள் :-) இன்று உங்கள் வலைத்தளத்தில் ஒரு பழைய கட்டுரை படித்தேன். நீங்கள் உங்கள் சிறு வயதில் கதகளி பார்க்கப் போவது பற்றியது. இதே போன்று நான் கர்நாடக இசை …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35646
மத்தகம்-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம் மத்தகம் நான் இதுவரை படித்த உங்களின் படைப்புகளில் குருரமான படைப்பு என்று சொல்வேன் .யானையை விட மனிதனின் குருரம்தான் நான் கண்டது. ஆனால் அதன் முடிவை என்னால் முழுவதுமாக உள்வாங்க முடியவில்லை. அதிகாரம் என்ற ஒரு சொல்லை யானையின் மத்தகத்தின் மீது பொருத்திப் பார்த்தால் இந்த நாவல் தெளிவடைகிறது ,ஆனால் பரமனிடம் கேசவன் சரணடையும் பொழுது இந்த அதிகாரம் கொலை செய்பவருக்கும் , திருடனுக்கும் மட்டும்தானா என்ற எண்ணம் வலுவடைகிறது . ஒரு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35917
இந்திய ஆங்கில இலக்கியம்
அன்புள்ள ஜெ இந்திய ஆங்கிலப் படைப்புகள் குறித்து…. இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு பொதுப்போக்கை அவதானித்திருக்கிறேன். ஆங்கிலப் படைப்புகள் அதிகம் விற்பனையாகின்றன, வாசிக்கப்படுகின்றன (இதன் சாட்சி – பெருநகர வணிக வளாகங்களில் புத்தகக் கடைகளும், விமான நிலயத்தில் பலர் படித்துக் (பிடித்து)கொண்டிருக்கும் புத்தகங்கள்!!!) . இதில் marketingன் பங்கும் உண்டு. சில காலமாய் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களும் உருவாகி வருகிறார்கள். இவர்களில் பலர் வெளி நாட்டில் வாழுபவர்கள் மற்றும் அந்த marketக்குக்காக எழுதுபவர்கள். இவர்களை ஒரு விதமாக …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35429
ரப்பர்-கடிதம்
வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார். சமீபத்தில் நான் படித்து முடித்த மூன்று புத்தகங்களில் உங்கள் ரப்பர் நாவலும் ஒன்று. மிகமும் கவனமாகப் படிக்க வேண்டிய தருணம் இந்தப் புத்தகத்தில் நிறையவே இருந்தது. அதே மாதிரி வட்டாரத் தமிழில் சில முக்கியமான வாக்கியங்களும் வருவதால் என் போன்ற மதுரையை சார்ந்தவர்கள் சற்றுப் பின்வாங்க வேண்டிய இடமும் இந்த நாவலில் உண்டு. நிறைய இடங்களை நான் மறுபடி மறுபடி படித்துக் கொண்டே இருந்தேன். திரும்பத் திரும்பப் படித்த பிறகும் கூட பிரான்சிஸ் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35158
சடங்கும் அறிவும்
அன்புள்ள ஜெயமோகன், நல்ல பதிவு. சடங்குகள் கூடிய வழிபாடு என்று எதுவும் தினசரி வாழ்வில் இல்லை. விளக்கேற்றிப் பூ வைப்பது தவிர. நல்ல வாசனையான பூவும், பளிச்சென்று இருக்கும் விளக்கில் ஏற்றும் தீபமே ‘சித்திரை பிறக்கும்போது தொங்கவிடும் நெற்கதிரும், கொன்றைமலர் செண்டும் போல் நிறைவு தருகிறது. பண்டிகைகள் பொறுத்த மட்டில் ritualistic காரணங்களைக் காட்டிலும் அவை நம்மை நம் பண்பாட்டுடன் இணைக்கும் கண்ணிகளாக நினைத்துக் கொண்டாடுகிறேன். குறிப்பாகப் பொங்கல். ஆனால் நேர்த்திக் கடன்கள், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள், …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36631
சினிமா விமர்சனங்கள்
அன்புள்ள ஜெமோ Tree of life பற்றி எழுதியிருந்தீர்கள். இந்த இணைப்பைப் பாருங்கள். நம்மவர் உலகசினிமா பார்க்கும் லட்சணத்தை விமர்சனம் எழுதும் கேவலத்தைப் பார்த்து நொந்துபோவீர்கள் http://cinemajz.blogspot.in/2012/02/tree-of-life-2011.html சரவணன் அன்புள்ள சரவணன், ஒரு கலைவடிவம் என்பது ஒரு பண்பாட்டில் இருந்து ஊறிவரக்கூடியது. அந்தப்பண்பாட்டைப்பற்றிய பொது அறிதல் இல்லாமல் அந்தக் கலைவடிவத்தை ரசிக்க முடியாது. தமிழ்ப்பண்பாடு பற்றிய அறிதலே இல்லாமல் பரதநாட்டிய நிகழ்ச்சியை ரசிக்கமுடியுமா என்ன? ஒரு கலையை ரசிக்க அந்தக் கலை உருவான பண்பாட்டைப் பிறகலைகள் இலக்கியங்கள் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36651
சோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் பெற்றோரும் கல்வியும் கேள்வி-பதிலைப் படித்தேன். கல்விமுறைகளை இருவகைகளாக வேறுபடுத்தி ஆளுமை வளர்ச்சி சார்ந்த கல்வி முறை பற்றிப் பேசுகையில் அதை மேம்படுத்த வழிமுறை தருவீர்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். லட்சத்தில் இருவர் என்ற விகிதத்தில்தான் கலை ஆளுமை சார்ந்த கல்வி தேவைப்படுகிறது; அதற்காகத் தற்போதைய கல்வி முறையை மாற்றவேண்டாம் என்ற விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த மட்டில் கல்வியைத் தன்னிறைவுக்கான கல்வி, மனித வளர்ச்சிக்கான கல்வி என்று பிரிக்கலாம். தன்னிறைவுக்கான …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36619
கடிதங்கள்
ஜெ, வணக்கம். நான் என்ன வாசித்தாலும் எல்லாம் மறந்து விடுகிறது. உண்மையிலேயே மறந்து விடுகிறதா இல்லை மறந்து விடுவது போல தோணுகிறதா என்று தெரியவில்லை. அதுபோல சில வரிகளை வாசித்தவுடன் மீண்டும் திரும்ப திரும்ப வாசித்தால்தான் புரிகிறது. இது கவனக் குறைவினாலா இல்லை வாசிப்பதில் அனுபவம் இல்லாமையைக் காட்டுகிறதா? இது போன்று நீங்கள் யாரிடமாவது கண்டு இருக்கிறீர்களா அல்லது உங்கள் வாசகர் யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறீர்களா? இல்லை ஒருவேளை இது எனக்கு மட்டும் உள்ள குறைபாடா? …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35641
வாழ்க்கைமரம்
இரண்டுவாரங்களுக்கு முன்பு அஜிதன் என்னிடம் நான் ஒரு படத்தைப்பார்த்தாகவேண்டுமென்று சொன்னான். அவனுடைய நோக்கில் அவன் பார்த்த படங்களில் அதுவே தலைசிறந்தது. நான் அவனை நான் இதுவரை சந்தித்த மிக நுண்ணுணர்வுள்ள மனிதர்களில் ஒருவனாக நினைப்பவன். ஆகவே அந்தப்படத்தைப்பார்க்க முடிவுசெய்தேன். அஜிதன் அதைக் குறுந்தகடாக பெங்களூரில் இருந்து கொண்டுவந்திருந்தான். ‘அப்பா, நான் படத்தைப்பத்தி ஒண்ணுமே பேசலை. சிலசமயம் மட்டும்தான் ஒரு கலை அதோட சரியான சாத்தியங்களைக் கண்டுபிடிக்கும்னு நினைக்கிறேன். இது அந்தமாதிரி ஒரு படைப்பு’ என்றார் டெரன்ஸ் மாலிக் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36636
கடிதங்கள்
அன்புள்ள ஜெ, இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம் எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு சுயநலம் இருந்தது. அடிப்படையில் தயக்க குணமும் பயந்த சுபாவமும் கொண்டவன் நான்.ஓரளவிற்கு நானாக முயன்று என் குணத்தை மாற்றிக் கொண்டேன்,இருந்தும் பயம். ஜெமோ, உங்களுடைய “வெல்லண்ட் கால்வாய்” பத்தியைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சுவாரசியமான தகவல், ஒரு 14 வயது …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35536

